- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு பஞ்சாபி ஸ்டைல் சூப்பரான பச்சைபயிறு கிரேவி

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு பஞ்சாபி ஸ்டைல் சூப்பரான பச்சைபயிறு கிரேவி

- Advertisement -

பச்சை பயிறு கிரேவி | Punjabi Pachchai Payaru Gravy Recipe

எத்தனை நாளைக்கு தான் சாம்பார், சட்னி, குழம்பு என்று சாப்பிடுவது. வித்தியாசமாக ஏதாவது சமைத்து சாப்பிட்டு தான் பார்ப்போமே என்று யோசிக்கும்போது இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். ரொம்ப ரொம்ப உடலுக்கு ஆரோக்கியம் தரும் பச்சை பயிறு வைத்து, அசத்தலான முற்றிலும் வித்தியாசமான, ஒரு கிரேவி ரெசிபியை தான் செய்யப் போகின்றோம். எல்லா வகையான உணவுக்குமே இதை சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். மிக மிக எளிமையான முறையில் ‘பஞ்சாபி ஸ்டைல் பச்சை பயிறு கிரேவி’ ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் 1/2 கப் அளவு பச்சைப்பயிறு, 4 மணி நேரம் தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஊற வைத்த பச்சை பயிறு – 1/2 கப், சின்ன தக்காளி பழம் – 1 நறுக்கியது, நறுக்கிய கத்திரிக்காய் – 2, இந்த 3 பொருட்களையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, குக்கரில் வைத்து 3 விசில் விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த உடன் கத்திரிக்காயை மட்டும் லேசாக மசித்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி தழை – 1/2 கைபிடி அளவு, தோல் உரித்த பூண்டு பல் – 3, இஞ்சி தோல் சீவியது – 1 இன்ச், பச்சை மிளகாய் – 2, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதையும் விழுதாக அரைத்து அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து – 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் – 1/2 ஸ்பூன் சேர்த்து தாளித்து, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை ஊற்றி, தனியாத் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு இந்த விழுதை 2 நிமிடம் வதக்க வேண்டும். லேசாக எண்ணெய் பிரிந்து வரும். அப்போது, குக்கரில் வேக வைத்திருக்கும் பச்சை பயிறை கடாயில் கொட்டி, தேவையான அளவு உப்பு தூள் தூவி, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு மூடி போட்டு இதை அப்படியே ஐந்து நிமிடம் கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

இதற்கு இறுதியாக ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டி வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய் தூள் – 1 ஸ்பூன் போட்டு, கருகவிடாமல் 30 செகண்ட் வரை வறுத்து, இதை அப்படியே குழம்பில் ஊற்றி கலந்து குழம்பை மீண்டும் இரண்டு நிமிடம் போல கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்து, மேலே கொத்தமல்லி தழையை தூவினால் போதும். சூப்பரான கிரேவி தயார். இது முற்றிலும் வித்தியாசமான ரெசிபி, முற்றிலும் வித்தியாசமான சுவையில் கிடைக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும் பத்தே நிமிஷத்துல ரொம்ப சூப்பரான, கிறிஸ்பியான ஈவினிங் டீ டைம் ஸ்நாக்ஸ் ரெடி.

பின்குறிப்பு: பச்சை பயிறைக் குழைய குழைய வேக வைக்கக் கூடாது. அதேசமயம் வேகாமலும் இருக்கக் கூடாது. கத்தரிக்காயை மட்டும் மசித்து கிரேவி செய்யும்போது கூடுதல் சுவை கிடைக்கும்.

சற்று முன்