எந்த ராசிக்கு, எந்த நட்சத்திரத்திற்கு, கண் திருஷ்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்? யாருக்கு எந்த முறையில் திருஷ்டியை கழிப்பது?

thirusti-rasi

கண்திருஷ்டி என்றால் பொதுப்படையாக எல்லோரையும் தாக்கக் கூடியது தான். இருப்பினும் குறிப்பாக இந்த ராசிக்கும், இந்த நட்சத்திரத்திற்கும் இன்னும் அதிக தாக்கத்தை கண்திருஷ்டியானது ஏற்படுத்தும் என்று ஜோதிடம் சொல்கிறது. கண் திருஷ்டியின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் கட்டாயம் அது உங்களைத் தாக்கும். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கண் திருஷ்டியும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால், நாம் எது இருக்கிறது என்று நினைக்கின்றோமோ, அதை தான் பிரபஞ்சம் நமக்கு தரும். எதை இல்லை என்று சொல்கிறோமோ பிரபஞ்சம் கட்டாயம் அதை நமக்கு தரவே தராது. இது அவரவர் மனதைப் பொறுத்தது. இதைத்தான் மனம் போல் வாழ்க்கை என்று சொல்லுகிறார்களோ! சரி. இப்போது கண்திருஷ்டி அதிகமாக தாக்கும் அந்த ராசி, நட்சத்திரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாமா?

Magaram rasi

நீங்கள் மகர ராசியாக இருந்தாலும், உங்களுக்கு மகர லக்னமாக இருந்தாலும் கட்டாயம் அதிகப்படியான கண்திருஷ்டி விரைவாகவே உங்களை தாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அடுத்ததாக சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி, சுவாதி, அவிட்டம், புனர்பூசம் இவர்கள் என்ன செய்தாலும், ஊர்க்கண் இவர்கள் மீது கட்டாயம் பட்டுவிடும். இந்த நட்சத்திரத்தை கொண்டவர்கள், எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் கண் திருஷ்டி படும்.

இவர்கள் படும் கஷ்டம் யார் கண்ணுக்கும் தெரியாது. ஆனால் ‘ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்’ என்ற வார்த்தைக்கு மட்டும் குறைவே இருக்காது. என்ன செய்வது? நீங்கள் பிறந்திருக்கும் நட்சத்திரம் அப்படி! பொதுவாகவே சனியின் நட்சத்திரம் கொண்ட இவர்கள் வாழ்க்கையில் அதிகப்படியான கஷ்டங்களை அனுபவித்து, அனுபவப் பாடங்களை படித்து, பல போராட்டங்களைக் கடந்து, படிப்படியாகத்தான் முன்னேறி வரும் சூழ்நிலை அமைந்திருக்கும். அப்படி இருந்தும் ‘இவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டத்தை அனுபவிக்காமல் வாழ்கிறார்கள்’ என்று ஊர் கண்  இந்த நட்சத்திர காரர்களின் மீதுதான் படும். முடிந்தவரைக்கும் மேற்குறிப்பிட்டுள்ள இந்த 6 நட்சத்திரக்காரர்களும் தயவுசெய்து உங்களது பெருமைகளை வெளியில் சொல்லவே சொல்லாதீர்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

araignaan kayiru

திருஷ்டிக்காக கையில் கருப்பு கயிறு கட்டிக்கொண்டு இருந்தாலும், அந்தக் கயிறு மிகவும் அழகாக உள்ளது என்று கண் திருஷ்டி வைத்தாலும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆண்கள் வலது காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும். பெண்கள் இடது காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும்.

- Advertisement -

சரி. இப்படி அதிகமாக கண்திருஷ்டி படுபவர்களுக்கு என்னதான் தீர்வு? ஒரு வழி உள்ளது. காவல்தெய்வங்கள் கோவிலுக்கு செவ்வாய்க் கிழமைகளிலும் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளிலும் சென்று மந்திரித்து வரவேண்டும். அல்லது அம்மன் கோவில்களுக்கு சென்று மந்திரித்து கொண்டுவரலாம். வேப்பிலையும் அடித்துக் கொள்ளலாம் தவறில்லை.

neem-tree2

அடுத்ததாக ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதையம், விசாகம் இந்த நட்சத்திரத்தை கொண்டவர்கள் மசூதிக்கு சென்று மந்திரித்து கொண்டால் நல்ல பலன் உண்டு. அஸ்வினி, மகம், மூலம் கேதுவின் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, மசூதிக்கு சென்று திருஷ்டி கழித்துக் கொள்ளுங்கள்.

மகம், கேட்டை, பரணி, உத்திரட்டாதி, ரோகிணி, அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு உப்பு சுற்றி திருஷ்டி கழிக்க கூடாது. மாறாக கற்பூர திருஷ்டி கழிக்கலாம். கோவிலுக்கு, தர்காவிற்கு சென்று மந்திரித்து கொள்ளலாம். இவர்களுடைய வீட்டில் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் உப்பைக் கொட்டி வைத்துவிட்டு, 7 நாட்களுக்கு ஒரு முறை அந்த உப்பை புதியதாக மாற்றிக்கொள்ளலாம். பழைய உப்பை தண்ணீரில் கரைத்து விடலாமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் இந்த நட்சத்திர காரர்களுக்கு உப்பு சுத்தி போடுவதை தவிர்த்து கொள்ளுவது நல்லது.

salt

கார்த்திகை, ரேவதி, பூரம், மூலம், மிருகசிரிஷம் நட்சத்திர காரர்களுக்கு மிளகாய் சுற்றி போடக்கூடாது. கற்பூர திருஷ்டி கழிக்க கூடாது. மாறாக உப்பு சுற்றி போட்டுக் கொள்ளலாம். தர்காவிற்கு, கோவிலுக்கு சென்று மந்திரத்துக் கொள்ளலாம். சில நட்சத்திரத்திற்கு சில பொருட்கள் ஆகாது என்ற பட்சத்தில்தான் ஜோதிடத்தில் இந்த முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பிக்கை உள்ளவர்கள் இவைகளை பின்பற்றிக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குபேர மூலையில் இந்த பொருட்களை வைத்தால் கஷ்டம் வரும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to remove kan thirusti. Thirusti in Tamil. Thirusti pariharam in Tamil. Kan thirusti neenga Tamil. Kan thirusti remedies Tamil.