விஹாரி அவுட் இல்லை என்று தெரிந்தும் கொண்டாடிவிட்டோம் – டிம் பெயின்

paine
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல நாள் முடிவில் 303 ரன்களை குவித்தது. நேற்றைய தினத்தினை போன்றே இரண்டாவது நாளும் இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேகரித்தனர்.

vihari

அப்போது லயன் பந்து வீச வந்தார். அதனை எதிர்கொண்ட விஹாரி ஸ்வீப் ஷாட் அதனை அதில் எட்ஜ் ஆக அம்பயர் விஹாரி அவுட் என்று அறிவித்தார். இருந்தாலும் விக்கெட் சரியாக விழுந்ததா என்று பெரிய திரையில் மூன்றாவது அம்பயரால் பார்க்கப்பட்டது. பிறகு, மீண்டும் அவுட் கொடுக்கப்பட்டு விஹாரி வெளியேறினார். ஆனால், இது தவறாக அளிக்கப்பட்ட விக்கெட் என்பது நாம் அனைவர்க்கும் வீடியோ மூலம் தெரியவந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பெயின் இந்த விக்கெட் குறித்த விளக்கம் அளித்துள்ளார் : 102 வது ஓவரை லயன் வீசீனார் அப்போது விஹாரி ஸ்வீப் ஷாட் ஆடினார். உடனே அருகில் இருந்த மார்ன்ஸ் அதை கேட்ச் பிடித்து கொண்டாடினார் அதனால் நானும் உறுதியாக விக்கெட் விழுந்தது என்று கொண்டாடினேன். மேலும் ஸ்டம்ப்க்கு பின்னால் இருப்பதால் பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை என்னால் சரியாக கணிக்க முடியவில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது. ஒரு அணி விளையாட்டினை நேர்மையாக விளையாடவேண்டும். தெரிந்தே தவறு செய்வது குற்றம், குற்றத்தினை செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது தப்பு என்று ஆஸ்திரேலிய அணியை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் – வாஹன் புகழாரம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -