ஆரோக்கியமான வித்தியாசமான ‘ராகி சூப்’! ஒருமுறை இப்படி வச்சு குடிச்சு பாருங்க. நீங்க இரும்பு மனிதர்களாக மாறி விடுவீர்கள்.

soup
- Advertisement -

ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு மாவு வைத்து காய்கறிகளைச் சேர்த்து சுவையான சூப்பரான ஒரு சூப் எப்படி வைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். முதலில் கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைகோஸ், மற்றும் குடைமிளகாய் இந்த காய்கறிகளை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு காய்கறிகளிலும் 3 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதும். நறுக்கிய காய்கறிகள் எல்லாம் அப்படியே இருக்கட்டும். (தேவைப்பட்டால் மஷ்ரூம் மற்றும் பச்சை பட்டாணி இப்படி உங்களுக்கு விருப்பமான வேறு காய்கறிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.)

veg-salna1

அடுத்தபடியாக 3 டேபிள் ஸ்பூன் அளவு கேழ்வரகு மாவை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக தோல் உரித்த பூண்டு பல் – 6 மிக மிக பொடியாக நறுக்கியது, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 4 மிக மிக பொடியாக நறுக்கியது. இந்த இரண்டு பொருட்களையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

soup1

இப்போது சூப்பர் சூப் தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு, அதில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு முதலில் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவேண்டும். அடுத்து வெங்காயத்தை போட்டு வதக்கி, அடுத்த படியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, உடனடியாக 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்த காய்கறிகளை ஒரு மூடி போட்டு 5 லிருந்து 7 நிமிடங்கள் வேக வைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

இறுதியாக காய்கறிகள் வெந்தவுடன் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவை, இந்த சூப்பில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, மிதமான தீயில் கேழ்வரகு மாவு வேகும் வரை சூப்பை மீண்டும் கொதிக்க விட வேண்டும். சூப் அப்படியே கட்டியாக தொடங்கும்.

soup2

கேழ்வரகு மாவு நன்றாக வேக மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இறுதியாக உங்களிடம் வெங்காயத்தாள் இருந்தால் இதன் மேலே தூவி சுட சுட பருகலாம். இல்லை என்றால் கொத்தமல்லிதழை தூவி பருகலாம். எதுவுமே இல்லை என்றால் கார்ன் சிபஸ் தூவியும் பருகலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த சூப்பில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இந்த சூப்பை மிஸ் பண்ணாம வாரத்தில் ஒரு நாள் குடிங்க.

veg-soup

பின்குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு, அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 3 டேபிள்ஸ்பூன் கேழ்வரகு மாவு சரியாக இருக்கும். உங்களுக்கு சூப் கொஞ்சம் கெட்டியாக தேவைப்பட்டால் கேழ்வரகு மாவை கொஞ்சம் அதிகப் படுத்திக் கொள்ளலாம். சூப் கொஞ்சம் தண்ணீராக தேவை என்றால் கேழ்வரகு மாவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். அதுவும் உங்களுடைய விருப்பம் தான்.

- Advertisement -