புரட்டாசி மாத ராசி பலன் – 2019

Puratasi month rasi palan

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசி அன்பர்களே, பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைத்து சுகமும், நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷ விஷயங்கள் நிறைய உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷ விஷயங்கள் நிறைய உண்டு. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவுகளால் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்தார் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடன்பிறப்பு வகையில் பல நன்மைகள் கிடைக்கும். முக்கிய காரியங்கள் ஒவ்வொன்றாக கை கொடுக்க ஆரம்பிக்கும். புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்.  மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவு நிலை உண்டாகும்.  பிரிந்து சென்ற உறவினர்கள் ஒன்று சேருவர். உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் காணாமல் போகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நெருங்கிய சொந்தங்களால்  பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்:

Taurus zodiac sign

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத ராசி பலன் படி, குடும்ப பெரியோர் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக நிலவிவந்த குடும்பம் சார்ந்த பிரச்னைகள் சாதகமாக முடியும்.எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் சர்வ சாதாரணமாக பேசி முடித்து விடுவீர்கள். பொருளாதாரம் ஏறுமுகவாகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். ஆனாலும் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் சகஜமாக பேசி பழகுவர்.  பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீர்ந்து பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு கணிசமான வழியில் உயரும். உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்துடன் தூரத்து பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத ராசி பலன் படி, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அனைத்து கவகையிலும் நன்மை உண்டாகும். எதிர் வீட்டாரின் நட்பு கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தாரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பேச்சில் நிதானமும், செய்யும் செயல்களில் கவனமும் மிகவும் அவசியம்.  பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்குன் தொல்லைகள் ஒரு புறம் இருந்தாலும் அதை எப்படியும் சமாளித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கும்.. முக்கிய காரியங்கள் தொடர்பாக நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் தானாக உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி சேமிப்பீர்கள். குடும்ப விஷயங்களை வாழ்க்கை துணையுடன் கலந்து ஆலோசிப்பது மன நிம்மதியை தரும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும்.

 

zodiac sign

கடக ராசி அன்பர்களே, இந்த மாத ராசி பலன் படி, எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒருவித பயம் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் சில கசப்பான விஷயங்கள் நடைபெறலாம். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தாரால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். அடுத்தவர் பற்றிய விமர்சனங்களையும் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை தைரியமாக செய்து முடிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல விஷயங்களில் அதிகம் ஆர்வம் ஏற்படும். உடல் ரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதில் புத்துணர்ச்சியும் தெம்பும் பிறக்கும். யாருக்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க வேண்டாம்.

சிம்மம்:

Leo zodiac sign

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத ராசி பலன் படி, குடும்பத்தார் உங்களை அனுசரித்துச் செல்வர். உடன் பிறந்தவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் கட்டுவதை தவிர்த்தல் நல்லது. சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின்போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். விருந்து, விழா நிகழிச்சிகளில் களனது கொள்வீர்கள். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். தங்கள் சேமிப்பிற்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும்.  சொத்து சம்மந்தமான வழக்குபிரச்சனை முடிவுக்கு வரும். வீட்டில் தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.குடும்பத்திற்கு உங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி:

Virgo zodiac sign

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத ராசி பலன் படி, நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை இருக்கும்.  திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு உடனே விலகும்.உத்யோகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிக்கலின்றி இருக்க முடியும்.காரியத்தில்  தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம்.

துலாம்:

Libra zodiac sign

பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.  மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். குடும்பத்தாரால் டென்ஷன் உண்டாகலாம்.  குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளால் மன நிம்மதி குறையும். வீட்டில் எல்லாரிடமும் அனுசரனைகள் அதிகம் தேவைப்படும். குல தெய்வ வழிபாடு செய்வதில் தாமதங்கள் உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிறிது சிரமம் ஏற்படும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் எப்போதும் உதவி கரமாக இருப்பர். பெண்கள் வகையில் ஒரு சில பிரச்சனைகள் வரும். கணவன் மனைவி இருவரும் கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை உடனே சரிசெய்து கொள்ள முடியும்.

விருச்சகம்:

Scorpius zodiac sign

விருச்சிக ராசி அன்பர்களே, நண்பர்களிடம் உங்கள் பிடிவாத குணத்தை தளர்த்தி கொள்வது நல்லது. உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக தடைபட்ட காரியம் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி, தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தாரால் நன்மை உண்டாகும்.  இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். வீட்டில் ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டு. உடன்பிறந்தவர்கள் நேசத்தை பெறுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். முக்கிய காரியங்களை தனியாளாக நின்று செய்து முடிக்க வேண்டிவரும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

Sagittarius zodiac sign

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத ராசி பலன் படி, நண்பர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுப்பீர்கள். எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது உத்தமம். அடுத்தவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை தனியாளாக நின்று செய்து முடிப்பீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்டு பல முடிவுகளை எடுப்பீர்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். குடும்பத்தில் சில்லகரிக்கும். றை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். உடன் பிறப்புகளுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு வந்தாலும் அதை பெரிதுபடுத்தவேண்டாம். உடலில் உஷ்னம்  வந்து போகும். மனதில் உள்ள மனக்குழப்பம் மறையும். பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். நண்பர்களின் வட்டாரம் கூடும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

மகரம்: 

Magaram rasi

மகர ராசி அன்பர்களே, உடன்பிறப்பு வகையில் பண உதவி கிடைக்கும். ஆன்மிக ஆர்வம் கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பணம் விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தார் நடவடிக்கை கோபத்தை . கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபடும். மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. உங்களிடம் இருந்து விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேருவர்.குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி தோன்றும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். உத்யோகத்தில் பெயர், புகழ் கூடும். அடுத்தவர்களை குறை சொல்லும் பழக்கத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றவும்.

கும்பம்:

Kumbam Rasi

கும்ப ராசி அன்பர்களே, அனைத்திலும் புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள்.  குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். ஆரோக்கிய விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். உங்கள் வசதி வாய்ப்புகள் பெருக கடினமாக உழைப்பீர்கள். ஒரு சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். நண்பர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தாருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம்.  குடும்பத்தில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புது வீடு வாங்கும் யோகம் அமையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்களும் பண விரயமும் உண்டாகும். நீங்கள் விரும்பியபடியே ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசி அன்பர்களே,பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வு வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. பூர்விக சொத்துக்களின் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். வெளியில் இருந்து வர வேண்டிய பணம் சிறிய தாமதித்து பின் கைக்கு வரும். சற்றும் எதிர்பாராத வகையில் கடன் ஏற்படும். பழைய கடனை அடைக்க புது கடன் வாங்க வேண்டிவரும். குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு நீங்கள் முக்கிய காரணமாக இருப்பீர்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.