ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு

Tahoor
- Advertisement -

இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்து நோபல் பரிசு பெற்ற இந்தியருமான ரவீந்தரநாத் தாகூர் அவர்களை பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம். வங்காள இசை மற்றும் இலக்கியத்தில் மிகப்பெரும் மாற்றத்தினை கொண்டுவந்தார். இவரது திறனை இந்தியாவே போற்றியது அந்த அளவிற்கு புலமை வாய்ந்த கவிஞர். இவரது பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த நிகழ்வுகளை இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

thagore 1

ரவீந்தரநாத் தாகூர் பிறப்பு:

1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் [7-5-1861] தேவேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். இவர்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி.

- Advertisement -

இவர் பிறந்து வளரும் முன்னரே இவரது தாய் இறந்ததால் இவர் அவரது வீட்டு வேலைக்காரர்களே வளர்க்கப்பட்டார். அவரது தந்தை பெரிய தொழில் அதிபர் என்பதால் பெரும்பாலும் பயணங்களிலே தான் இருப்பார். அதனாலே இவர் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார்.

கொல்கத்தாவில் ஒரு மிகப்பெரிய செல்வந்த பிராமண குடுமபத்தில் சகல வசதிகளுடனும் பிறந்தவர் தான் இந்த ரவீந்தரநாத் தாகூர் . மிகப்பெரிய செல்வந்த கும்பத்தில் பிறந்த இவரது மாளிகைக்கு ஒரு பெயர் உள்ளது அந்த மாளிகையின் பெயர் “ஜோராசாங்கோ”

- Advertisement -

thagore 3-

பெயர் – ரவீந்தரநாத் தாகூர்
பெற்றோர்கள் – தேவேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவி
பிறந்த இடம் – கொல்கத்தா
பிறந்த தேதி – [07-05-1861]மே மாதம் 7ஆம் தேதி 1861
ரவீந்தரநாத் தாகூர் கல்வி மற்றும் படிப்பு :

இவர் தனது ஆரம்ப கால படிப்பினை கொல்கத்தாவில் பயின்றார். ஆனால் பள்ளி சென்று பயில்வதற்கு அவர் விரும்பவில்லை எனவே அவரது தந்தை அவருக்காக வீட்டிலே வந்து கல்வியை கற்றுகொடுக்க ஆசிரியர்களை நியமித்தார்.

- Advertisement -

இவர் தனது தந்தையுடன் தொழிற்பயணம் மேற்கொண்டார். அப்போது அமிர்தசரஸ் நகரில் சிறிது காலம் தாங்கினார். அப்போது அவர் வங்காள மொழி மற்றும் சமஸ்கிரத மொழியிலும் புலமை பெற்றார்.

தந்தை பெரிய தொழில் அதிபர் என்பதால் அவர் அடிக்கடி தொழிற்பயணம் மேற்கொள்வார். எனவே தன் மகன் விரும்பி படிக்க நினைத்த வழக்கறிழர் படிப்பிற்காக அவரை லண்டனில் பிரைட்டன் நகரில் உள்ள கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார்.

ஆனால் அந்த படிப்பினையும் முழுவதுமாக முடிக்காமல் பாதியிலே நிறுத்தி இந்தியா திரும்பி இசை ஆசிரியர்கள் மூலம் தனது மாளிகையில் இசையினை முறைப்படி கற்றுக்கொண்டார்.

thagore 4-

ரவீந்தரநாத் தாகூர் திருமண வாழ்க்கை:

ரவீந்தரநாத் தாகூர் தனது 22ஆம் வயதில் 1883ஆம் ஆண்டு மிருனாலி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் . அவருக்கு திருமணம் ஆகும் போது அவருடைய மனைவிக்கு வயது 10.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறந்தது . ரவீந்தரநாத் தாகூர் அவரர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் மற்றும் 3 பெண் பிள்ளைகள் என மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தனர்.

மனைவியின் பெயர் – மிருனாலி தேவி

குழந்தைகள் – 5 குழந்தைகள் [2 ஆண் , 3 பெண் ]

ரவீந்தரநாத் தாகூர் நோபல் பரிசு:

நோபல் பரிசு என்பது அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைத்து விடாது ஒரு துறையில் மிகுந்த புலமை பெற்றவரால் தான் நோபல் பரிசு பெறமுடியும். ஏறுவயது முதலே இலக்கியத்திலும், இசையிலும் ஆர்வம் காட்டிய இவர் 1913 ஆம் ஆண்டு சிறந்த “இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ” பெற்றார்.

அவர் எழுதிய “கீதாஞ்சலி” என்ற கவிதை தொகுப்பின் மூலம் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை வென்றார். மேலும் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.

thagore 5-

நோபல் பரிசு வென்ற ஆண்டு – 1913

பிரிவு – இலக்கியம்

படைப்பு – கீதாஞ்சலி

ரவீந்தரநாத் தாகூரின் இளகிய மனம் :

1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளத்தினை இரண்டாக பிரிக்க அரசாங்கத்திடம் அறிவுறுத்தினார். இதனால் அரசாங்கம் வங்காளத்தினை பிரிக்க தீவிரம் காட்டியது . மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோவத்தில் புரட்சி செய்து கொண்டிருந்தனர்.

மிகப்பெரிய செல்வந்தரான இவர் ஏழை மக்களின் துயர் நிலையினை கண்டு மிகவும் வருந்தி தான் மக்களுக்காக தனது உதவியினை செய்யவேண்டும் என்று தீர்மானித்தார். இதனால் அரசாங்கத்தினை எதிர்த்து பல கூட்டங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தி அரசாங்கத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலும் அது முதல் ஏழை மக்களின் நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் தனது பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தீர்மானித்து மக்களுக்கு பல உதவிகளையும் புரிய துவங்கினார். சுதந்திர போராட்டத்திலும் இவரது பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்திநிகேதன் ஆசிரமம்:

1901 ஆம் ஆண்டு சாந்திநிகேதன் என்கிற இடத்திற்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு ஒரு ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். அந்த ஆசிரமமானது அணைத்து வகையான வசதிகளுடன் ஒரு பூஞ்சோலை போன்று மாறியது.

அந்த ஆசிரமத்தில் பாடசாலை, நூலகம் மற்றும் தியானம் செய்யும் இடம், இளைப்பாறும் இடம் என பல்வேறு இடங்களுடன் பரந்து விரிந்து காணப்பட்டது. இங்குதான் தாகூரின் மனைவி மாற்றும் இரண்டு குழந்தைகள் இறந்தனர்.

சர் பட்டம் வேண்டாம் என்று துறந்த தாகூர் :

1915ஆம் ஆண்டு ரவீந்தரநாத் தாகூருக்கு ஆங்கிலேயர்களால் “சர்” பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் 1919 ஆம் ஆண்டு தனக்கு சர் பட்டம் வேண்டாம் என்று அந்த பட்டத்தினை துறந்தார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது விடுதலை போராட்டம்.

ஆம் 1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையினை தொடர்ந்து தனக்கு ஆங்கிலேயர் அளித்த இந்த பட்டம் தேவையில்லை என்று சூளுரைத்தார். மேலும், மக்களின் துயர் நிலையினை கண்டு இவரும் பல போராட்டங்களில் மக்களுடன் கலந்து கொண்டார்.

thagore 6-

சர் பட்டம் கிடைத்த ஆண்டு – 1915

சர் பட்டத்தினை திருப்பி அளித்த ஆண்டு – 1919

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அளித்த கவுரவம்:

இவர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக 1940ஆம் ஆண்டு “டாக்டர் ஆப் லிட்ரேச்சர் ” அல்லது
“இலக்கிய முனைவர் பட்டம்” விருதினை அவரது இடத்திற்கே வந்து வழங்கி இவரை சிறப்பித்தது.

மேலும் இவர் நிறைய அறிஞர்கள் மற்றும் புலமை வாய்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார். அதில் மிகவும் குறிப்பிட்டு சொன்னால் “ஐன்ஸ்டின் ” . தாகூர் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசும் அளவிற்கு அவர்களுக்கு இடையே புரிதல் இருந்தது குறிப்பிட தக்கது.

ரவீந்தரநாத் தாகூர் இறப்பு:

தனது 80ஆவது வயதில் 1941ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக பலநாட்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 7ஆம் தேதி 1941ஆண்டு இறந்தார்.

தாகூர் பிறந்த ஆண்டு – 1861

தாகூர் இறந்த ஆண்டு – 1941

ரவீந்தரநாத் தாகூர் பெற்ற பட்டங்கள்:

சர் பட்டம் [ ஆங்கிலேய அரசு]

இலக்கிய முனைவர் பட்டம் [ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]

குருதேவ் [ இது மக்களால் வழங்கப்பட்ட பட்டம்]

English Overview:
Here we have Rabindranath Tagore biography in Tamil. Rabindranath Tagore is a great Poet who lived in Calcutta, India. Above we have complete Rabindranath Tagore history in Tamil. It is also called as Rabindranath Tagore varalaru in Tamil or Rabindranath Tagore essay in Tamil or Rabindranath Tagore katturai in Tamil.

APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

- Advertisement -