- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி ரமா ஏகாதசி கதை

புரட்டாசி ரமா ஏகாதசி கதை

- Advertisement -

நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி ஏகாதசியை ரமா ஏகாதசி என்று சொல்லுவார்கள். இந்த ஏகாதசி அன்று ஸ்ரீ கிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை விவரித்து எடுத்துக் கூறுகிறார். முசுகுந்த மன்னன் பெருமாள் மீது கொண்ட பற்றினால் ஏகாதசி விரதத்தை நம் மக்கள் அனைவரையும் கடைப்பிடிக்கும் படி வற்புறுத்துபவர் ஆவார். இவரைப் பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் புராண கதையாக பார்க்க இருக்கிறோம்.

புராண கதை (ரமா ஏகாதசி மகாத்மியம்):
பத்ம புராணத்தில் கிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு (யுதிஷ்டிரர்) ரமா ஏகாதசியின் பெருமையைப் பற்றி விளக்கும் கதை இது! முசுகுந்தன் என்றொரு மன்னன் இருந்தான். அவன் மிகுந்த பக்தியுடனும், தர்மத்துடனும் நாட்டை ஆண்டு வந்தான். அவன் தனது ராஜ்ஜியத்தில் உள்ள அனைவரும் ஏகாதசி விரதத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சட்டம் போட்டு வைத்திருந்தான்.

- Advertisement -

மன்னனின் மகள் சந்திரபாகா. அவளை சோபனன் என்ற மன்னனின் மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். சோபனன் உடல் பலவீனமானவன். ஒருமுறை, ரமா ஏகாதசி நாளில், சோபனன் தன் மாமனார் அரண்மனைக்கு வந்தான். அன்று ஏகாதசி விரதம் கட்டாயமாக இருந்தது. சந்திரபாகா தனது கணவனிடம், “என் தந்தையின் நாட்டில் அனைவரும் விரதம் இருக்க வேண்டும். நீர் பலவீனமானவர் என்பதால் நீர் உணவருந்தினால், உமது தந்தை உம்மைக் கொன்று விடுவார்” என்று கூறினாள்.

சோபனன், “நான் என் உயிரைக் கொடுத்தாவது ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பேன்” என்று கூறி, உண்ணாமலும், நீரும் அருந்தாமலும் விரதம் மேற்கொண்டான். உடல் பலவீனத்தால், அந்த இரவிலேயே சோபனன் உயிரிழந்தான். சோபனனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, அவன் ஏகாதசி விரதம் இருந்த புண்ணியத்தால் தேவபுரம் என்னும் மிக அழகான, செல்வச் செழிப்புள்ள ஒரு தெய்வ லோகத்திற்கு அரசனாகச் சென்றான். ஆனால், அந்த ராஜ்யம் நிலையற்றதாக இருந்தது. பிறகு, முசுகுந்தன் தேசத்தில் இருந்து வந்த சோமகர்மா என்ற அந்தணர் ஒருவர் தேவபுரத்திற்கு வந்து சோபனனைப் பார்த்தார்.

- Advertisement -

சோபனன் தன் மனைவியிடம், “நீ சென்று உன் தந்தையிடம், இந்த ராஜ்ஜியத்தை நிலையாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வா” என்று தூது அனுப்பினார். சந்திரபாகா தன் தந்தை முசுகுந்தனிடம் சென்று நடந்ததைக் கூறி, கணவனுக்கு நிரந்தரமான ராஜ்ஜியம் கிடைக்க வழிகேட்டாள். அதற்கு முசுகுந்தன், தன் மகளை சோபனன் இருக்குமிடத்திற்கு அனுப்பி, ரமா ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் முறையாகக் கடைப்பிடித்தால், அந்த ராஜ்ஜியம் நிலையானதாக மாறும் என்று கூறி, அதற்கான பூஜை முறையையும் கற்பித்தான்.

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி கடைசி ஏகாதசி 2025

சந்திரபாகா தனது கணவனுடன் சேர்ந்து முழு நம்பிக்கையுடன் ரமா ஏகாதசி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக, அவர்களின் ராஜ்ஜியம் நிலைபெற்றது. இந்தக் கதை, இந்த விரதத்தை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அனுசரிப்பவர்களுக்கு இவ்வுலகில் செல்வத்தையும், மறுமையில் மோட்சத்தையும் பெருமாள் அருளுவார் என்பதை உணர்த்துகிறது. நாளை புரட்டாசி மாதத்தின் வெள்ளிக் கிழமையில் வரக்கூடிய கடைசி ரமா ஏகாதசி விரதம் இருந்து அனைவரும் அதனது முழு பலன்களை அடைவோமாக!

சற்று முன்