10 நிமிடத்தில் சத்து நிறைந்த கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை பஞ்சு போல மிருதுவாக எளிமையாக வீட்டில் எப்படி தயார் செய்வது?

ragi-sweet-kolukattai1_tamil
- Advertisement -

சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. அடிக்கடி சிறுதானியங்களை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலுபெறும். அந்த வகையில் பஞ்சு போல சாஃப்டாக மிருதுவாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டையை ரொம்ப ஈசியாக சத்துள்ளதாக எப்படி வீட்டில் தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – ஒரு கப், பொட்டுக்கடலை – கால் கப் ஏலக்காய் – 2, தேங்காய் துருவல் – கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப்.

- Advertisement -

செய்முறை

கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் லேசாக மாவை நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மிக்ஸர் ஜாரில் கால் கப் அளவிற்கு பொட்டுக்கடலை அல்லது வேர்கடலையை வறுத்து சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். பொட்டுக்கடலையை விட வேர்கடலை சேர்க்கும் போது இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். அரைக்கும் போது இரண்டு ஏலக்காய்களையும் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்து ராகியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கால் கப் அளவிற்கு துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் நன்கு கைகளால் கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் அரை கப் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். நாட்டு சர்க்கரை இல்லாத பட்சத்தில் பொடித்த வெல்லம் அரை கப் அளவிற்கு சேர்த்து ரெண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வடிகட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மாவை நன்கு உதிர்த்து உதிர்த்து பிசைய வேண்டும்.

- Advertisement -

கொழுக்கட்டைக்கு மாவு எப்படி கெட்டியான பதத்தில் இருக்குமோ, அது போல தயார் செய்ய வேண்டும். கொழுக்கட்டை பிடித்தால் மாவு பிடிபட வேண்டும். உதிர்த்தால் உதிர்ந்து விட வேண்டும். அந்த அளவிற்கு நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். இப்பொழுது மாவு தயார்! அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு இட்லி சட்டியை வையுங்கள். தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் இப்பொழுது மாவை ஒவ்வொரு பிடி கொழுக்கட்டைகளாக கெட்டியாக பிடித்து வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
துவரம் பருப்பில் இத்தனை அருமையான மொறு மொறு தோசை செய்ய முடியுமா? ஒரே மாதிரி தோசை சாப்பிட்டு போர் அடிக்கும் போது கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

ஒரு கப் கேழ்வரகு மாவிற்கு 12 முதல் 15 கொழுக்கட்டைகள் கண்டிப்பாக வரும். இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை அடுக்கிய பின்பு மூடி போட்டு எட்டில் இருந்து பத்து நிமிடம் நன்கு ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான். இப்பொழுது சுடச்சுட சுவையான டேஸ்ட்டியான சத்துள்ள கேழ்வரகு கொழுக்கட்டை தயார்! இதே மாதிரி நீங்களும் உங்களுடைய வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைங்களுக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -