புளித்து நுரைத்துப் போன இட்லி, தோசை மாவை இனி கீழே கொட்டாதிங்க! 2 நிமிஷத்துல இப்படி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட புளிப்பே தெரியாது.

idly-maavu-pepper
- Advertisement -

சில சமயங்களில் நாம் இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது அதிகமாக அரைத்து வைத்து விடுவது உண்டு. இப்படி அரைத்து வைக்கும் இட்லி, தோசை மாவு மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை அதிகபட்சம் அவ்வளவாக புளிப்பு இல்லாமல் நன்றாக தான் இருக்கும். ஆனால் அதற்கு பிறகு அதிகம் சில சமயங்களில் புளித்து விடக் கூடும். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளித்து விடும். இப்படி சீக்கிரம் புளித்து விடும் இட்லி, தோசை மாவை வீணாக கீழே கொட்டாமல் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

idly-maavu2

இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவு சீக்கிரம் புளித்து விட்டால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கி போட்டு புளிப்பை ஈர்த்த பின்னர் தோசை வார்ப்பார்கள். ஆனால் அப்படி நீங்கள் செய்தால் கூட ஓரளவுக்கு அந்த புளிப்பு தன்மை மாறுமே தவிர சாப்பிடும் பொழுது கண்டிப்பாக புளிப்பாக தான் இருக்கும். இப்படி இல்லாமல் மொறுமொறுவென்று புதியதாக எப்படி தோசை மாவை மாற்றுவது?

- Advertisement -

இட்லி, தோசை மாவு புளித்து நுரைத்து போயிருக்கும் அந்த கொஞ்ச மாவில் அரை ஸ்பூன் அளவிற்கு மிளகுத் தூள் போட்டுக் கொள்ளுங்கள். கால் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் மிளகு தூள் மற்றும் சர்க்கரை நன்கு கரைந்த பிறகு எப்பொழுதும் போல நீங்கள் தோசை கல்லை சூடுபடுத்தி மெல்லியதாக தோசை வார்த்து பின்னர் மூடி வைத்து வேக விட்டு எடுத்தால் சூப்பரான தோசை ரெடி ஆகிவிடும். ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த தோசை, மாவிலிருந்து அதிக புளிப்பை எடுத்து விடும்.

idly-maavu1

அதே போல புளித்த மாவில் நீங்கள் அன்று அரைத்த புதிதான இட்லி, தோசை மாவை அதிகம் கலந்தால் புதிதாக அரைத்த மாவை அதிகம் புளிக்க விட வேண்டிய அவசியமில்லை. கொஞ்ச நேரத்தில் புளித்த மாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் புதிய மாவை புளிக்க செய்துவிடும். பிறகென்ன உடனே தோசை, இட்லி செய்து புதிதாக பிரஷ்ஷாக சாப்பிட வேண்டியது தானே?

- Advertisement -

இது போல புளித்து நுரைத்த இட்லி மாவுடன் சிறிது ரவையை 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து தோசை வார்த்தாலும் சூப்பரான ஊத்தாப்பம் தயாராகி இருக்கும். இப்படி செய்தாலும் புளித்த மாவை புதிதான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

egg-white

அசைவம் சாப்பிடுபவர்கள் இது போல புளித்த இட்லி, தோசை மாவில் 2 முட்டையை உடைத்து ஊற்றி கொஞ்சம் பச்சை மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை நன்கு பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து தோசை வார்த்தால் இன்னும் சூப்பராக இருக்கும். முட்டையானது தோசை மாவில் இருக்கும் புளிப்பு தன்மையை எளிதாக நீக்கிவிடும். மேலும் முட்டை தோசை போல சுவையையும் கொடுக்கும். எனவே இந்த முறையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

- Advertisement -