வெளிநாட்டு மைதானங்களில் இந்தியா வெற்றி பெற இதுவே வழி – ரிச்சர்ட்ஸ் கணிப்பு

richards

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை 443 அணி டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பாக புஜாரா 106 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 63 ரன்களை தனது பங்கிற்கு சேர்த்தார். கேப்டன் கோலி 82 ரன்கள் குவித்தார்.

team 1

இந்நிலையில் மேற்கு இந்தியத்தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் இந்திய அணியின் வெளிநாட்டு தொடர்கள் குறித்து அவரது கருத்தினை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி அனைத்து வெளிநாட்டு மைதானங்களில் வெற்றி பெற முழுத்தகுதி கொண்ட அணியாகவே நானா கருதுகிறேன். இப்போது நடக்கும் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர்கள் வெற்றி கொண்டாட்டத்தினை தொடர்வார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு ஆரோக்யமானதே. ஒரு சில சமயம் அது அணிக்கு வெற்றியை தேடி தரும். மேலும் இதற்கு முன்னர் இந்திய டெஸ்ட் போட்டிகளில் 3 வீரர்கள் வரை ஸ்பின்னர்கள் களமிறங்குவார்கள். ஆனால், தற்போது அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கி வருகிறது . இந்த யுக்தியின் மூலம் நிச்சயம் இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் வெற்றி பெரும் என்றே நான் கருதுகிறேன் என்று விவியன் ரிச்சர்ஸ் தெரிவித்தார்.

team

தற்போது மூன்றாவது நாளான இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அணைத்து விக்கட்டுகளையும் பறிகொடுத்து சரிவை சந்தித்துள்ளது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.இந்திய அணி 292 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி விளையாடி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

ரோஹித்தை இதற்காக தான் சீண்டினோம் – ஆரோன் பின்ச் விளக்கம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்