இன்று மாலை எல்லோர் வீட்டு பூஜை அறையிலும், மறக்காமல் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடுங்கள். அப்போது தான் புத்தாண்டு பூஜைக்கான பலனை முழுமையாகப் பெற முடியும்.

god
- Advertisement -

பொதுவாகவே தமிழ் புத்தாண்டு என்று மட்டும் அல்ல, எந்த ஒரு விசேஷ நாட்களில் உங்கள் வீட்டு பூஜை அறையை நீங்கள் அலங்காரம் செய்து இறை வழிபாடு செய்தாலும், கட்டாயம் மறக்காமல் இந்த ஒரு விஷயத்தையும் பூஜையின் இறுதியில் செய்து விட வேண்டும். அப்போது தான் நமக்கு பூஜை செய்ததற்கான முழு பலனும், மனநிறைவும் திருப்தியும் ஏற்படும். அது என்ன விஷயம். உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா. இப்போதே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

tamil-new-year1

கண்திருஷ்டி என்பது மனிதர்களுக்கு மட்டும் உண்டான ஒரு விஷயம் கிடையாது. இறைவனுக்கும் அது உண்டு. சில கோவில்களில் நாம் பார்த்திருப்போம். அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சல் சேவை செய்வார்கள். அம்மனுக்கு அலங்காரம் செய்து வளைகாப்பு நடத்துவார்கள். நவராத்திரி சமயங்களில் வீட்டில் கொலு பொம்மைகளை வைத்து, பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் வகையில் நவராத்திரி கொலு படிக்கட்டுகளை அலங்காரம் செய்திருப்பார்கள். இப்படி விசேஷ நாட்களில் அந்தப் பூஜையில், கண்திருஷ்டி படாமல் இருக்க கோவில்களிலும் கூட இந்த ஒரு விஷயத்தை இறைவனுக்காக செய்திருப்பார்கள்.

- Advertisement -

இப்படியாக தெய்வங்களுக்கு அழகாக அலங்காரம் செய்யும் சமயத்தில், அந்த பூஜையை நாம் செய்யும் போது நம்மை அறியாமலேயே நம்முடைய கண்திருஷ்டி இறைவனின் மீது விழுந்திருக்கும். நம் வீட்டுக்கு வருகை தந்தவர்களுடைய கண் திருஷ்டியும், இறைவனின் மீதும், நீங்கள் செய்த பூஜையின் மீதும் விழுந்திருக்கும். ‘அடடா! இவர்களது வீட்டில் எத்தனை அழகாக பூஜை செய்திருக்கிறார்கள்!’ என்ற அந்த கண் திருஷ்டியை எப்படி போக்குவது.

tamil-new-year2

விசேஷ நாட்களில் நமக்கு, அதாவது மனிதர்களுக்கு எப்படி ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை வைத்துள்ளோம், அதேபோல் இறைவனுக்கும் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்க வேண்டும். இன்றைய நாள் உங்களுடைய வீட்டில் தமிழ்புத்தாண்டு பூஜையை காலை நேரத்தில் எல்லோரும் சிறப்பாக கொண்டாடி முடித்து இருப்பீர்கள். இந்த மகிழ்ச்சியானது முழுமையாக நிறைவு பெற, மகிழ்ச்சி தொடர்ந்து நம்மிடம் நிலைத்து நிற்க நம் பூஜை அறையில் இருக்கும் கண் திருஷ்டியை நாம் நீக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய தாம்பூல தட்டில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கொஞ்சம் பன்னீர் கலந்து கொள்ளுங்கள். அதில் மஞ்சளையும் குங்குமத்தையும் சேர்த்து கலந்தால்,  சிவப்பு நிறம் கிடைத்துவிடும். இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வெற்றிலையின் மீது அல்லது வாழை இலையின் மீது ஒரு கற்பூரத்தை வைத்து ஆரத்தி தட்டில் சூடம் ஏற்றி, இறைவனுக்கு ஆரத்தி காட்டி, அந்த ஆரத்தி தண்ணீரில் இரண்டு சொட்டை நம் வீட்டுப் பூஜை அறைக்குள் விட்டு, மீதமிருக்கும் தண்ணீரை கொண்டு போய் வீட்டு வாசலில் கொட்டிவிட வேண்டும் அவ்வளவு தான்.

arathi

உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் கண் திருஷ்டிகள் முழுமையாக நீங்கிவிடும். நீங்கள் செய்த பூஜையின் பலாபலன்கள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலினாலும் தடைபடுவதற்கு வாய்ப்பே கிடையாது. இறைவனின் அருளாசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டில் இருக்கும் இறைவனின் திருவுருவப் படத்திற்கு தாராளமாக ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்கலாம். குறிப்பாக விசேஷ தினங்களில் இந்த ஆரத்தியை இறைவனுக்காக எடுப்பதற்கு யாரும் மறக்க வேண்டாம்.

tamil-new-year-chithirai

இன்று புத்தாண்டு தினம் என்பதால் உங்கள் வீட்டு பூஜை அறையையும் நிச்சயமாக அழகாக அலங்காரம் செய்து இருப்பீர்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வத்தின் மீதும் கட்டாயம் கண் திருஷ்டி பட்டிருக்கும். அதனை நீக்க இந்த ஆரத்தி ஒன்றே போதும். புத்தாண்டு பூஜையின் பலனை அனைவரும் முழுமையாக பெற மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். நம்பிக்கையோடு செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -