- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ராகி மாவோட இதையும் சேர்த்து அரைச்சு பாருங்க நல்லா சாப்டான பன் போல ஊத்தப்பம் ரெடி...

ராகி மாவோட இதையும் சேர்த்து அரைச்சு பாருங்க நல்லா சாப்டான பன் போல ஊத்தப்பம் ரெடி பண்ணலாம். இதை விட ஒரு ஹெல்தியான டிபன் ரெசிபி இருக்க வாய்ப்பே இல்லை.

- Advertisement -

நாம் எப்பொழுதுமே காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு பசியை போக்குவதாக மட்டும் இருக்கக் கூடாது. அது உடலுக்கு நல்ல ஒரு ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியும் தருவதாக இருக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்புடன் இயங்க காலையில் எடுக்கும் அந்த உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியான அந்த காலை நேர உணவை நல்ல சத்துள்ள உணவாக ஆக்க ராகி மாவில் ஒரு அருமையான ஊத்தப்பம் ரெசிபியை தான் இப்போது எப்படி செய்வது என்று நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

சிகப்பு அவல் -1 கப், கேழ்வரகு மாவு -11/2 கப், புளித்த மோர் -1 கப், உப்பு -1 டீஸ்பூன், வெங்காயம் -1, பச்சை மிளகாய் – 2, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கருவேப்பிலை,

- Advertisement -

செய்முறை

ராகி உத்தப்பம் செய்ய சிகப்பு அவலை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு அவல் முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக அரிந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அவலை தண்ணீருடன் அப்படியே சேர்த்து ரெண்டு சுற்று விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் ஒரு கப் ராகி மாவு, புளித்த மோர், உப்பு அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் மறுபடியும் நல்ல மை போல அரைத்து மாவை ஒரு பவுலுக்கு மாற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருந்தால் போதும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு மாவை எடுத்து ஊத்தப்பம் என்பதால் கொஞ்சம் தடிமனாகவே ஊற்றிக் கொள்ளுங்கள் .அதற்கு மேல் அரிந்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி லேசாக தூவி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள்.

நல்ல சுவையான மெத்தை என்ற ராகி ஊத்தப்பம் தயார். இதற்கு தக்காளி, கேரட் போன்றவற்றை கூட பொடியாக அரிந்து சேர்த்து கொள்ளலாம். இந்த ராகி ஊத்தப்பத்திற்கு காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை ரொம்பவே பிரமாதமாக இருக்கும். இந்த ஊத்தப்பத்திற்கு இவை எல்லாம் அரைத்த உடனே அப்படியே ஊற்றி விடலாம். மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை மெலிதாகவும் ஊற்றலாம் ஆனால் மொறுமொறுவென்று வராது.

இதையும் படிக்கலாமே: அடிக்கிற வெயிலுக்கு வயிற்றுக்கு இதமா அருமையான தயிர் சாதம் ரெசிபி. தயிர் சாதத்தில் என்ன ஸ்பெஷல் அப்படின்னு நினைக்கிறீங்களா? அரிசியே இல்லாத தயிர் சாதம் இது தான் இதோட ஸ்பெஷல்.

குழந்தைகளுக்கு ஏதோ ஒன்று செய்து கொடுத்தோம் என்று இல்லாமல் இது போல சுலபமாக அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியமான உணவை செய்து கொடுத்தால் அவர்களின் வருங்காலம் நோய் நொடி இல்லாமல் இருக்கும்.

சற்று முன்