மார்கழி மாதத்தில் இவற்றை செய்தால் புண்ணியம் கிடைப்பது உறுதி. இந்த செயல்களால் ஒரு வருட பூஜை செய்த பலன் உங்களுக்கு கிடைக்கிறது

brammamuhoortham
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே குளிர், கிறிஸ்துமஸ், பனிப்பொழிவு, பெருமாள் பஜனை, வாசலில் கோலம் போடுதல் இவைகள் தான் அனைவரின் ஞாபகத்திற்கு வருகின்றவை. இவ்வாறு மார்கழி மாதத்திற்கென்று தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன. இந்த மாதத்தில் புதிய விஷயங்கள் தொடங்குவதை அனைவரும் தவிர்த்து விடுகின்றனர். அதற்காக இந்த மாதம் அதிர்ஷ்டமில்லாத மாதம் என்று எவரும் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மார்கழி மாதத்தில் ஒருசில விஷயங்களை தவறாமல் செய்வதன் மூலம் ஒரு வருட பூஜை செய்த பலனை நம்மால் பெறமுடியும். வீட்டில் உள்ள பெண்கள் செய்ய வேண்டிய மார்கழி மாத செயல்களைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

balaji

மார்கழி மாதத்தில் பெண்கள் கோலம் போடுவது என்பது சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நேரமின்மை காரணமாக இரவு நேரத்திலேயே கோலம் போட்டு விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்வது என்பதை தவிர்க்க வேண்டும். இது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது.

- Advertisement -

மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கோலம் போடுவது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறது. அஷ்ட தேவதைகளையும் நமது வீட்டிற்கு வரவழைக்கிறது. அதுபோல காலை எழுந்ததும் கோலம் போட்டு முடித்து விட்டு, குளித்து முடித்து, பூஜை அறைக்கு சென்று, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.

Kolam

இவ்வாறு செய்வதன் மூலம் இந்த மார்கழி மாத பிரம்ம முகூர்த்தத்தில் நீங்கள் செய்கின்ற ஒரு பூஜை ஒரு வருடம் பூஜை செய்ததற்கான பலனை கொடுக்கிறது. இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் முகத்தை கழுவிக்கொண்டு பூஜை அறையில் ஒரு தீபமாவது ஏற்றி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறையருள் கிடைக்கப் பெறுகிறது.

- Advertisement -

அதுபோல பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க முடியாதவர்கள் சூரியன் உதயமாவதற்கு முன்னராவது எழுந்திருக்க வேண்டும். இந்த மார்கழி முழுவதும் இதனை தொடர்ந்து செய்து வர உங்களின் குடும்பத்திற்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. எப்போதும் நீங்கள் செய்யும் பூஜையை விட இந்த மார்கழி மாதத்தில் நீங்கள் செய்யும் பூஜைக்கு பலன் அதிகமாக இருக்கிறது.

sunrise

அவ்வாறு இந்த மார்கழி மாதத்தில் சூரியன் உதயமான பிறகு தூங்குவது என்பது குடும்பத்தின் லட்சுமி கடாட்சத்தை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதியதாக செடிகள் வாங்கி இந்த மாதத்தில் நட்டு வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் குளிரினால் செடிகள் வளராமல் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே அன்றைய காலத்தில் மார்கழி மாதத்தில் விதை விதைக்காமல் இருப்பார்கள்.

poojai arai

ஆனால் இன்று இருப்பவர்கள் இதனை தவறாக புரிந்து கொண்டு மார்கழி மாதம் என்றாலே, அந்த மாதத்தில் எதனையும் துவங்க கூடாது, இது நல்ல மாதம் அல்ல என்று தவறாக புரிந்து வைத்துள்ளனர். எனவே இந்த மார்கழி மாதம் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய மாதமாகும். முடிந்தவரை தினமும் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று பஜனையில் ஈடுபடவேண்டும். முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று இறைவனை பூஜித்து வரவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் முதலில் நிலைவாசலில் தீபம் ஏற்றி விட்டு பின்னர் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -