ராகு காலம், எமகண்ட நேரத்தை ஒதுக்குபவரா நீங்கள்? அந்த நேரத்தில் இதை எல்லாம் செய்து பாருங்கள். உங்களது கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் வளர்ச்சி தரக்கூடிய காலமாக அவை மாறும்.

rahu kalam yemagandam Tamil
- Advertisement -

மனிதனின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாக ராகுவும், கேதுவும் அமைக்கின்றனர். ராகுவிற்க்குரிய காலத்தை ராகு காலம் என்று கேதுவிற்க்குரிய காலத்தை எமகண்டம் என்றும் நாம் கூறுகிறோம். பொதுவாக இந்த காலங்களில் நாம் எந்த நல்ல விஷயங்களையும் செய்யக்கூடாது என்று ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் இந்த காலங்களில் நாம் என்னென்ன செய்தால் அதற்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு எந்த கிரகத்துடன் சேருகிறாரோ அந்த கிரகத்தின் பலன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் கேது எந்த கிரகத்துடன் சேர்கிறாரோ அதன் பலன் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஒருவர் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி அடைகிறார் என்றால் அவருக்கு ராகு உதவி புரிகிறார் என்று அர்த்தம். அதேபோல் அனைத்து திறமைகள் இருந்தும் அவரால் எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை என்றால் அவருக்கு கேதுவின் ஆதிக்கம் இருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய தடைகளை தகர்த்தெறிவதற்கு நாம் ராகு மற்றும் எமகண்ட காலத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல செயல்களை ஆரம்பிப்பதற்கு அதாவது முகூர்த்த தேதி குறிப்பதற்கு அல்லது ஒரு மனையில் ஆரம்ப நிலையை பற்றி பேசுவதற்கு நல்ல நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். மற்றபடி நாம் ஜாதகம் பார்த்து நம்முடைய கர்ம வினைகளை தீர்ப்பதற்கு ராகு மற்றும் எமகண்ட காலத்தை பயன்படுத்தலாம்.

ராகு காலத்தில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னாலே அதில் பலன் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள் ஜோதிடர்கள். கர்ம வினைகள் எதுவாக இருந்தாலும் அது விலக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ராகு மற்றும் எமகண்ட காலம் சிறந்ததாக விளங்குகிறது. வீடு என்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ராகு மற்றும் எமகண்ட காலத்தில் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் என்றுமே சுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மருத்துவ செலவில் இருந்து வெளியே வருவதற்கு ராகு மற்றும் எமகண்ட காலத்தில் மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மருத்துவ செலவுகள் குறையும். அதே போல் நமக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருக்கின்றது என்றாலும் அந்த தீய பழக்கங்கள் விலகுவதற்காக நாம் ஏதாவது பரிகாரம் செய்தோம் என்றால் அதை ராகு மற்றும் எமகண்ட காலத்தில் செய்வதன் மூலம் அந்த தீய பழக்கங்கள் நம்மை விட்டு விலகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கெட்ட பழக்கங்களில் இருந்து வெளிவருவதற்கு ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. மேலும் எமகண்டத்தில் விநாயகரையும், அனுமனையும் வழிபட வேண்டும். ராகு என்றாலே மாயை என்று சொல்கிறோம். அதாவது ஏதாவது ஒன்றிற்காக அடிமையாக்கி விடும். ஒருவருடைய வாழ்க்கையில் பண பற்றாக்குறை ஏற்படுகிறது என்றாலோ, தான் சொல்லும் பேச்சை கேட்காத துணையோ அல்லது வாரிசுகளோ இருந்தாலும், செலவுகள் அதிகரித்தாலும் அவர்கள் ராகு காலத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

மனையை விற்க முடியவில்லை என்கிறவர்களும், திருமண தடை ஏற்படுபவர்களும், வேலை கிடைக்காமல் பிரச்சனையை சந்திப்பவர்களும் எமகண்ட காலத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் பட்டீஸ்வரர் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் நாம் வழிபடுவதன் மூலம் நம்மிடம் இருக்கும் நோய்கள் அகழும் என்று கூறப்படுகிறது. மேலும் ராகுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்தும் அந்த துர்க்கை அம்மன் நம்மை காப்பாற்றுவார்.

இதையும் படிக்கலாமே: செய்யும் பூஜைக்கு எந்த பலனும் இல்லையா? பூஜை அறையில் இந்த மாற்றங்களை எல்லாம் செய்து பாருங்கள்.

மேலும் திருச்சி மலைக்கோட்டையில் இருக்கும் விநாயகரை எமகண்ட நேரத்தில் வழிபடுவதன் மூலம் கெட்டவை நீங்கி நல்லவை நடக்கும். மேலும் கேது பகவானுக்குரிய மற்ற தெய்வமாக கருதப்படுபவர் பழனி முருகன். இவரை வணங்குவதன் மூலம் கேதுவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறைந்து நல்ல வாழ்வு மேலோங்கும்.

- Advertisement -