செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளுக்கான புரட்டாசி மாத ராசி பலன்.

- Advertisement -

மேஷம்:
மேஷம் ராசி காரர்களுக்கு இந்த மாதம் முழுதும் மன உறுதி அதிகமாக இருக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் சற்று இழுபறிக்கு பின்னரே சாதகமாக முடியும். உறவினர்களிடம் பேசும்பொழுது முடிந்தவரை கவனமாகவும், பதற்றப்படாமல், கோபம் கொள்ளாமல், பொறுமையாக பேசுவது மிகவும் நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வீடு கட்டுதல், மனை வாங்குதல் போன்ற சுப காரியங்கள் நன்மையில் முடியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ரிஷபம்:
வெகுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் எளிதாக நடந்து முடியும். உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் அகலும். வேலையில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
புதிய காரியங்கள் செய்வதற்கு முன்னர் நல்ல நேரம் பார்த்து செய்வது மிகவும் நன்மையாக இருக்கும். தாய் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவேண்டிய கடன் பாக்கிகள் வந்துசேரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்:
தொழிலில் சிரமம் ஏற்படும். சில விரயச் செலவுகளும் உண்டாகும். பதட்டமில்லாமல் பொறுமையை கையாள வேண்டும். கடன்களை அடைப்பதற்கான சிறந்த நேரமாக அமையும். தொழிலில் உங்கள் தன்னம்பிக்கை திறன் அதிகரிக்கும். வேலையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும். எனவே இந்த மாதம் மிகவும் பொறுமையை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்:
பணவரவு அதிகரிக்கும். செய்யும் காரியத்தில் மனத்திருப்தி அடைவீர்கள். மற்றவர்களுக்காக எந்தவித பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. பிறருக்காக வீண்விரயம் செய்ய வேண்டியிருக்கும். தொழில் நல்ல முறையில் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் நன்றாக யோசித்து எடுக்க வேண்டும்.

கன்னி:
உங்கள் யோசனையை அனைவரும் கேட்டு நடப்பார்கள். உங்களை உதாசினப்படுத்தியவர்களும் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். தொழில் மற்றும் பணி செய்யும் இடத்தில் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். அரசியல்வாதிகளாக இருந்தால் புதிய பொறுப்புகள் வந்தடையும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் உற்சாகமானதாக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறையும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கும். உங்களின் வேலையை கெடுக்கும் சோம்பேறிகளிடமிருந்து சற்று ஒதுங்கியிருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் புதிய வழக்குகள் ஏற்படலாம். சகோதர முறையின் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள்
உண்டாகும். வெகு நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

விருச்சகம்:
தன்னம்பிக்கையுடன் தெய்வ அருளும் சேர்ந்து கிடைப்பதால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பண வரவு அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.

தனுசு:
எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் நன்றாக ஆராய்ந்து அதன் பின் செய்தால் வெற்றி கிடைக்கும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்யும் நிலைமை ஏற்படும். தொழில் மற்றும் வேலையில் அதிக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மையைக் கொடுக்கும்.

மகரம்:
இந்த மாதம் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தோஷமான தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணங்கள் வந்தடையும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மறைந்து நிம்மதி நிலவும். புதிய வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கு சிறந்த மாதமாக அமையும்.

கும்பம்:
எதிர்பார்த்திராத பண வரவு இருக்கும். குடும்பத்தில் நல்ல சூழ்நிலை ஏற்படும். தொழிலில் லாபம் கிடைக்கும். அவசியம் சிக்கனமாக இருக்கவேண்டும். தடைப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் நல்லவிதமாக நடைபெறும். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சந்தோஷத்தை கொடுப்பார்கள். உடல் நிலையில் சற்று கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே நல்ல ஒற்றுமை ஏற்படும்.

மீனம்:
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் மறையும். குறையாக நின்றுகொண்டிருந்த வேலைகள் முடியும். கொடுக்கல் வாங்கல் சரியாக இருக்கும். செலவுக்கேற்ற வருமானம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் மறையும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மன சோர்வு உண்டாகும்.

- Advertisement -