சுவையான புளி சாதம், சுலபமாக செய்வது எப்படி? கோவிலில் கொடுக்கும் புளியோதரை போலவே இதன் சுவை சூப்பரா இருக்கும்.

pulisadam

நம்முடைய வீட்டில் சாதம் குழம்பை கூட சுலபமாக செய்து விட முடியும். ஆனால், பக்குவமான முறையில் புளி சாதம் செய்வது என்றால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். நம்முடைய வீட்டில் எப்படித்தான் புளிசாதம் செய்தாலும், கோவிலில் கொடுக்கும் அளவிற்கு அந்த புளி சாதம் சுவையாக இல்லை என்ற குறை கட்டாயம் இருக்கும். கோவிலில் செய்யக்கூடிய அந்த புளி சாதத்தை, அதே பக்கத்தில் நம்முடைய வீடுகளில் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

masala

Step 1:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, எள்ளு – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் அரைத்த இந்தப் பொடியை, காற்றுப்புகாத கண்ணாடி பாட்டலில் போட்டு வைத்துக் கொண்டால், எப்போதெல்லாம் புளிசாதம் செய்கிறீர்களோ அப்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

masala-podi

Step 2:
ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து புளிக்கரைசலை கொஞ்சம் தண்ணீர் பதத்தில் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சாதத்தில் கொஞ்சமாக உப்பு சேர்த்து, குழையாத பக்குவத்தில் வடித்து ஆற வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

Step 3:
ஒரு கடாயில் 1/4 கப் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, 1 – ஸ்பூன் கடுகு, 1 – டேபிள் ஸ்பூன் உளுந்து, 1 – டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 6 – வர மிளகாய் (இரண்டாக கிள்ளியது), கறிவேப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு கைப்பிடி, இவைகளைப் போட்டு சிவக்க வறுக்க வேண்டும்.

pulli-thokku

அடுத்தபடியாக கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை கடாயில் ஊற்றி, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். புளிக்கரைசல் நன்றாக கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். புளியின் பச்சை வாடை, சுத்தமாக நீங்கி, புளிக்கரைசல் சுண்டி அதிலிருக்கும் எண்ணெய் தனியாக பிரிந்து வர வேண்டும். (இந்தத் தூக்கில் எண்ணெயின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் கெடாமல் இருக்கும்.) தொக்கு பக்குவத்தில் வந்ததும் புளி கரைசலை நன்றாக ஆற வைத்து விட்டு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

pulli-sadam

Step 4:
ஏற்கனவே வடித்து ஆற வைத்திருக்கும் சாதத்தில், தேவையான அளவு புளித் தொக்கையும், அரைத்து வைத்திருக்கும் மசாலா பவுடரில், தேவையான அளவு மசாலாவையும் சேர்த்து, சாதத்தோடு கிளறி, பத்து நிமிடங்கள் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையான புளி சாதம் தயார்.

இதையும் படிக்கலாமே
வெறும் 5 ரூபாயில் நீங்கள் எப்படி இருந்தாலும் அழகாகலாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.