ராகு கால அட்டவணை, டைம்

rahu-mantral-1

ஒரு நல்ல செயலை நாம் தொடங்கும்போது அதை ராகுகாலத்தில் தொடங்கக்கூடாது என்று காலம் காலமாக நம் முன்னோர்கள் கூறியது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ராகு காலம் என்பது நாம் பயப்படும் அளவிற்கு கெட்ட நேரம் அல்ல. ராகு காலத்தில் கடைசி 30 நிமிடங்களில் நான் விஷத்தினை குடித்தால் கூட அது அமிர்தமாய் மாறக்கூடுமாம். ஆனால் ராகுவை கண்டு நாம் ஏன் பயப்படுகிறோம்? விரிவாக பார்க்கலாமா.

ராகு கால அட்டவணை

கிழமைராகு கால நேரம்
ஞாயிறு4.30 - 6.00
திங்கள்7.30 - 9.00
செவ்வாய்3.00 - 4.30
புதன்12.00 - 1.30
வியாழன்1.30 - 3.00
வெள்ளி10.30 - 12.00
சனி9.00 - 10.30

வாரம் என்பது ஏழு நாட்களை குறிக்கின்றது. ரிஷிகள் ஏழு நாட்களுக்கும், ஏழு கிரகங்களை சொந்தமாக்கி விட்டனர். நிழல் கிரகங்களான ராகுவிற்கும், கேதுவிற்கும் நாட்களை தரவில்லை. இதனால் ராகுவிற்கும் கேதுவிற்கும் 24 மணி நேரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கி விட்டனர். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் என்ற கணக்கில் ஏழு நாட்களுக்கும் இதேபோன்று கொடுத்துவிட்டார்கள்.

ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் சர்ப்பமாக கருதப்படுகின்றனர். சர்ப்பம் என்றாலே விஷம். இந்த விஷ காலம் கெட்ட நேரம் ஆக மாறிவிட்டது. இதனால் தான் சுபகாரியங்களை இந்த நேரத்தில் செய்ய மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் ராகு, கேது என்பது தலையும், உடலும் மாறி மாறி நிற்கும் ஒரு கிரகம். இதனை “அரூபி” என்பார்கள். இந்த தன்மை நம்மை நல்ல செயலை செய்ய விடாமல் தடுத்து விடும். அதோடு மட்டுமல்லாமல் இந்த நேரங்களில் எதிர்மறை கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும். அதிவேகமாக செயல்பட வேண்டுமென்ற எண்ணத்தை அது தூண்டுமாம். அதிவேகம் ஆபத்தானது. ஆகையால் நான் இந்த ராகு கால நேரத்தில் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. நாம் வழக்கமாக செய்யும் எல்லா செயலையும் செய்து வரலாம். அதில் எந்த பாதிப்பும் வராது. (கேது காலம் என்று ஒன்று கிடையாது. இதைத்தான் எமகண்டம் என்று கூறுகின்றோம்.)

rahu

ராகு காலத்தில் துர்க்கையை வழிபடலாம்
சர்ப்ப கிரகமான ராகுவும், கேதுவும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலமாகத் தான் கிரகமாகும் வரத்தினை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. 24 மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் துர்க்கைக்கு பூஜை செய்தார்களாம். ராகு துர்க்கையே வழிபட்ட நேரத்தை ராகு காலம் என்றும், கேது துர்க்கையை வழிபட்ட நேரத்தை எமகண்டம் என்றும் கூறுகின்றனர். பொதுவாக இந்த நேரத்தில் மற்ற கிரகங்களின் பலன்கள் குறைவாக தான் இருக்கும் என்பதால் எந்த நல்ல காரியத்தையும் தொடங்க மாட்டார்கள்.

durgai amman

- Advertisement -

ராகுவே, துர்க்கையை வழிபட்டதன் காரணமாகத்தான் ராகுகாலத்தில் துர்க்கைக்கு பூஜையை செய்கின்றோம். இதனால் ராகுவின் அருளைப் பெற முடியும். இது மிகவும் சிறந்தது. அதிலும் செவ்வாய்  கிழமை அன்று ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், ராகுவோடு சேர்ந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம். மங்கலம் என்னும் வார்த்தை அங்காரகனை குறிக்கின்றது. பொதுவாக மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாயும் மற்றும் சர்ப்ப கிரகங்களும் காரணமாக இருக்கின்றது. ராகுவினால் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபட இந்த ராகு காலத்தில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி துர்கை அம்மனை வழிபடலாம்.

deepam

செவ்வாய்கிழமையில் ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால் திருமணத்தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள், ஆகியவை நீங்கும். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கு ஏற்றினால் குடும்ப நலம் சீராக இருக்கும். உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும். வாரிசுகளின் வாழ்வில் தடை நீங்கும். பொன் பொருள் சேரும். சேமிப்பு அதிகரிக்கும். ஞாயிற்றுக் கிழமையில் ராகுகால பூஜையினால் தீராத நோய்களின் தாக்கம் குறையும்.

இவ்வாறாக ராகுவின் அருளைப் பெற்று நாம் அனைவரும் நலமோடு வாழ துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட்டு வருவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
துளசி செடியை எந்த நேரத்தில் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்

English Overview:
Here we have all the details about Rahu Kalam in Tamil. Rahu kalam timing in Chennai, Rahu kalam on Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday and Sunday.