உங்க முகம் தங்க போல ஜொலிக்க நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஒரு பொருள் போதும். பார்லர் செல்லாமலே முகம் மின்னும். மணப் பெண்களுக்கான பேசியல் பேக்.

- Advertisement -

இப்போதெல்லாம் நம் வீட்டு விஷேசமானாலும் சரி, அல்லது ஏதாவது விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் சரி, முதலில் ஞாபகத்திற்கு வருவது பியூட்டி பார்லர்கள் தான். அதுவும் திருமணம் போன்ற பெரிய பங்க்ஷன் என்றால் கட்டாயமாக பியூட்டி பார்லர் சென்று அழகு படுத்திக் கொள்வது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது. இந்த பேக்கை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். திருமணம் ஆகும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் போகாமல் ஜொலிக்க தொடங்கலாம் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நம் பழங்காலங்களில் எல்லாம் திருமணம் நிச்சயக்கப்பட்ட உடன் பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் வீட்டில் நலுங்கு மாவு அரைத்து தினமும் தேய்த்து விடுவார். சிலர் இதை ஒரு விசேஷமாகவே செய்பவர்கள். இப்படி செய்வதனால் அவர்களின் முகம் மிருதுவாகி அவர்கள் மேனி தங்கம் போல ஜொலிக்க தொடங்கி விடும். இப்போதுள்ள சூழ்நிலையில் அதைப் போல நலங்கு மாவு எல்லாம் அரைத்து தினமும் தேய்த்து குளிப்பதெல்லாம் முடியாத காரியம். நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி வீட்டிலே பேக் தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் இது போன்ற விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் சரி ஒரு வாரத்திற்கு முன்பு இந்த பேக்கை போட்டால் போதும், உங்கள் முகம் உடல் முழுவதும் கூட இதையே பூசலாம். மேனி முழுவதும் பிரகாசமாக ஜொலிக்கும்.

- Advertisement -

இந்த பேக் தயாரிக்க நமக்கு தேவை மஞ்சிஷ்டா (இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இது நம் நிறத்தை பல மடங்கு கூட்டி கொடுக்கக் கூடிய பொருள். இந்த மஞ்சிஷ்டா கடைகளில் பவுடராகவும், கிழங்காகவும் கிடைக்கும். கிழங்காக கிடைத்தால் நீங்கள் அதை வாங்கி நல்ல பைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்  கொரகொரப்பாக இருக்க கூடாது.

மஞ்சிஷ்டா பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். இத்துடன் அரை டீஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இந்த தேனானது எப்போதுமே முகத்தில் ஒரு நல்ல மாஸ்டரைசராக பயன்படும் அதுமட்டும் இன்றி முகத்தில் இளமை தோற்றத்தை எப்போதும் தக்க வைத்து கொடுக்கக் கூடிய அற்புதமான பொருள். இத்துடன்  கஸ்தூரி மஞ்சள் சேர்க்க சேர்க்க வேண்டும். இதுவும் அந்த காலம் முதல் பயன்படுத்தி வரும் அழகு பொருள் தான். எந்த வித அழகு சாதனமும் இல்லாத காலத்தில் இருந்தே இந்த மஞ்சளை தான் நாம் அழகுக்காக பயன்படுத்தி வருகிறோம்.

- Advertisement -

மஞ்சிஷ்டா ஒரு ஸ்பூன், தேன், அரை ஸ்பூன், மஞ்சள் அரை ஸ்பூன் இது மூன்றையும் நல்ல பேஸ் பதத்திற்கு கலந்து உங்கள் முகம் கை கால்களில் தேய்த்து காய்ந்தவுடன் சுத்தமான தண்ணீர் வைத்து துடைத்து விடுங்கள். நீங்கள் அடுத்த வாரம் விசேஷத்திற்கு தயாராக வேண்டுமென்றால், இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து இதை போட்டு விடுங்கள் அதுவே போதும் உங்கள் முகம் அவ்வளவு பிரகாசமாக ஜொலிக்கும்.

மணப்பெண் காண மேக்கப் போட வேண்டும் என்றால், அதிக பணம் செலவழித்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை போல எளிமையான முறையில் நாம் நிறத்தை கூட்டிக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: எண்ணையில் பால் சேர்த்து குளித்தால் முடி உதிர்வை தடுத்து விடலாம். என்ன! எண்ணையில் பாலை சேர்க்கனும்மா? ஆமாங்க பாலை இந்த முறையில் பயன்படுத்தி மட்டும் பாருங்க உங்க முடி எப்படி சர சரன்னு வளருதுன்னு.

இந்த பேக்கை போட்ட பிறகு நீங்கள் பங்ஷன் போனால் மணப்பெண்ணுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு ஜொலிக்க ஆரம்பிச்சிடுவீங்க.

- Advertisement -