நாளை (18/4/2021) அதீத சக்தி வாய்ந்த இந்த 8 எழுத்து மந்திரத்தை இவ்வுலகிற்கு கூறிய ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி! என்ன மந்திரம் அது நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

ramanujar-temple

இவ்வுலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவர்குள்ளும் இறைசக்தி உள்ளது. அது எல்லோருக்கும் வெளிப்படுவது இல்லை என்றாலும் ஒரு சிலருக்கு அவ்வப்போது இந்த பூமியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது. அந்த வகையில் ஸ்ரீராமானுஜர் இவ்வுலகில் செய்த மிகப் பெரும் தியாகம் என்ன தெரியுமா? அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

ramanujar

கோடிக்கணக்கான மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீராமானுஜர் 1017ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவராவார். வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இவர் தனது 120 ஆவது வயதில் உயிர் நீத்தார். எனினும் மறுநாளே அவ்வுடல் மேலெழுந்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. தியானத்தில் அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு செய்யப்பட்ட தைலம் பூசப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இவருக்கு முதல் வழிபாடு நடந்த பிறகே ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ராமானுஜர் பக்தர்கள் வேண்டிய வரங்களை வாரி வழங்க கூடியவராக இருக்கிறார்.

இவர் இவ்வளவு சிறப்புகள் பெற என்ன காரணம் தெரியுமா? பல அலைச்சல்களுக்கு பிறகு, பல அவமானங்களுக்கு பிறகு திருகோஷ்டியூர் நம்பி என்கிற குருவால் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். அவருடைய குருவானவர் இந்த மந்திர உபதேசத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இவ்வுலகம் பயனடைய வேண்டி தான் தன்னால் கருதாது தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை என்று அந்த மந்திரத்தை பக்தர்கள் அனைவருக்கும் தன்னுடைய உரத்த குரலில் பகிரங்கப்படுத்தினார். அது என்ன மந்திரம் தெரியுமா?

perumal

இவ்வுலகில் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றான எட்டெழுத்து மந்திரம் ஆக இருக்கும், ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் திருமாலின் ஷக்தி மந்திரம் ஆகும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று எவர் ஒருவர் உச்சரித்தாலும் அவருக்கு வரும் இன்னல்கள் யாவும் மலை போல் வந்தாலும் பனி போல் விலகும் என்பது நம்பிக்கை. இம்மந்திரத்தை பக்தர்களுக்கு தன் குருவையும் மீறி வெளி உலகிற்கு கூறியதால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் உண்டானது. எனினும் அவர் தன் கடைசி காலம் வரை வைணவ குலத்திற்கு தொண்டுகள் செய்தே மோட்சம் பெற்றார். ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை கலைய மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய புரட்சி செய்தார். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை இவ்வுலகிற்கு அறிவுறுத்தினார். இவரின் பெருமைகளை சொல்லும் பொழுதே நமக்கு மெய் சிலிர்க்கும்.

ஸ்ரீ ராமானுஜருக்கு பெருமாளே சீடனாக பணிபுரிந்த காலங்களும் உண்டு. இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் திருக்குருங்குடி அழகிய நம்பி பெருமாள் கோவிலில் காதுகளில் பூவும், நெற்றியில் திருநாமம் அணிந்து பக்தர்களுக்கு இன்றும் அருள் பாலிக்கின்றார். இக்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பரிவட்டப்பாறை அமைந்து இருக்கும். திருவனந்தபுரம் கோவிலிலிருந்து கருடன் இப்பாறையில் ராமானுஜரை கொண்டு வந்து கிடத்தியதாக புராணங்கள் கூறுகிறது.

ramanujar

திருவனந்தபுரத்தில் பூஜை முறைகளை சீர்திருத்த நினைத்த ஸ்ரீ ராமானுஜரை பெருமாள் கருடனை அனுப்பி இவ்வாறு செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ரங்கநாதர் கோவில் பூஜை முறைகள் இன்றும் அவருடைய அம்சம் நிறைந்து இருக்கும். உங்களுக்கு உண்மையான குரு கிடைக்க இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். குரு சிஷ்யனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி அன்று அவரை வழிபடுபவர்களுக்கு சிறந்த குருமார்களை அமைவார்கள். வாழ்க்கையில் சிறந்த கல்வி பெற்று அறிவாற்றலுடன் திகழ நாளை ஸ்ரீ ராமானுஜரையும், ரங்கநாதப் பெருமாளையும் தவறாமல் வழிபடுங்கள்.