17-04-2024 ராம நவமி வழிபாட்டு முறை

ramar
- Advertisement -

எம்பெருமான் ராமர் அவதரித்த நாளைத்தான் ராமநவமையாக நாம் கொண்டாடி வருகின்றோம். நாளைய தினம் 17/4/2024 புதன்கிழமை அன்று இந்த ராம நவமையானது இந்த உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களால் கொண்டாடப்பட இருக்கின்றது. ராம நவமி அன்று ராமரை நினைத்து நம்முடைய வீட்டிலேயே எளிமையான பூஜையை எப்படி செய்வது.

ராமருக்கு பிடித்தமான பொருட்கள் என்னென்ன. பூஜையறையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன. நாளைய தினம் ராம நவமியில் முக்கியமாக நாம் தானம் செய்ய வேண்டிய பொருட்கள் என்னென்ன, இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களை எல்லாம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

- Advertisement -

ராமநவமி 2024

ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 7 மணி வரை தான் நவமி திதி இருக்கின்றது. ஆகவே வீட்டில் ராமரை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணி வரை இந்த ராம நவமி வழிபாட்டை மேற்கொள்ளலாம். காலையில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

விரதம் இருப்பது என்பது அவரவர் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது. பூஜை அறையில் இராமரது பட்டாபிஷேகம் இருந்தால் அந்த படத்திற்கு கட்டாயமாக துளசி இலை மாலை அணிவிக்க வேண்டும். கூடவே ஒரு தாமரை பூ மகாலட்சுமிக்காக வாங்கி வைத்து விடுங்கள். இந்த இரண்டு பூக்களை வைத்து ராமநவமி வழிபாடு செய்வது சிறப்பு. வெண்பொங்கல் வடை இது போன்ற நெய்வேத்தியங்களை ராமருக்கு வைக்கலாம்.

- Advertisement -

ரொம்ப ரொம்ப முக்கியமான நெய்வேதியம் என்றால் நீர்மோர், பானகம். ஏனென்றால் ராமர் 14 வருடம் வனவாசத்தில் இருந்த போது தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொள்வதற்கு எளிமையான இந்த இரண்டு பாணகங்களை அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மறக்காமல் வெண்பொங்கல் வடை செய்ய முடியவில்லை என்பவர்கள் கூட இந்த இரண்டு பாகங்களை வைத்து ராமா ராமா என்று அழைத்து, ராமரை வழிபாடு செய்தீர்கள் என்றால் அந்த ராமரின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைத்த விடும்.

இது சித்திரை மாதம் வெயில் கொளுத்தக்கூடிய மாதம். வாய்ப்பு உள்ளவர்கள் ராமர் பருகிய இந்த இரண்டு பானங்களையும் உங்களால் முடிந்தவர்களுக்கு நீங்கள் தானமாக கொடுக்கலாம். இந்த தானத்தை நீங்கள் கோவிலுக்கு சென்றும் செய்யலாம் அல்லது வீதியில் வெயிலில் கஷ்டப்படக்கூடிய ஏழைகளுக்கும் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை அஷ்டமியில் பைரவர் வழிபாடு

உங்களுடைய சவுகரியத்தை பொறுத்தது. தாகத்தோடு இருப்பவர்களுக்கு ஒரு நீர்மோர் கொடுப்பதில் எத்தனை புண்ணியம் சேரும். அதிலும் ராமநவமியில் ராமரை நினைத்து இந்த தானத்தை கொடுத்தால் ஏழேழு ஜென்மத்து பாவம் தீர்ந்து, ஏழேழு ஜென்மத்திற்கு அந்த ராமரின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். நாளைய தினம் மேல் சொன்ன எளிமையான வழிபாட்டை பின்பற்றி அனைவரும் ராமரின் பரிபூரண ஆசியைப் பெற வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -