பஞ்சு போல சாப்டான, ஜூஸியான ரசகுல்லா செய்ய இந்த மூணு ஸ்டெப்பை கரெக்டா ஃபாலோ பண்ணா போதும். புதுசா சமையல் பழகுறவங்க கூட ஈஸியா ரசகுல்லா செய்யலாம்.

rasagulla
- Advertisement -

பன்னீர் வைத்து செய்யப்படும் இந்த ரசகுல்லா பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதன் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இது நல்ல பஞ்சு போல சாப்பிட்டாக அதே நேரத்தில் ஜூஸியாக, சொல்லும் போது நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ஸ்வீட்டான சுவையான ரசகுல்லாவை எப்படி சுலபமாக செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த ரசகுல்லாவை புதிதாக சமையல் பழகுபவர்கள் கூட செய்து விடலாம். அந்த அளவிற்கு சுலபமாக இருக்கும் இதில் இருக்கும் அளவுகள், டிப்ஸ் அனைத்தையும் சரியாக கடைப் பிடித்து செய்தால் சூப்பரான ரசகுல்லாவை நாமே வீட்டில் தயார் செய்து விடலாம்.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான பால் பாத்திரத்தை வைத்து சூடானவுடன், முதலில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ரசகுல்லாவிற்கு பால் காய்ச்சும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது தான். ஆனால் தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு பாலை ஊற்றும் போது பாத்திரத்தில் பால் அடிப்பிடிக்காது. பாலை கொதிக்க விடும் போது கொஞ்சம் கூட பாத்திரத்தில் அடி பிடிக்காமல் அதே நேரத்தில் பாத்திரத்தில் ஒட்டாமலும் இருக்கும்.

இப்போது தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு லிட்டர் திக்கான பால் ( புல் கிரீம் மில்க்) சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பன்னீர் அதிகமாக கிடைக்கும். பால் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை லோ ஃபிளேமில் மாற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது பாலில் இருந்து தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரிந்து வந்திருக்கும். அடுத்து ஒரு வடிகட்டியின் மேலே மெல்லிய வெள்ளை நிற காட்டன் துணியை போட்டு, அதில் இந்த திரிந்த பாலை ஊற்றி தண்ணீர் மொத்தமாக வடியும் வரை வைத்திருங்கள். அதன் பிறகு மேலே மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை அலசிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை பழம் பிழிந்து விட்டதால் அதில் கொஞ்சம் புளிப்பு சுவை இருக்கும். இப்படி தண்ணீர் ஊற்றும் போது புளிப்பு சுவை மொத்தமாக நீங்கி விடும். இதன் பிறகு துணியை நல்ல இறுக்கமாக கைகளால் முறுக்கிக் கொண்டே இருந்தால் தண்ணீர் மொத்தமாக வடிந்து விடும்.

- Advertisement -

தண்ணீர் வடிந்த உடன் இங்கு பன்னீரை உடனடியாக ஒரு பிளேட்டில் கொட்டி உள்ளங்கையை வைத்து அழுத்தி பத்து நிமிடம் வரை பிசைந்து கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து பிசைந்து கொள்ளலாம் என்று விட்டால் பன்னீர் கெட்டியாக மாறி விடும். அதன் பிறகு நீங்கள் உருண்டைகள் பிடித்து போடும் போது சரியாக வராது. அது மட்டும் இன்றி ஜீராவில் போடும் போது உடைந்து விடும். எனவே தண்ணீர் வடித்த உடனே பன்னீரை பிசைந்து உருண்டை பிடித்து வைத்து விட வேண்டும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான அடிகனமான கடாய் வைத்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி அதற்கு ஒரு கப் சர்க்கரை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்து சர்க்கரை எல்லாம் கரைந்து லேசாக பிசுபிசுப்பு தன்மை வரும் போது, உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போடுங்கள்.

உருண்டைகளை மொத்தமாக கொட்டி விடக் கூடாது. உருண்டைகளை போட்ட உடனே தட்டு போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடம் வரை அடுப்பை ஹை ஃபிளேமில் வைத்து கொதித்த பிறகு அடுப்பை மறுபடியும் லோ பிளேமிற்கு மாற்றி ஒரு பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

இப்படி செய்யும் போது முதல் ஐந்து நிமிடத்தில் உருண்டைகள் நாம் போட்டதை விட இரண்டு மடங்காக பெரிதாகி வெந்திருக்கும். அதன் பிறகு பத்து நிமிடம் லோ ப்லேமில் இருக்கும் பொழுது பன்னீர் மிருதுவாகி அதனுள் இந்த சர்க்கரை பாகு எல்லாம் இறங்கி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 5 நிமிஷத்துல சட்டுனு கடலை மாவுல நல்ல மொறு மொறுன்னு இப்படி தோசை சுட்டு பாருங்க. இனி தோசை சாப்பிடணும்னு நினைச்ச உடனே டக்குனு இதை செய்திடலாம். டேஸ்ட்டும் செம்மையா இருக்கும்.

பத்து நிமிடம் லோ ஃபிலிமில் கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு உருண்டைகளை ஒரு பிளேட்டில் மாற்றி பரிமாறி கொள்ளலாம். நல்ல பஞ்சு போல சுவையான ஜூசியான ரசகுல்லா சூப்பராக ரெடியாகி இருக்கும். புதுசா சமையல் பழகுறவங்க கூட இதே முறையில் பயம் இல்லாம தாராளமா செய்யலாம். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -