உங்களுடைய ராசிக்கு, உங்களுடன் எந்த பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கும். உங்களுக்கு, அதிர்ஷ்டத்தை தரப்போகும் அந்த பொருளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

astro

பொதுவாகவே அவரவர் பிறந்த ராசிப்படி அவரவருக்கு என்று அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பொருள் கட்டாயம் இருக்கும். சில பேருக்கு எதிர்பாராமல் அந்த பொருளை தங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளும் யோகம் இயற்கையாகவே அமைந்து விடும். அப்போது அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கும். சரி, உங்களுடைய ராசிப்படி உங்களுடைய வீட்டிலோ, உங்களுடைய அலுவலகத்திலோ, ஆக மொத்தத்தில் நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடத்தில் இந்த பொருளை வைத்தால் நிச்சயம் அதிர்ஷ்டம் உங்களுடனே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எந்த ராசிக்கு எந்த பொருள் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று பார்த்துவிடலாமா?

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்களுடைய வீட்டு பூஜை அறையிலோ அல்லது தங்களுடைய அலுவலகத்திலோ மயில் இறகு அல்லது மயிலின் திருவுருவப்படம், குறிப்பாக மயில் தோகை விரித்து நடனம் ஆடுவது போல படங்கள் கிடைத்தால் அதை வாங்கி மாட்டி வைத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் வீட்டு பூஜை அறையில் அம்மனின் திருவுருவப் படத்தை முதன்மையாக வைத்து தினம்தோறும் அம்மன் வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக மகாலட்சுமி, அஷ்டலட்சுமி போன்ற லக்ஷ்மி சம்பந்தப்பட்ட படங்களை வைத்துக் கொள்ளலாம்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் தங்களுடைய வீட்டில் பெருமாள் வழிபாடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இதோடு மட்டுமல்லாமல் பெருமாள் பாடல்கள் பதிக்கப்பட்ட புத்தகங்களை தங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வது மேலும் அதிர்ஷ்டம் தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் தங்களுடைய வீட்டில் முழு நிலவு உள்ள படத்தினை, அதாவது பௌர்ணமி நிலவு உதிப்பது போல நிறைய சீனரிஸ் கடைகளில் விற்கிறது. அதை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொண்டால் பல நன்மைகள் தொடர்ந்து வரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் தங்களுடைய வீட்டில் குதிரை படத்தை வைத்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை தேடி தரும். முடிந்தால் ஏழு குதிரைகள் ஓடி வருவது போல ஒரு படத்தை வாங்கி உங்களுடைய வீட்டு வரவேற்பறையில் மாட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் பொதுவாகவே ரசனை உள்ளவர்களாக இருப்பார்கள். அழகிய வடிவில் அமைக்கப்பட்ட எந்த உருவச் சிலையாக இருந்தாலும் அதை நீங்கள், உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். பசுமாடு தன்னுடைய கண்ணுகுட்டிகு பால் கொடுப்பது போல, அல்லது தாய் தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுப்பது போல சிலைகளை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் உங்களுடைய வீட்டிலோ அல்லது வீட்டு பூஜை அறையிலோ மகாலட்சுமியின் திருவுருவப்படத்தை மாட்டி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மகாலட்சுமியின் முன்பு கலச சொம்பில் பொற்காசுகள் நிறைந்திருக்கும் அல்லவா? அப்படி ஒரு படம் கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் உங்களுடன் ஒட்டிக் கொள்ளும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கை காட்சியோடு அமைந்த சிறிய அளவிலான வீடு இருப்பது போல, மனதிற்கு அமைதியையான சூழ்நிலையை ஏற்படுத்தும் படத்தை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் அவர்களுடைய வீட்டுப் பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு உள்ளேயோ அல்லது பெருமாள் படத்திற்கு உள்ளேயோ, ரூபாய் நோட்டை வைத்து பிரேம் போட்டு மாட்டிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். அப்படி இல்லை என்றால் வெரும் ரூபாய் நோட்டை கூட ஃபிரேம் போட்டு மாட்டி உங்களது வரவேற்பறையில் வைத்துக்கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் தீபம் எரிவது, தீபச் சுடர், போன்ற ஒரு சீனரியை வீட்டில் வைத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். அதிர்ஷ்டமும் தேடி வரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் சந்தோஷமான மனநிலையில் இருக்கும் குடும்ப புகைப்படத்தை தங்களுடைய வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு திருச்செந்தூர் முருகன் படம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டுப் பூஜையறையில் திருச்செந்தூர் முருகனை வைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வாருங்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள படங்களை எல்லாம் பெரிய அளவில் உங்களுடைய வீட்டிலும் மாட்டி வைத்துக் கொள்ளலாம். அலுவலகத்திலும் வைத்துக்கொள்ளலாம். சிறிய அளவில் பாக்கெட்டிலும் வைத்துக் கொள்வது போல படங்கள் கிடைத்தால் கூட அதை வாங்கி உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொள்வது கூட உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைத்தால் நல்ல அதிர்ஷ்டம் கிடைத்தால் தொடர்ந்து இந்த திரு உருவப் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே வாருங்கள். அதிர்ஷ்டம் உங்களிடம் இருந்து வெளியே செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்ற கருத்தை முன்வைத்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.