தன வரவு தாராளமாக இருக்க செய்ய வேண்டியது

padmavathy thayar sivan kovil
- Advertisement -

நாளை பிறக்கப் போகும் புது வருடத்தை எப்படி கொண்டாடுவது என்று பலரும் பல வகையில் சிந்தித்து இருப்பீர்கள். மகிழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் எதுவாக இருப்பினும் அத்துடன் சேர்த்து புது வருடத்தை இறைவழிபாட்டுடன் துவங்குவது இந்த வருடம் முழு வதும் நல்ல முறையில் வாழ வழிவகைக்கும்.

அந்த வகையில் நாம் புது வருடத்தின் அன்று செல்ல வேண்டிய ஆலயம் பற்றியும் வழிபாட்டு முறைகள், வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு இவற்றையெல்லாம் பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணவரவு அதிகரிக்க புத்தாண்டு செய்ய வேண்டிய வழிபாடு

நாளைய தினம் திங்கட்கிழமையில் புது வருடம் பிறக்கிறது. திங்கட்கிழமை சந்திர பகவானுக்கும், சந்திர தேவதைக்கும் உரிய நாள். ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிபதி தெய்வங்கள் உண்டு. அந்த வகையில் சந்திர தேவதைக்கும் அதிபதியானவர் மகாலட்சுமி தாயார். இன்றைய தினத்தில் மகாலட்சுமி தாயாரை வணங்குவது சிறப்பு.

நாளைய தினத்தில் வீட்டில் மகாலட்சுமி தாயாரை சிறப்பான முறையில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மகாலட்சுமி தாயார் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மல்லிகை மலரால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இத்துடன் பெருமாளின் புகைப்படம் திரும்ப துளசி இலைகளை கொண்டு அலங்காரம் செய்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய மனை வைத்து அதில் மஞ்சள் தடவி கோலம் போட்டு அதன் மீது மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு கோலத்தின் மீது வாசனைக்கு மலர்கள் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இத்துடன் தாயாருக்கு பிடித்த நெய்வேத்தியங்களை செய்து வையுங்கள்.

வெள்ளை நிறத்தில் இருப்பது மிகவும் சிறந்தது. பால் சாதம், தயிர் சாதம், பால் பாயாசம் போன்ற வெள்ளை நிறத்திலான நெய்வேத்தியங்களை படைத்து மகாலட்சுமி தாயாரின் மந்திரங்களை சொல்லி மனதார வழிபடுங்கள். இந்த வழிபாடு உங்களை வரும் வருடம் முழுவதும் எந்த விதமான பண தடையும் இல்லாமல் நல்ல முறையில் வாழ வழி வகுக்கும்.

- Advertisement -

அடுத்து நாளை மகாலட்சுமி தாயார் மகாவிஷ்ணு, சிவபெருமான் இவர்களின் ஆலயங்களுக்கு செல்வது சிறந்தது. மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பதால் மகாலட்சுமி தாயார் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லலாம். திங்கட்கிழமை சந்திர பகவானுக்குரிய அதிபதி சிவபெருமான். ஆகையால் சிவபெருமான் ஆலயத்திற்கு செல்வதும் மிகவும் நல்லது.

நாளைய தினத்தில் ஆலயத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிறத்திலான மலர்களை தாயாருக்கு வாங்கி கொடுங்கள். அதே போல் வெள்ளை நிறத்திலான பிரசாதங்களை செய்து ஆலயத்தில் அன்னைக்கு வைத்து வழிபட்ட பிறகு ஆலயத்திற்கு வருவதற்கு பிரசாதமாக கொடுங்கள். இது உங்களுடைய பொருளாதார நிலையை பல மடங்கு உயர்த்தும்.

அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் போது சிகப்பு வெள்ளை தங்க நிறம் என்று சொல்லக் கூடிய கோல்ட் கலர் இந்த மூன்று நிறத்திலான ஆடைகளை அணிந்து செல்லுங்கள். எப்படி ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்ததோ அதே போல் அந்த நாளில் அதற்குரிய நிறத்திலான துணிகளை அணிவதும் நமக்கு நன்மைகளை தேடி தரும். அந்த வகையில் நாளை இந்த நிறங்களை அணிவது மிகவும் நல்லது. சிவாலயத்திற்கு செல்வதாக இருந்தாலும் இதே வழிமுறைகளை பின்பற்றலாம்.

இத்துடன் நாளை புது வருடத்தை நீங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக கொண்டாடுகிறீர்களோ அந்த அளவிற்கு வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். எந்த மனக்கவலையும் கொள்ளாமல், தேவையற்ற வீண் விவாதங்கள், குழப்பங்கள் போன்றவற்றுடன் இருக்காமல் நாளைய தினம் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்க பாருங்கள்.

நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். உங்களை சுற்றியுள்ள இல்லாதவர், வலியவர் யாரேனும் ஒருவருக்கு உங்களால் முடிந்த ஏதேனும் உதவிகளை செய்யுங்கள். குறைந்தபட்சம் யாரேனும் ஒருவருக்கு ஒரு வேளை உணவாவது வாங்கிக் கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: புத்தாண்டில் ஏற்ற வேண்டிய தீபம்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற கூற்றுக்கேற்ப இல்லாதவர்க்கு உதவி செய்வதை விட சிறந்த தெய்வ அருள் வேறொன்றும் இல்லை என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -