நீங்க ரசம் வெச்சா நல்லா இல்லைன்னு இனி யாருமே சொல்ல மாட்டாங்க. இந்த ரச பொடியை போட்டு ரசம் வைத்தால்!

rasam-podi1
- Advertisement -

சமையலில் கில்லாடியாக இருக்கும் சிலருக்கு கூட, இந்த ரசத்தை பக்குவமாக வைக்கத் தெரியாது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களை சரியான அளவில் சேர்க்கமாட்டார்கள். உங்களுக்கு ரசம் வைக்க தெரியவில்லை என்றாலும், இப்படி ஒரு ரசப்பொடியை அரைத்து, உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ரசம் சமைக்கும் போது இந்தப் பொடியில் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். கமகம வாசத்தோடு நீங்கள் வைக்கும் ரசம் மனமாகவும் இருக்கும், சுவையாகவும் இருக்கும். சூப்பரான ரசப் பொடி அரைப்பது எப்படி. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

rasam-podi

ரசப் பொடி அரைக்க தேவையான பொருட்கள். கடலைப்பருப்பு – 50 கிராம், துவரம்பருப்பு – 50 கிராம், வரமல்லி – 50 கிராம், மிளகு – 100 கிராம், சீரகம் – 100 கிராம், வரமிளகாய் – 12 ஒரு கைப்பிடி அளவு பச்சை கருவேப்பிலை.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அந்த கடாய் காய்ந்ததும் முதலில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக வரமல்லி, மிளகு, சீரகம், இந்த 3 பொருட்களை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்து, அதற்குப் பின்பு வரமிளகாய் சேர்த்து 1 நிமிடங்கள் வறுத்து, இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக இந்த பொருட்களை வறுத்து எடுக்க ஆறிலிருந்து ஏழு நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

karuvepilai

இந்த பொருட்களை எல்லாம் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கூடாது. ரசப்பொடி சீக்கிரமே கெட்டுப் போய்விடும். எண்ணெய் ஊற்றாமல் வறுத்து அரைத்தால், ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக பருப்பு வகைகளை வறுத்த அதே கடாயில் ஒரு கைப்பிடி அளவு பச்சை கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பச்சையாக இருக்கும் கருவேப்பிலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி அந்த கருவேப்பிலைகளை நன்றாக ஒரு துளி ஈரம் இல்லாமல் வறுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

rasam-podi2

இப்போது இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறி கலகலவென சத்தத்தோடு வரவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் தண்ணீர் இருக்கக்கூடாது. இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியை கொஞ்சம் சூடு ஆறிய பின்பு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

milagu-rasam

இந்த பொடியை சேர்த்து ஒருமுறை ரசம் வைத்து பாருங்கள். அந்த ரசத்தின் சுவை நிச்சயமாக அட்டகாசமாக இருக்கும். ரசம் வைக்க தெரியவில்லை என்பவர்களுக்கும் இந்தப்பொடி பயனுள்ளதாக அமையும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -