தினமும் வரக்கூடிய ராகுகால நேரத்தில் அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களுக்கும் கூடிய சீக்கிரத்திலேயே விடிவுகாலம் கிடைத்துவிடும்.

durgai-amman
- Advertisement -

ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்று பெரியோர்கள் கூறுவார்கள். நம்மில் பலரும் நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுபகாரியங்களின் பேச்சை தொடங்குவதற்கு இதுபோன்ற நேரத்தைத் தவிர்த்து விடுவோம். ஆனால் இந்த ராகு காலத்தில் அம்பாளுக்கு பூஜைகள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் எதிரிகளின் தொல்லைகள் நம்மைவிட்டு விலகுவதற்கும் ராகுகால பூஜை சிறந்த வழியாக அமையும். இந்த ராகு கால பூஜையை எப்படிசெய்வது? அவற்றை செய்வதால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும். என்பதை பற்றி தெரிந்துகொள்ள மேலும் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

ragu-rahu-dasa

ராகு கால பூஜையை எப்பொழுதும் வீட்டில் செய்யக்கூடாது. வீட்டில் எப்போதும் போல விளக்கேற்றி அம்மனை தொழுது விட்டு, பின்னர் கோவிலுக்கு சென்றுதான் ராகுகால பூஜை செய்ய வேண்டும். ஒருவர் இந்த பூஜையை செய்வதினால் அவர்களிடம் இருக்கும் தீய சக்திகள் வெளியேறி நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை அன்று 4 1/2 மணி முதல் 6 மணிக்குள் வரும் ராகு காலத்தில் பூஜை செய்துவர உங்களிடம் உள்ள பயம் நீங்கி தைரியம் உண்டாகும்.

- Advertisement -

ராகுகால பூஜை செய்யும் முறை:
காலை எழுந்து குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்து, உணவு ஏதும் உண்ணாமல், பால் போன்ற நீராகாரங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு விரதமிருந்து ராகுகால நேரத்தில் கோவிலுக்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, பழத்தின் சாறை பிழிந்து விட்டு, அதனை உட்புறமாக திருப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி துர்க்கை அம்மனை மனதார வணங்க வேண்டும். ஒவ்வொரு கிழமையில் வரும் ராகு கால பூஜைக்கென்று தனித்தனி சிறப்புகள் உள்ளன. (ஒவ்வொரு கிழமையிலும் வரக்கூடிய ராகு கால நேரத்தில் அம்பாளை வேண்டி இந்த முறைப்படி வழிபாடு செய்து வர வேண்டும்.)

Durgai amman

திங்கட்கிழமை ராகு கால பூஜை பலன்:
திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை இருக்கும் ராகு கால நேரத்தில் பூஜைகள் செய்து வர வீட்டில் இருக்கும் கிரக தோஷங்கள் தீர்ந்து நல்ல பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

செவ்வாய் கிழமை ராகு கால பூஜை பலன்:
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வரும் ராகு காலத்தில் விரதமிருந்து ராகுகால பூஜை செய்துவர பித்ரு தோஷம் மற்றும் திருமண தோஷம் நீங்கி நல்ல பலன் உண்டாகும்.

blue-durga

புதன் கிழமை ராகு கால பூஜை பலன்:
புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள ராகு கால நேரத்தில் பூஜை செய்து வந்தால் உங்கள் தொழிலில் இருக்கும் எதிரிகள் உங்களை நெருங்காமல் பாதுகாக்க படுவீர்கள்.

- Advertisement -

durga

வியாழக்கிழமை ராகுகால பூஜை பலன்:
வியாழக்கிழமை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை வரும் ராகு கால நேரத்தில் பூஜை செய்து வந்தால் குருவின் பார்வை உங்கள் மீது விழுந்து உங்களின் வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை பலன்:
வெள்ளிக்கிழமை காலை 10 1/2 மணி முதல் 12 மணி வரை இருக்கும் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி ராகு கால பூஜை செய்து வந்தால் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சுகமான வாழ்க்கை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் இருந்து கொண்டு வரும் எலுமிச்சை பழத்தின் மீது கற்பூரம் வைத்து சுற்றிப் போட்டால் வீட்டில் மங்களம் உண்டாகும்.

சனிக்கிழமை ராகு கால பலன்:
சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை வரும் ராகு கால நேரத்தில் விரதமிருந்து பூஜை செய்வதன் மூலம் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து உங்கள் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்

- Advertisement -