புதுசு கண்ணா புதுசு! இனி புளிச்சு போன மாவைக் கீழே கொட்டாதீங்க! 1 நிமிஷத்துல பழைய மாவை, புதுமாவு போல மாற்ற சூப்பர் டிப்ஸ். மிஸ் பண்ணாம தெரிஞ்சு வைச்சுக்கொங்க.

maavu

இன்னைக்கு நாம பாக்க போற டிப்ஸ் நிஜமாகவே ஒரு புதிய டிப்ஸ் தான். நிறைய பேர் புளித்துப் போன மாவை வைத்து பணியாரம் செய்வார்கள். பணியாரம் செய்ய கூட முடியாத அளவிற்கு புளித்துப்போன மாவில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த தண்ணீர் தெளிந்ததும் மேலே தங்கி இருக்கும். தெளிந்த அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, அடியில் இருக்கும் மாவை தோசை சுடுவார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு புத்தம் புதிய சுலபமான டிப்ஸ் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ட்ப்ஸ் வித்தியாசமா இருந்தா, உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும், உங்க வீட்டில நீங்க கட்டாயம் ட்ரை பண்ணி பாக்கணும்.

dosai-maavu

புளித்துப்போன மாவை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 6 தோசை வரும் அளவிற்கு புளித்துப்போன மாவு இருந்தால் அதற்கு நான்கு சில்லு தேங்காய் போதும். தேங்காயின் மேல் தோலை சீவி விட்டு மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து இந்த தேங்காய் விழுதை, புளித்துப்போன தோசை மாவில் ஊற்றி கலந்து எப்போதும்போல தோசை வார்த்தால் தோசை மாவின் புளிப்பு சுத்தமாக நீங்கி விடும். (தேங்காய் துருவல் ஆக இருந்தால் நான்கு ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். துருவலில் அந்த கருப்பு இல்லாத பகுதியாக பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கருப்பு கருப்பாக மாவில் தெரியும்.)

இதுவே உங்களுக்கு தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தேங்காயை அதிகமாக சேர்த்து, தேங்காய் பால் எடுத்து அந்த தேங்காய் பாலில் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து புளித்த மாவில் சேர்த்து தோசை வார்த்தாலும் நன்றாக தான் வரும். இந்த தேங்காயோடு ஒரு கைப்பிடி அளவு பழைய சாதம் இருந்தால் அதை போட்டு மைய அரைத்து அந்த விழுதை தோசை மாவுடன் சேர்த்து தோசை வார்த்துக்கொள்ளலாம்.

எப்போதும் போல தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்த்து இந்த தோசையை சுவைத்துப் பாருங்கள். சாதாரண தோசை மாவில் சுட்ட தோசையின் ருசியை விட, இந்த மாவில் சுட்ட தோசையின் சுவை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

அடுத்தபடியாக இன்னும் 2 புதிய டிப்ஸ் இல்லத்தரசிகளுக்கு மட்டும். நிறைய பேர் கேரட்டை வாங்கி பிரிட்ஜில் கவரில் போட்டு ஸ்டோர் செய்து வைப்போம். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்த பின்பு அந்த கேரட் அழுகிப் போக தொடங்கும். வாங்கிய உடனேயே கேரட்டை காம்புப் பகுதியையும், வால் பகுதியையும் நீக்கிவிட்டு அதன் பின்பு கவரில் போட்டு நன்றாக சுருட்டி உள்ளே காற்று புகாமல் ப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டும். இப்படி செய்தால் கேரட் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். காற்று கவருக்குள் போகும்படி வைத்தால், உள்ளே தண்ணீர் விடத் தொடங்கும். அந்த தண்ணீர் பட்டு எந்த காயாக இருந்தாலும் கெட்டு போய்விடும்.

carrot

அடுத்தபடியாக பாகற்காயை வாங்கி நிறைய பேர் அன்றைக்கே சமைக்க மாட்டார்கள். ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் பாவற்காய் சீக்கிரமே மஞ்சள் நிறத்திற்கு மாறி விடும். ஃப்ரிட்ஜில் வைத்தால் கூட.

pagarkai

பாகற்காயை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் நீக்கிவிட்டு, பாகற்காயை ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி போட்டு, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் பாகற்காய் நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும். இதையும் ட்ரை பண்ணி பாருங்க. தேவைப்படும் போது எடுத்து சமைத்துக் கொள்ளலாம்.