புரட்டாசி மாதத்தில் இதை மட்டும் கட்டாயமாக செய்யவே கூடாது. மீறி செய்தால் பித்ரு தோஷத்திற்கு ஆளாகி விடுவோம்.

- Advertisement -

ஒவ்வொரு சுப காரியங்களை செய்வதற்கும் நாள், கிழமைகள் பார்த்து தான் செய்வோம். அதே போல ஒரு சில மாதங்களில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளையும் செய்ய மாட்டார்கள். ஆடி மாதம், மார்கழி மாதம், புரட்டாசி மாதமும் அதில் அடங்கும். பொதுவாக புரட்டாசியில் வீடு பால் காய்ச்சுவது, திருமணம் போன்று பெரிய சுப நிகழ்ச்சிகள் எதையும் நிச்சயமாக செய்யக்கூடாது. இது ஓரளவிற்கு நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த மாதம் சுபகாரியம் செய்யக்கூடாது என பலரும் சொல்லி இருந்தாலும், ஏன் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புரட்டாசி மாதத்தில் தான் பெரிய அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை வரும். ஆகையால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து முதல் பதினைந்து நாட்கள் மகாளய பட்ச நாளாக வரும். அதாவது நாம் வீட்டின் இறந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை இந்த முதல் பதினைந்து நாட்களில் செய்ய வேண்டும். விண்ணுலகில் இருந்து அவர்கள் நம்மை தேடி வந்து நாம் படைக்கும் படையலை உண்டு, நமக்கான ஆசீர்வாதங்களை தரும் நாட்களே இந்த மகாளய பட்சம். இந்த நாட்களில் நாம் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற சுபகாரியங்களை வைத்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணியை நாம் முழுமையாக செய்ய முடியாது. இதனால் நாம் பித்ரு தோஷத்திற்கு ஆளாகி விடுவோம். தீராத துன்பத்தை தரக்கூடிய பித்ரு தோஷத்தில் இருந்து நம்மை காக்கவே முன்னோர்கள் இந்த மகாளய பட்ச நாட்கலில் சுப காரியங்கள் எதுவும் செய்ய கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

மகாளய பட்ச நாட்கள் முடிந்ததும் செய்யலாமே என்றால், அதற்கு அடுத்து வரும் பதினைந்து நாட்கள் கொலு வைக்கும் நாட்களாக நமக்கு வந்து விடும். இந்த நாட்களில் நாம் தெய்வங்களை பூஜையில் அமர வைத்து வணங்கி அவர்களின் ஆசீர்வாதங்களையும் அனுகிரகங்களையும் பெற பூஜை புனஸ்காரங்களை நம் வீட்டில் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆகையால் இந்த நாட்களிலும் இது போன்று சுப காரியங்களில் நாம் கவனம் செலுத்தினால் கடவுளை வணங்குவதை நாம் தவற விட்டு விடுவோம். எனவே தான் இந்த பதினைந்து நாட்களும் நாம் சுப காரியங்கள் எதுவும் செய்ய கூடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புரட்டாசி மாதத்தில் சுப காரியங்களை செய்யக்கூடாது என்று கூறியதற்கு காரணம் இவை மட்டுமே. ஆனால் எது குறித்து உண்மை தெரியாத பலரும் புரட்டாசி மாதமே நல்ல மாதம் இல்லை. இந்த மாதங்களில் நாம் எதை செய்தாலும் நமக்கு நல்லது இல்லை என்று பொதுவான ஒரு கருத்தை சொல்லி விட்டார்கள்.

- Advertisement -

இதிலும் சில விதி விலக்குகள் நமக்காக சொல்லி இருக்கிறார்கள். அதாவது வளைகாப்பு, நிலை வாசல் வைத்தல், காது குத்துதல் போன்ற சிறு சிறு சுப காரிங்களை இந்த புரட்டாசி மாதத்தில் செய்து கொள்ளலாம். ஏனெனில் இவை அந்தந்த மாதங்களில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும். அதாவது ஒன்பதாவது மாதம் செய்ய வேண்டிய வளைகாப்பை பத்தாம் மாதம் செய்ய முடியாது. இந்த மாத கணக்கை கொண்டு செய்யப்படும் சுப காரியங்களை செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இதனால் பெருமளவு நமது பூஜைகள், பித்ரு கடமைகள் பாதிக்காது. இந்த காலத்தில் பூமி பூஜை போடுவது, புது வீடு கிரகப்பிரவேசம் செய்வது, திருமணம் போன்ற பெரிய சுப நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மை தரும்.

இந்த புரட்டாசி மாதம் முழுவதும் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு இறை வழிபாடு செய்ய வேண்டும் என நாம் முன்னோர்கள் சொன்ன காரணம் இந்த மாதம் முதல் நமக்கு பருவ நிலை மாற்றங்கள் தொடங்கும். இந்த சமயத்தில் நாம் அசைவ உணவை அதிக அளவில் எடுத்து கொண்டால் அது நம் உடல் நலத்திற்கு தீங்கை தான் ஏற்படுத்தும். நோய்கள் வராமல் தடுக்கவும் தான் இவைகளை நம் முன்னோர்கள் கடைபிடிக்க   சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -