ரோஜா துளிர்கள் கருகி, மொட்டுக்கள் உதிர்ந்து விடுகின்றனவா? இந்த உரத்தை கொடுத்து பாருங்க இனி ஒரு மொட்டு கூட செடியிலிருந்து உதிராது!

- Advertisement -

ரோஜா செடியை வாங்கி வைத்திருப்பவர்கள் அதை முறையாக பராமரிக்காவிட்டால் பூக்கள் பூப்பதில் தடைகள் ஏற்படும். நாளடைவில் ஒவ்வொரு இலைகளாக உதிர்ந்து, காய்ந்து பட்டுப் போய்விடும் அபாயமும் உண்டு. எனவே ரோஜா செடிக்கு தேவையான சத்துக்கள் கொண்டுள்ள உரத்தை பத்து பைசா செலவில்லாமல், நர்சரிகளில் காசு கொடுத்து வாங்காமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி பராமரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

பொதுவாக ரோஜா செடியை வளர்ப்பவர்களுக்கு இரண்டு விதமான இயற்கை உரங்கள் கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். இது நம் அன்றாட உணவில் பயன்படுத்த கூடிய பொருட்கள் ஆகும். பயன்படுத்திவிட்டு தேவையில்லை என்று தூக்கி எறியும் இந்த பொருட்களை தினமும் ரோஜா செடிக்கு உரமாக கொடுத்து வந்தால் அது பாதிப்புகள் எதுவும் இல்லாமல் தானாகவே நன்கு வளரத் துவங்கும். அதில் பூச்சி தொந்தரவுகள் அல்லது வெயிலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டால் சத்து குறைபாடு உண்டாகும். இதனால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் சற்று அதிகப்படுத்த வேண்டும்.

- Advertisement -

ரோஜா செடிக்கு முட்டை ஓட்டினை காய வைத்து அதை பவுடர் செய்து வைத்துக் கொண்டால் தினமும் ஒரு ஸ்பூன் வீதம் கொடுத்து வந்தால் போதும் செடிகள் செழித்து வளரத் துவங்கும். முட்டை ஓட்டினை அப்படியே போட்டால் அதில் துர் நாற்றம் எழ ஆரம்பிக்கும். எனவே அதை நன்கு கழுவி காய வைத்து பின்னர் மிக்ஸியில் போட்டு பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள். முட்டை ஓட்டினை மிக்ஸியில் போடுவதால் மிக்ஸியினுடைய பிளேடு மழுங்கிப் போய் இருந்தாலும், அது கூர்மை அடையும். அதே போல டீ தூள் போன்றவற்றையும் நன்கு காய வைத்து பின்னர் பயன்படுத்துங்கள். அதை அப்படியே பயன்படுத்துவதால் அதில் இருக்கும் சர்க்கரை எரும்பு மற்றும் பூச்சிகளை வர வைத்துவிடும்.

ரோஜா செடியில் துளிர்கள் முளைத்து காய்ந்து போய் விடுகிறது அல்லது துளிர்களில் பூக்கும் ஒவ்வொரு பூக்களும் மொட்டுகளாக இருக்கும் பொழுதே உதிர்ந்து விடுகிறது, பூக்கள் மலர்வது இல்லை என்ற பிரச்சனை உங்கள் ரோஜா செடிக்கு இருந்தால் நீங்கள் அதற்கு தேவையான சத்துக்களை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் போன்றவை நிறைந்திருக்கும் உரத்தைக் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வுரங்களை காசு கொடுத்து வெளியில் வாங்காமல் நம் வீட்டில் இருக்கும் புளி கொட்டையை பயன்படுத்தி தயாரிக்க முடியும். ஒரு கைப்பிடி நிறைய புளி கொட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சமைக்க புலியை நீங்கள் பயன்படுத்தும் பொழுது கொட்டைகளை சேகரித்துக் கொண்டே வந்தால் இந்த பவுடரை தயாரிக்க பயன்படும். உங்களிடம் இருக்கும் புளி கொட்டைகளை வெறும் வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு லேசாக உரல் அல்லது அம்மிக்கல் போன்றவற்றை வைத்து தேய்த்தால் விதைகள் தனியாகவும், அதன் தோல் பகுதிகள் தனியாகவும் பிரிந்து வந்துவிடும். இந்த விதைகளை ஊற வைத்து அப்படியே நீங்கள் சாப்பிடலாம்.

நன்கு ஊறிய தோல் நீக்கிய புளி கொட்டைகள் உடல் ஆரோக்கியத்தை வலுப்பெறச் செய்யும். மீதமிருக்கும் தோல் பகுதியை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை ஒரு ஸ்பூன் வீதம் உங்களுடைய ரோஜா செடியின் வேர்களை சுற்றிலும் போட்டு நன்கு கிளறி விடுங்கள். பிறகு நீங்கள் புளி கொட்டைகளை ஊற வைத்த தண்ணீரையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். புளி கொட்டையில் மேற்கூறிய பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், அயர்ன் போன்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது எனவே தேவையில்லை என்று தூக்கி எறியும் இந்த புளி கொட்டையை இனி இப்படி பயன்படுத்தி ரோஜா செடியை செழித்து வளரச் செய்து விடுங்கள்.

- Advertisement -