சுவையான புதினா துவையலை ஒருமுறை இப்படி அரைத்து பாருங்கள்! 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போக வாய்ப்பே இல்லை.

pudhina-thuvaiyal

தேங்காய் வைக்காமல், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய, நாவிற்கு சுவையை தரக்கூடிய, 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் புதினா துவையல் எப்படி அரைப்பது என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் சாதத்தில் துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும், அல்லது சாப்பாட்டிற்கு சைட் டிஷ் ஆகவும் இதை தொட்டுக்கொள்ளலாம். இட்லி தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். இப்படிப்பட்ட சட்னியை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

puthina

புதினா துவையல் அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 5, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 4 பல் தோல் உரித்தது, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், புதினா இரண்டு கைப்பிடி அளவு. சிறிய கட்டு புதினாவாக இருந்தால், அந்த புதினாவை அப்படியே ஒவ்வொரு இலைகளாக எடுத்து, கழுவி துவையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, உளுந்து சேர்த்து, உளுந்து அரை பாகம் அளவு சிவந்தவுடன் வர மிளகாய், இஞ்சி, பூண்டு, புளி, இவைகள் அனைத்தையும் சேர்த்து உளுந்து சிவக்கும் வரை வதக்க வேண்டும். இறுதியாக 1/4 ஸ்பூன் அளவு பெருங்காயத்தை சேர்த்து இதை ஒரு தட்டில் மாற்றி அப்படியே ஆற வைத்துவிடுங்கள். (இந்தத் துவையலுக்கு புளிப்பும் காரமும் ஒருபடி தூக்கலாக தான் இருக்க வேண்டும்.)

pudhina-thuvaiyal2

அதன் பின்பு அதே கடாயில் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, கழுவிய புதினா இலைகளை கடாயில் சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். புதினா ஒரு நிமிடம் வரை தான் வதங்க வேண்டும். அவ்வளவு தான். தவிர கருப்பு நிறம் வரும் அளவிற்கு வதக்கி விடாதீர்கள். புதினா பச்சை நிறத்திலேயே தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக, மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முதலில் வறுத்த உளுத்தம்பருப்பு மற்ற மசாலா பொருட்களை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றாமல் 80% கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வதக்கி வைத்திருக்கும் புதினா இலைகளை சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்தில் அரைத்துக் கொண்டால் போதும். துவையல் மொழு மொழுவென்று அரைந்து இருக்கக் கூடாது. 90% துவையல் அரைந்தால் மட்டுமே சுவை கூடுதலாக கிடைக்கும்.

pudhina-thuvaiyal1

இந்தத் துவையலை எடுத்து ஒரு காற்றுப்புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து விடுங்கள். 10 நாட்கள் வரை கெட்டுப் போவதற்கும் வாய்ப்பே கிடையாது. மிக்ஸி ஜாரில் அரைத்த சூடு கொஞ்சமாக ஆறிய பின்பு ஸ்டோர் செஞ்சி வெச்சுக்கோங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் இந்தப் துவையலை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
பிக்மென்டேஷன் என்று சொல்லப்படும் முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை வெறும் 7 நாட்களில் மிக மிக சுலபமாக நீக்கிவிட முடியும். இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.