நீங்கள் செய்யும் நல்ல விஷயத்திற்கு பன்மடங்கு புண்ணியம் சேர சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

soundhariya-lahari-pray
- Advertisement -

ஒருவர் செய்யும் பாவங்களுக்கும், புண்ணியங்களுக்கும் ஏற்ப பலன்களும் இருக்கும் என்பது தான் நியதி. ‘நான் நல்லதே செய்கிறேன் எனக்கு மட்டும் நல்லதே நடக்க மாட்டேன் என்கிறது’. கெட்டது செய்பவர்களுக்கு எல்லாம் நல்லது தானே நடக்கிறது? என்று புலம்புபவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். நான் நல்லது செய்கிறேன் எனக்கு நல்லது தான் நடக்கும் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையிலேயே உங்களுக்கு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே தெரியும்.

செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி ஆனால் அறியாமல் செய்த பாவத்திற்கு உரிய தண்டனைகளை குறைத்துக் கொள்ள பரிகாரங்கள் செய்வது உண்டு. அதே போல நாம் செய்யும் நல்லவைகளும் நமக்கு கர்ம வினையாக தொடரும். கர்ம வினை என்பது கெட்டதை மட்டும் குறிப்பவை அல்ல. கர்மம் என்பது செய்யும் செயல் ஆகும்.

- Advertisement -

நல்லது, கெட்டது இரண்டும் சேர்ந்தது தான் கர்மம். நீங்கள் செய்த நல்ல விஷயங்களுக்கு உரிய பலன்களும் உங்களைப் பின் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அத்தகைய பலன்கள் பன்மடங்கு பெருக செய்யக்கூடிய அற்புத சக்தி வாய்ந்த மந்திரம் சௌந்தர்ய லஹரியில் உள்ளது. அந்த மந்திரம் என்ன? அதன் பொருள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை நோக்கி பயணிப்போம்.

kamatchi-amman9

சௌந்தர்ய லஹரியில் அமைந்திருக்கும் பாடல் எண் 11 இல் நாம் செய்யக்கூடிய நல்ல கர்ம வினைகளுக்கு பலன்களை அள்ளிக் கொடுக்குமாறு மகாலட்சுமி தாயாரிடம் வேண்டி வணங்குவதாக இடம் பெற்றுள்ளது. மகாலட்சுமி தேவி கருணையே வடிவானவள். அவரிடம் நாம் கேட்கும் அனைத்தும் தாயிடம் கேட்பவை போல உடனே கிடைக்கும். சௌந்தர்ய லஹரியில் அமையப் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் மகாலட்சுமி தேவியை போற்றி புகழ்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும், ஒவ்வொரு பொருள் உண்டு.

- Advertisement -

சௌந்தரிய லஹரி 11:
ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை!!!

vishnu-lakshmi1

மேற்கூறிய இப்பாடலில் இடம் பெற்றுள்ள பொருள் அர்த்தம் என்ன? ஈடு இணை இல்லாத சிறந்த பேரழகை கொண்டுள்ள மகாலட்சுமி தாயே! நின் குணங்கள் மதுரம் போன்றதாகும், மகா சக்தியாக விளங்கும் நீர், மகா விஷ்ணுவுக்கு பிரியமானவளாக விளங்குகின்றாயே! கருணைக் கடலாக இருக்கும் மகாலட்சுமி தாயே! நல்ல கர்மவினை பயன்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுப்பவளே! உன் அருள் பெற வணங்குகிறேன் என்பது இப்பாடலின் அர்த்தமாக இருக்கின்றது. இப்பாடலை தினந்தோறும் பூஜை அறையில் உச்சரித்து வருபவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய நல்ல செயல்களுக்குக் கூட பன்மடங்கு புண்ணியம் வந்து சேரும்.

- Advertisement -