பௌர்ணமி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

linga porunami santhanathi thailam
- Advertisement -

பௌர்ணமி என்றாலே விசேஷமானது தான். அது அம்பிகை வழிபாட்டிற்கும் சிவபெருமான் வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. நாளைய தினம் பௌர்ணமி மேலும் விசேஷமானது. ஏனெனில் சிவபெருமான் வழிபாட்டிற்கு திங்கட்கிழமை மிகவும் உகந்தது. அன்றைய நாளில் வரக் கூடிய இந்த பௌர்ணமி நம்முடைய வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றி தரக்கூடியதாய் அமையும்.

இந்த பௌர்ணமி நாளில் இன்னொரு விசேஷமும் உண்டு. இந்த நாளில் தொடங்கும் எதுவும் நல்ல முறையில் நடக்கும் என்ற ஐதீகம் உண்டு. இத்தனை சிறப்புக்கள் மிக்க இந்த பௌர்ணமியில் நம் குடும்பம் என்றென்றைக்கும் செல்வ செழிப்புடன் இருக்க சில பொருட்களை வாங்குவது நல்லது என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருட்கள் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

பௌர்ணமி வாங்க வேண்டிய பொருட்கள்

இந்த பௌர்ணமியில் ஸ்படிகம் வாங்குவது மிக மிக விசேஷமானதாக சொல்லப்படுகிறது. ஸ்படிக லிங்கம், ஸ்படிக மாலை போன்றவற்றை நாளைய தினத்தில் வாங்கும் போது செல்வத்துடன் சேர்த்து சிவபெருமானின் பேரருளும் கிடைக்கும்.

அடுத்து இந்த நாளில் கிரிஸ்டல் ஸ்டோன் வாங்குவது மிகவும் விசேஷமானதாக சொல்லப்படுகிறது. இத்துடன் ராசிக்கல் மோதிரம் அணிய விருப்பப்படுபவர்கள் இந்த பௌர்ணமி நாளில் வாங்கி அணியும் போது அது மேலும் நல்ல பலனை தருவதாக அமைகிறது.

- Advertisement -

பௌர்ணமி நாளில் வீட்டுக்கு தேவையான மங்கள பொருட்கள் அனைத்தையும் வாங்குவது வீடு என்றென்றைக்கும் சுபிட்சமாக இருக்க வழிவகுக்கும். மஞ்சள், குங்குமம் போன்ற அனைத்தையும் இந்த நாளில் வாங்குவதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பௌர்ணமி நாளில் இன்னொரு விசேஷமும் உண்டு குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவாக இருக்கும் தம்பதியினர் இந்த நாளில் தம்பதியராய் சென்று இருவருக்கும் புது துணி எடுத்து அணிந்தால் இருவருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு நல்ல பரிகார உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

அதே போல் பௌர்ணமி நாளில் வாசனை திரவியங்கள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். அத்தர், ஜவ்வாது குறிப்பாக சந்தனாதி தைலம், சந்தனம் போன்றவற்றையெல்லாம் இந்த நாளில் வாங்கினால் மிக மிக விசேஷமானது. அதே போல் இந்த பௌர்ணமி நாளில் வாங்கும் ஸ்படிகம், ராசிக்கல் போன்றவற்றை எல்லாம் சிவாலயத்தில் வைத்து வழிபட்ட பிறகு பயன்படுத்துங்கள். நல்ல பல அற்புதமான பலன்களை பெறலாம்.

எந்த ஒரு பொருளையும் வாங்கும் பொழுது நாம் நாள், நட்சத்திரம் பார்த்து தான் வாங்குவோம். ஏன் ஒரு சிலர் இவர்கள் கையால் வாங்கினால் நல்லது. இந்த கடையில் வாங்கினால் நல்லது என்று கூட கருத்துக்களை வைத்திருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பௌர்ணமி நாளில் இவையெல்லாம் வாங்கும் போது நிச்சயம் இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பௌர்ணமி பரிகாரம்

இந்த பதிவில் உள்ள தகவல்களில் உங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் நாளைய பௌர்ணமி தினத்தில் இதில் உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை வாங்கி அதிர்ஷ்டத்தை உங்கள் வீடு தேடி வரவழைத்துக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -