உங்கள் ராசி படி நீங்கள் இதை செய்தால் மற்றவர்களை கவரலாம் தெரியுமா?

astrology

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் எந்த ராசிக்காரருக்கு என்ன சிறப்பான குணம் உள்ளது. அவர்களின் எந்த குணம் பிறரை கவரும் வகையில் இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamமேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை விடா முயற்சியே அவர்களுக்கு விஸ்வரூப வெற்றியை தேடி தரும். கிடைக்கும் சிறு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தும் அறிவுக்கூர்மை இவர்களிடம் உண்டும். இவர்களின் இந்த குணம் மற்றவர்களை இவர்கள் வசம் ஈர்க்கும் வகையில் இருக்கும். இவர்களின் பேச்சில் உள்ள நேர்மறை எண்ணங்கள் அடுத்தவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். எவ்வள்வு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை சரியாக யோசித்து நிதானமாக செய்து முடித்துக்காட்டக்கூடியவர்கள் மேஷ ராசி காரர்கள். நினைத்ததை சாதிக்கும் வரை போராடும் இவர்களின் குணம் அடுத்தவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

மேஷ ராசி பொதுவான குணங்களை அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும்

ரிஷபம்:
rishabamரிஷப ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு காலம் நேரம் எல்லாம் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து அதற்கு இவர்கள் உதவ வேண்டும் என்று நினைத்தால் இவர்களை யாராலும் தடுக்க முடியாது. இந்த குணமானது பலரை இவர்கள் வசம் ஈர்க்கும். அதே போல எந்த ஒரு விஷயமானாலும் அதை தள்ளிபோட்டுக்கொண்டே போக மாட்டார்கள். நன்றே செய் அதை இன்றே செய் என்னும் இயல்புடையவர்கள் இவர்கள். இதனால் இவர்கள் மேல் பிறருக்கு ஈர்ப்பு வரும்.

மிதுனம்:
midhunamமிதுன ராசிக்கார்களை பொறுத்தவரை தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும், தாங்கள் பேசுவோம் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்பும் ஒரு காரணம் இருக்கும். எதையும் நன்கு ஆராய்ந்து சிந்தித்து செயல்படும் குணம் உடையவர்கள் இவர்கள். இவர்கள் இப்படி இருப்பதாலேயே பலர் இவர்கள் வசம் ஈர்க்கப்படுவர். இவர்களுடைய பொறுப்பில் யாரை வேண்டுமானாலும் நம்பி விடலாம். தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல அவ்வளவு சௌகர்யமாக பிறரை பார்க்கும் மனம் இவர்களிடம் உண்டு. இதனால் பிறருக்கும் இவர்கள் மீது அன்பு ஏற்படும்.

கடகம்:
kadagamகடக ராசிக்காரர்கள் சற்று தாராள மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே போல இவர்கள் பிறரின் கருத்துகளை பொறுமையாக கேட்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக எத்தகைய பிரச்னையானாலும் அதில் அடுத்தவர்களின் கருத்துக்களை தெளிவாய் கேட்டு அதில் நியாயம் இருந்தால் அதற்கேற்ப நடந்துகொள்வார்கள். இந்த குணமானது பிறரை கவரும் வண்ணம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
simmamகடினமான விஷயத்தையும் துணிச்சலாக செய்ய சிம்ம ராசிக்காரர்களால் தான் முடியும். இவர்கள் இப்படி பல அசாத்தியமான செயல்களை செய்வதை கண்டு பலர் இவர்கள் மீது அன்பு கொள்வர். இவர்களை பொறுத்தவரை முடியாது என்ற ஒரு விஷயமே கிடையாது. தாங்கள் நினைத்ததை முடிக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போவார்கள்.

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்கள் பொதுவாக அன்பாக இருப்பார்கள். அதோடு எதையும் அன்போடு பிறருக்கு கற்றுக்கொடுப்பார்கள். இதனால் பிறருக்கு இவர்கள் மீது அன்பு ஏற்படும். இவர்கள் தினம் தினம் எதையாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். புத்தகத்தில் இருந்தோ அல்லது பிறரிடம் உரையாடியோ எதையாவது புதிதாக தெரிந்துகொள்வார்கள்.

கன்னி ராசி பொதுவான குணங்களை அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும்

துலாம்:
thulamதுலாம் ராசிக்காரர்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். இந்த காலத்தில் இப்படி ஒரு நியாயஸ்தனா என்பது போல பலர் இவர்கள் மீது அன்பு கொள்வர். நியாயம் கேட்டு இவர்களை நாடி வருபவர்களுக்கு எப்போதும் இவர்கள் நியாயம் தவறுவதில்லை. நீதி துறையில் இவர்கள் இருந்தால் நியாயத்திற்காக போராடுபவர்கள் அனைவருக்கும் இவரை பிடிக்கும்.

விருச்சிகம்:
virichigamவிருச்சிக ராசிக்காரர்களுக்கு பொதுவாக தோற்றம் நன்றாக இருக்கும். இவர்கள் தோற்றம் காரணமாகவே பிறர் ஈர்க்கப்படுவர். அதோடு இவர்கள் எப்போதும் தங்கள் உடல் நிலை மற்றும் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் எப்போதும் தங்களை மிகவும் அழகானவர் என்று எண்ணுபவர்கள். அதனால் பிறர் அழகாக இருந்தாலும் அதற்காக இவர்கள் பொறாமை கொள்வதில்லை.

தனுசு:
dhanusuதனுசு ராசிக்காரர்கள் எப்போது ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பு பல முறை யோசிப்பார்கள். ஆனால் ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை செய்து முடித்தே தீருவார்கள். இந்த குணமானது பிறரை கவரும் வகையில் இருக்கும். அதே போல எப்போதும் அமைதியாக காணப்பட்டாலும் ஆக்கப்பூர்வமான ஏதோ ஒன்றை இவர்கள் சிந்தித்த வண்ணம் இருப்பார்கள். பிறர் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டிய குணத்தில் இதுவும் ஒன்று.

மகரம்:
magaramமகர ராசிக்காரர்கள் எப்போதும் நண்பர்களுக்கு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். இவர்களின் இந்த குணமானது பிறரை கவரும் வண்ணம் இருக்கும். அதே போல இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். இரவு பகல் என்று பாராமல் உழைத்து தான் நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இவர்கள். இதை காணும் பலருக்கு இவர்கள் மீது ஈர்ப்பு வரும்.

மகர ராசி பொதுவான குணங்களை அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும்

கும்பம்:
kumbamகும்ப ராசிக்காரர்கள் பல நேரங்களில் பொறுமையின் சிகரமாக விளங்குபவர்கள். இந்த குணமானது பிறரை கவரும். எத்தைகைய பிரச்சனையாக இருந்தாலும் அதனை நிதானமாக பொறுமையோடு அணுகுவார்கள். அதே போல இவர்கள் சிறந்த கற்பனையாளர்கள். இவர்கள் கூறும் கதைகளும் எழுதும் கட்டுரைகளும் கவிதைகளும் பிறரை கவரும் வண்ணம் இருக்கும்.

மீனம்:
meenamமீன ராசிக்காரர்கள் பொதுவாக தனக்கு மட்டும் தான் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று என்னும் பொதுநல பண்பு கொண்டவர். இவர்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தாலும் அதை மன்னிக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். இந்த குணமானது பிறரை கவரும்.