2020 சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட அந்த 4 ராசிகாரர்களுக்கு, வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சி யோகம் தான்!

rahu ketu astro

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் தான் அதிபதி. இவருக்கு ராகுவும் கேதுவும் ஒத்துவராவர்கள். இருவருக்கும் ஆகவே ஆகாது. ஒரு ராசியில் ராகுவும் சூரியனும், கேதுவும் சூரியனும் ஒன்றாக இருந்தால் தோஷம் என்று கூறுவார்கள்.

simmam

வருகின்ற சார்வரி வருடம் ஆவணி மாதம் ராகு, உங்களுக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு கேது வரப் போகின்றார். பத்தாம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் உங்களது தொழில் முன்னேற்றத்தை அடைய போகிறது. சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆவணி மாதம் தொடங்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன், நல்ல பதவியில், நல்ல வேலை நிச்சயம் கிடைக்கும். தொழிலில் இதுநாள்வரை இருந்த பிரச்சனைகள் கூட விலகிவிடும். பணப்பற்றாக்குறையோடு இருந்தவர்கள் கையில் பணம் மழை பெய்யப் போகிறது. புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சனைகளும் நீங்கும். தடைப்பட்டிருந்த சுப காரியம் நடக்கும். சொத்துக்கள் வாங்கலாம். நீண்ட நாட்களாக அடைக்க முடியாமல் இருந்த கடன்களையும் அடைத்து விடுவீர்கள். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையப் போகிறது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சார்வரி வருடம் நடக்கப்போகும் ராகுகேது பெயர்ச்சியில் ஆவணி மாதம், ராகு பகவான் 9ஆம் வீட்டிலும், கேது பகவான் 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய போகின்றார்கள்.

உங்கள் குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கப் போகிறது. அலுவலக பணியில் நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி உங்களை வந்து அடையப் போகிறது. அதற்கான திறமையும் உங்களிடம் உண்டு. நிச்சயமாக உங்களுக்கு கொடுத்த பணியை சீராக செய்து முடிப்பீர்கள். சம்பள உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

- Advertisement -

குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஒற்றுமை இருக்கும். ஏழரைச் சனியால் இருந்த உடல் பாதிப்புகள் அனைத்தும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் சரியாக போகிறது. பணத்தை வாரி வழங்க போகிறார். அதை நீங்கள் சேமிக்க போகிறீர்கள். மனசு முழுவதும் சந்தோஷம் நிறைந்திருக்கும் அளவிற்கு இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அமையப் போகிறது.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சார்வரி வருடம் ஆவணி மாதம் கேது பகவான் இரண்டாம் வீட்டிற்கும், ராகு பகவான் எட்டாம் வீட்டிற்கும் சஞ்சாரம் செய்ய போகிறார்.

thulam

ஒருவருடைய ராசிக்கு எட்டாம் வீடு என்பது விபத்து, சங்கடம், கௌரவ பாதிப்பு, கஷ்டம், இழப்பு இவைகளை குறிக்கின்றது. இந்த இடத்திற்கு சுபகிரகங்கள் வந்தால் கொஞ்சம் கஷ்டம்தான். பாவ கிரகமான ராகு வருவதால் உங்களுக்கு யோகம் தான். எதிர்பார்த்த பொன், பொருள், வீடு வாசல், மனை, வண்டி வாகனம், உங்களை வந்து சேரும். இதில் ஏதாவது வாங்கும் யோகம் அமையும். எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். இருளில் இருந்த நீங்கள் பிரகாசமான வெளிச்சத்திற்கு வரப்போகிறார்கள். சுப காரியங்கள் நடைபெற போகிறது. இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நேரம் காலம் வந்துவிட்டது.

உங்களது பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். நிலம் வைத்திருப்பவர்கள் வீடு கட்டலாம். நீங்கள் சொல்வதை நிச்சயமாக செயலாற்றும் அளவிற்கு உங்களை அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. இந்த ராகு பெயர்ச்சி உங்களுக்கு யோகமாக தான் அமையப் போகிறது.

விருச்சிகம்:
விருச்சக ராசி காரர்களுக்கு சார்வரி வருடம் ஆவணி மாதம் நடக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு கேது பகவானும், ஏழாமிடத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்ய போகிறார்கள்.

viruchigam

இதுநாள் வரை உங்களை சுற்றி உள்ளவர்கள் அனைவருக்கும் நல்லது நடந்திருக்கும். உங்களுக்கு எந்த ஒரு நல்ல பலனும் கிடைத்திருக்காது. இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு சேர்க்கப் போகிறது. வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்க போகிறது. நல்ல வருமானம் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் உயர்வு கிடைக்கும். உதவி கேட்ட  இடத்தில் கட்டாயமாக கடன் தொகை கிடைக்கும். உங்களது உறவினர்கள், உங்களுடைய கஷ்டத்திற்கு தோள் கொடுப்பார்கள். புதிய தொழில் தொடங்கலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். நல்ல லாபத்தை அடையலாம்.

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகமாகதான் அமைய போகிறது.

இதையும் படிக்கலாமே
வரப்போகும் தமிழ் புத்தாண்டின் குரு பலன். திருமண யோகம் எந்த ராசிக்கு காத்துக்கொண்டிருக்கிறது?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu ketu peyarchi palangal. Rahu ketu. Rahu ketu valipadu Tamil. Rahu ketu palan. Rahu ketu palangal in Tamil.