புரட்டாசி மாதத்தில், பெண்கள் இப்படி விரதம் இருந்தால் அவர்களுடைய வீடு ஏழேழு தலைமுறைக்கும் செல்வ செழிப்போடு இருக்கும்.

perumal
- Advertisement -

புரட்டாசி மாதம் தொடங்கி விட்டது. அவரவர் வீட்டு வழக்கப்படி பெருமாள் வழிபாட்டை வாரம்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் மேற்கொள்வார்கள். இதோடு சேர்த்து புரட்டாசி மாதம் முழுவதும் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் இப்படி ஒரு விரதத்தை மேற்கொண்டால், வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அத்தனைத்தும் நீங்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் குடியேறும். வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. வீடு என்றும் செல்வ செழிப்போடு இருக்கும். மிக மிக சுலபமான முறையில் இந்த புரட்டாசி மாத விரதத்தை பெண்கள் எப்படி மேற்கொள்ள வேண்டும்.

perumal1

இந்த புரட்டாசி மாதம் முழுவதும் வீட்டிலிருக்கும் பெண்கள் காலை ஐந்து மணிக்கே எழுந்து சுத்தமாக குளித்துவிட்ட வேண்டும். குளித்து முடித்துவிட்டு நெற்றியில் பொட்டு இட்டுக்கொண்டு, பூஜை அறைக்கு சென்று பெருமாள் படத்திற்கு துளசி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த பூஜைக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் பஞ்ச பாத்திரம். காலையில் பஞ்ச பாத்திரத்தில் புதியதாக நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அந்த நீரில் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு, 2 துளசி இலைகளையும் அந்த தண்ணீரில் போட்டு இதை எடுத்து அப்படியே பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இந்த பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தினம்தோறும் புதியதாக மாற்ற வேண்டும். இது பெருமாளுக்கு மிகமிக உகந்த தீர்த்தமாக கருதப்படுகிறது.

perumal2

அடுத்து பெருமாளுக்கு உங்கள் கையாலேயே நெய் அல்லது நல்லெண்ணை தீபத்தை ஏற்றி வைத்து விட வேண்டும். அவல் வெல்லம் சேர்த்த கலவையை பெருமாளுக்கு நைவேத்தியமாக வைத்து விட்டு, பெருமாளின் முன்பு அமர்ந்து மனதார பெருமாளின் நாமத்தை உச்சரிக்கலாம். அல்லது கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை உச்சரிக்கலாம். அல்லது தொலைபேசியில் பெருமாள் பாடல்கள் ஒலிக்கும் செய்யலாம். அது நம்முடைய இஷ்டம்தான். அதன்பின்பு உங்களுடைய வேண்டுதலை மனதார இறைவனிடம் முறையிடுங்கள்.

- Advertisement -

இறுதியாக பெருமாளுக்கு தீப தூப கற்பூர ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜையின் இறுதியில் பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் தயார் செய்து வைத்து இருக்கிறார்கள் அல்லவா அதிலிருந்து சிறிதளவு எடுத்து வீட்டில் இருக்கும் பெண்கள் பரவிவிட வேண்டும். அந்த தீர்தத்தை வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். இப்போது காலை வேளையில் புரட்டாசி மாத விரதத்தை தொடங்கி விட்டீர்கள்.

காலை எதுவும் சாப்பிடக்கூடாது. மதியம் வடை பாயாசத்துடன் நிறைவான சாப்பாட்டை சாப்பிடலாம். சாதத்தில் வெங்காயம் பூண்டு சேர்த்துக் கொள்ளக்கூடாது. அசைவம் சாப்பிடக்கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. மதியம் நிறைவான சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அவ்வளவு தான் இரவு நேரமும் எதுவும் சாப்பிடக்கூடாது. இதைதான் புரட்டாசி மாதத்தில் ஒரு பொழுது இருப்பது என்று சொல்வார்கள். ஒரு பொழுது மட்டுமே சாப்பிட்டு இறைவனுக்காக விரதம் இருப்பது.

- Advertisement -

poojai arai

இந்த முறைப்படி உங்களால் முடிந்தால் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்தால் அது உங்களுடைய வீட்டிற்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் மிக மிக நல்லது. உங்களுடைய குடும்பம் ஏழேழு தலைமுறைக்கும் செழிப்பாக வாழும்‌.

perumal

முடியாதவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் உங்களுடைய உடல் சூழ்நிலையை பொருத்து உங்களால் எதை சாப்பிட்டுவிட்டு பெருமாளை வழிபாடு செய்ய முடியுமோ அதன்படி விரதம் மேற்கொண்டும் பெருமாள் வழிபாட்டை செய்யலாம். அதாவது, மதியம் சாப்பாடு சாப்பிட்டு விட்டு மற்ற இரண்டு வேலைகள் பால் பழம் போன்ற பொருட்களை சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். அதில் எந்த தவறும் கிடையாது.

perumal-1

இல்லையா வாரத்தில் ஒருநாள் உங்களால் மேல் சொன்ன முறைப்படி ஒரு பொழுது இருக்க முடிந்தாலும், வாரம்தோறும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். உங்களுக்கு எது சவுகரியம். அதன்படி விரதத்தை மேற்கொள்ளாம். முடிந்தவரை புரட்டாசி மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் ஆவது இந்த விரதத்தை மேற்கொண்டு பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயமாக மோட்சத்தில் இடம் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -