இந்த 2 குணமுள்ள பெண்களில் நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா? பெண்களிடம் இவ்வளவு ரகசியம் இருக்குமா என்ன?

pengal-puthi
- Advertisement -

பெண் ஒரு புரியாத புதிர் என்பார்கள். பெண்களுக்குள் பல ஆயிரம் வகைகள் இருந்தாலும் மிக எளிதாக வேறு படுத்திக்காட்டக் கூடிய இந்த 2 வகை குணங்களை பொதுவாக கொண்டிருப்பார்கள். ஒன்று அறிவு நிறைந்துள்ள புத்திசாலியான பெண், இன்னொன்று புத்தி இல்லாத பெண். இந்த இரண்டு வகை பெண்களில் நீங்கள் எந்த வகை? என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி தொடர்ந்து பயணியுங்கள்.

couple

எப்பொழுதும் புத்தியுள்ள பெண்கள் தங்கள் கணவனை அரசனாக்கி மகிழ்வார்கள். தானும் அரசனுக்கு ராணி ஆகவே வாழ்ந்து ஆச்சரியப்படுத்துவாள். ஆனால் புத்தி இல்லாத பெண்ணோ தன் கணவனையும் அடிமைப்படுத்தி, தன்னையும் கடைசி வரை ஒரு அடிமைக்கு மனைவியாகவே பாவித்து வாழ்ந்து கொண்டிருப்பாள். அறிவில் சிறந்த புத்தியுள்ள பெண்கள் தன் கணவனுக்கு முழு சுதந்திரம் அளித்து தன்னுடைய சந்தோஷத்தையும், தைரியத்தையும் கணவனுடன் பகிர்ந்து கம்பீரமாக தலை நிமிர்ந்து வாழ செய்வாள். அதன் மூலம் தானும் சுதந்திரமாகவும், தைரியசாலியாகவும் இருப்பாள். ஆனால் புத்தி அற்ற பெண்ணோ எப்பொழுதும் அழுத முகத்துடன் ஏதாவது புலம்பிக் கொண்டே இருப்பாள். கணவனை ஏற்றி விடுவதற்கு ஏதாவது நாடகம் நடத்துவாள். உன்னை விட்டு சென்று விடுவேன், பிரிந்து விடுவேன், செத்துப் போய் விடுவேன் என்று அவனை இன்னும் கோழையாக்கி தானும் கோழைக்கு மனைவியாக வாழ்வாள்.

- Advertisement -

அறிவில் சிறந்த பெண்கள், இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்வார்கள். கணவன் எவ்வளவு சம்பாதிக்கிறானோ அதற்கு ஏற்ப செலவுகளும் செய்து சிக்கனமாக இருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் எதை நம்பி ஒப்படைத்தாலும் அதனை இன்னும் அழகாக்கி, சிறப்பாக்கி கொடுப்பார்கள். ஆனால் அறிவில் மந்தம் உள்ள புத்தி இல்லாத பெண்கள் கடந்த காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை மட்டுமே யோசிப்பார்கள். இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார்கள். முடிந்து போனதை சிந்தித்து ஒரு பயனுமில்லை, இருப்பதை வைத்து எப்படி நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தலாம்? என்று தான் சிந்திக்க வேண்டும். உடைந்து பொருளையும் ஒட்ட வைக்க முயற்சிக்க வேண்டுமே ஒழிய, இருக்கின்ற பொருளையும் உடைத்து விடக் கூடாது.

broken-glass

புத்திசாலியான பெண்கள் எப்பொழுதும் நிதானமாக இருப்பார்கள். விலை குறைந்த கண்ணாடி பொருளை அவர்களிடம் நீங்கள் கொடுத்தாலும் அதனை பத்திரமாக பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள். ஆனால் புத்தி இல்லாத பெண்கள் பொன் குடத்தை கொடுத்தாலும் அதனை உடைத்து விடுவார்கள். அவர்களிடம் பொறுமை என்பதை இருப்பதில்லை. தங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்து, அதிலும் மிச்சம் பிடிக்கும் பெண்கள் புத்திசாலியானவர்கள். ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இருக்கின்ற பொருட்களையும், சொத்துக்களையும் அடகு வைத்து கடன்காரன் ஆக்கிவிடுவார்கள் புத்தி இல்லாத பெண்கள்!

- Advertisement -

புத்தி இருக்கின்ற பெண்கள் எப்பொழுதும் அனைவரையும் நட்புறவுடன் பார்ப்பார்கள். சட்டென யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் புத்தி இல்லாத பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை கூட எதிரியாகத் தான் பார்ப்பார்கள். அவ்வளவு ஏன் தங்கள் சொந்தக்காரர்களை கூட வஞ்சகர்களாகவே சிந்திப்பார்கள். தங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கு படியளக்கும் அன்னபூரணியாக இருப்பவள் புத்திசாலியான பெண்கள்! புத்திசாலியான பெண்கள் மெழுகு போல் தன்னைத் தானே அழித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருப்பாள். சுத்தம், சுகாதாரம், லட்சியம் என்று நித்தம் சிந்திக்கும் பெண்கள் புத்திசாலியான பெண்கள்! ஆனால் புத்தி இல்லாத பெண்களுக்கு எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் மற்றவர்கள் தன்னை இப்படி ஆக்கி விட்டார்கள் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் புத்திசாலியான பெண்ணோ மற்றவர்களுக்கு தேவையானதையும் கொடுத்து, தனக்கானதையும் சாமர்த்தியமாக எடுத்துக் கொள்வாள்.

scold

புத்திசாலியான பெண் முட்டாள் குழந்தையை கூட மற்றவர்கள் முன்னிலையில் அசிங்க படுத்தாமல், அவமானப் படுத்தாமல் உயர்த்தி காட்டி அவனை மென்மேலும் மெருகேற்ற முயற்சிப்பார் ஆனால் புத்தியில்லாத பெண்களோ நீ எல்லாம் உருப்படவே மாட்டாய்! மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று கரித்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் முன்னிலையில் மட்டம் தட்டி பேசுவார்கள். இத்தகைய பெண்களுடன் இருப்பவர்களுக்கு இருட்டு என்றால் கூட பயம் தான் வரும் ஆனால் புத்திசாலி உள்ள பெண்கள் நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கிறாள். புத்திசாலியான பெண்கள் இந்த வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க மாட்டாள். இது தான் சிறந்த வாழ்க்கை என்று நம்பி மற்றவர்களுக்கும் அந்த நம்பிக்கையை கொடுத்து உற்சாகப்படுத்துவார்.

தனக்கென ஒரு வட்டம் போட்டு யார் வேண்டுமானாலும் அந்த வட்டத்திற்குள் வரலாம் என்று மற்றவர்களுக்கு அனுமதி கொடுப்பவள் புத்தி இல்லாதவள். புத்தி உள்ளவள் தனக்கென ஒரு தனி கர்வத்தை வைத்து சிறிய இடைவெளியை மற்றவர்களுடன் கடைபிடிக்கிறார். தன்னையும், தன் குடும்பத்தையும் தலைநிமிர வைக்கிறாள். புத்திசாலியான பெண்கள் எதையும் ‘நோ’ சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும். புத்தி இல்லாதவர்கள் தான் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்பதை சிந்திப்பார்கள். அறிவில் சிறந்த பெண்களுக்கு தவறு செய்வது மனித இயல்பு என்பது தெரியும் ஆனால் புத்தி இல்லாத பெண்களுக்கு இந்த விஷயம் புரிவது இல்லை இதனால் மற்றவர்களை எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறாள்.

women1

எப்போதோ செய்த விஷயத்தை கூட இப்போதும் குத்திக் காட்டிக் சங்கட படுத்துபவாள் புத்தி இல்லாதவள்! எல்லாவற்றையும் மன்னித்து மற்றவர்களுடைய திறமையைப் பாராட்டி மகிழ்பவர் புத்திசாலி. இதனால் எளிதாக எல்லோர் மனதில் அவள் நிலைத்து நிற்கவும் செய்வாள். புத்தியுள்ள பெண்கள் இன்னொரு பெண்ணை கனப்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால் புத்தி இல்லாதவர்களோ பெண்ணினத்தை அசிங்கப்படுத்தி தானும் ஒரு பெண் என்பதை மறந்து விடுவாள். புத்தியுள்ள பெண்கள் எல்லோரையும் சமமாகப் பார்ப்பார்கள். எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் இருப்பார்கள் ஆனால் புத்தி இல்லாத பெண்களுக்கு என்ன தான் மகிழ்ச்சி இருந்தாலும், முகத்தில் ஒரு எரிச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் நீங்கள் எந்த ரகம்? என்பதை நீங்களே பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இது இரண்டும் கலந்த கலவையாக இருந்தால் உங்களை இன்னும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

- Advertisement -