தனுசு ராசியில் அமர்ந்த புதன் – இதனால் உங்கள் ராசிக்கு என்ன பலன்

Budhan Peyarchi

கடந்த 6 ஆம் தேதி (6-1-2018 ) புதன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சென்றுள்ளார். புத்திக்கு அதிபதியான புத பகவானின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஇந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்கு பல நல்ல விடயங்கள் கை கூடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலக பணியில் உள்ளவர்கள் தங்கள் அறிவாற்றலை திறம்பட வேலை செய்து நல்ல பெயரை வாங்குவர். பூர்வீக சொத்தினால் சிலருக்கு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. சகோதரர்களுக்கு இடையே சில மன கசப்புகள் வந்து விலகும். சில நேரங்களில் எடுக்கும் முயற்சி தடைபட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் உடல்நிலையில் கவனம் தேவை.

ரிஷபம்:
rishabamரிஷப ராசிக்கு இந்த காலகட்டம் அமோகமாக உள்ளது என்றே கூற வேண்டும். வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பண பற்றாக்குறை நீங்கும். எதிர்பாராத விதத்தில் திடீர் யோகங்கள் வந்து கஷ்டத்தை போக்கும், வீட்டில் பொருட்கள் சேரும். சில நேரங்களில் தேவை இல்லாத வீண் பழி வர வாய்ப்புள்ளது ஆகையால் மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாரை நம்பியும் எதிலும் கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம்.

மிதுனம்:
midhunamமிதுன ராசிக்கார்கள் அலுவலகத்தில் பனி புரியும் சமயத்தில் வேலையில் முழுவதுமாக ஈடுபடுவது நல்லது. தேவை இல்லாமல் அடுத்தவர்களிடம் பேசுவதால் வீண் வம்பு வந்து சேரும். உங்கள் நண்பர்களே கூட சில நேரம் உங்கள் எதிரிகளாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகையால் எதிலும் எச்சரிக்கையோடு நடந்துகொள்வது நல்லது. மற்றபடி தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாங்கனாம் வாங்க நேரம் கை கூடி வரும். கூட்டு தொழில் செய்வோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடகம்:
kadagamஇந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் தன்னுடைய வேலை சுமையை குறைத்து மன அமைதிக்காக சிறு சுற்றுலாக்களை செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். புகழ் கூடும். சகோதரர்கள் வழியில் பலன் உண்டு. சிலர் தீர்த்த யாத்திரை செல்வர். தோல் சம்மந்தமான நோய்கள் சிலருக்கு வந்து நீங்கும்.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்து விளக்கும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். அதற்கு ஏற்றாற்போல உங்களுக்கு பணமும் வந்து சேரும். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். நண்பர்கள் கை கொடுத்து உதவுவர். உயரதிகாரிகளால் நன்மை அதிகரிக்கும்.

- Advertisement -

கன்னி:
kanniகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை வேலை பளு அதிகரிக்கும் அதற்கு ஏற்றார் போல பண வரவும் அதிகரிக்கும். மன ரீதியாக சில மாற்றங்கள் ஏற்பாடு வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் உறவினர்களின் புழக்கம் அதிகரிக்கும். சிலர் வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். உடல் நலத்தில் கவனம் தேவை.

துலாம்:
thulamதுலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை பண வரவு அதிகரிக்கும். ஆனாலும் சில தேவை இல்லாத சிலவுகளால் அவ்வப்போது நண்பர்களிடம் சிறு தொகையை கைமாத்தாக வாங்க நேரிடும். வேலை காரணமாக வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களுக்கு காலம் கை கூடி வரும். சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். அலுவலகத்தில் சில தேவை இல்லாத பிரச்சனைகள் வந்து விலகும். பெற்றோர்களின் உடல்நிலையில் கவனம் தேவை.

விருச்சிகம்:
virichigamவிருச்சிக ராசிக்கார்களை பொறுத்தவரை நீண்ட கால சொத்து பிரச்சனை விலகும். அலுவலகத்தில் வேலை பளு குறையும். நண்பர்கள் வழியில் உதவி உண்டு. சிலருக்கு எதிர்பாராத உடல் உபாதைகள் வந்து விலகும். சகோதரர்களால் நன்மை அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுவோர் தீவிரமாக முயற்சித்தால் வெற்றிக்கனியை பெறலாம்.அடுத்தவர்கள் விடயத்தில் தேவை இல்லாமல் தலையிட வேண்டாம். அதனால் தீமைகளே வந்து சேரும்.

தனுசு:
dhanusuசிறு வியாபாரிகளுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கடன் அளிக்காமல் இருப்பது நல்லது. சிலர் பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்வர். அலுவலகத்தில் மேலதிகாரிகளோடு சார் சில பிரச்சனைகள் வரும். சவாலான காரியமாயினம் அதை சிலர் எளிதாக செய்து முடிந்து உங்கள் திறமையை நிரூபிப்பீர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து விலகும்.

மகரம்:
magaramமகர ராசியை பொறுத்தவரை விரைய ஸ்தானத்தில் புத பகவான் அமர்கிறார். இதனால் தேவை இல்லாத பிரச்சனைகள் அதிகரிக்கும். உடல் ரீதியாக சில உபாதைகள் உண்டாகி பண செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பனி ரீதியாக சிலர் நீண்ட நெடிய பயணம் செய்ய நேரிடும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வர். எதிரிகளால் அவ்வவ்போது சில தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆகையால் எப்போதும் விழிப்போடு  இருப்பது நல்லது.

கும்பம்
kumbamகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த காலகட்டத்தில் காதல் கைகூடம், கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் செய்வோருக்கு வருமானம் பெருகும். அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு திடீர் உயர் பதவி வரும். வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. புதிய வண்டி வாகனம் வாங்க நேரம் கை கூடி வரும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

மீனம்:
meenamமீன ராசிக்காரர்களை பொறுத்தவரை பணப் பற்றாக்குறை நீங்கும். சொத்து சேரும். நிலுவையில் இருந்த வழக்கு சுமுகமாக முடியும். வீட்டில் பொருள் சேரும். ஆனால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் சில நேரம் கவலை ஏற்படும். உறவுக்குள் சில மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளது. கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் விலகும்.

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான அணைத்து தகவல்களை உடனுக்குடன் பெற எங்களுது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.