வாயில் போட்ட உடனே அப்படியே காரையும். ‘ரேஷன் அரிசியில் பூண்டு முறுக்கு’ ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.

murukku2
- Advertisement -

நிறைய பேருக்கு ரேஷன் அரிசி என்று சொன்னாலே பயம் வந்துவிடும். அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமா என்று. உண்மையிலேயே உடலுக்கு சத்து தரக்கூடிய பாலிஷ் போடாத அரிசி என்றால் அது ரேஷன் அரிசி தான். உங்கள் வீட்டில் இருக்கும் ரேஷன் புழுங்கல் அரிசியை வைத்து சூப்பரான பூண்டு முறுக்கு சுடுவது எப்படி தெரிந்து கொள்வோமா. இந்த முறுக்கை செய்து சாப்பிட்டு பாருங்கள். ரேஷன் அரிசி வாடையும் வீசாது. சுவையிலும் எந்த வித்தியாசமும் இருக்காது.

முதலில் 10 லிருந்து 12 வரை வரமிளகாயை தண்ணீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, அந்த மிளகாய்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இந்த மிளகாய்களோடு 15 பல் தோல் உரித்த பூண்டையும் சேர்த்து மொழுமொழுவென அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ரேஷன் புழுங்கல் அரிசியில் 1 படி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். கிலோ கணக்கில் என்று பார்த்தால் 1 கிலோ அளவு ரேஷன் அரிசிக்கு, 1/4 கிலோ அளவு பொட்டுகடலை நமக்கு தேவைப்படும். முதலில் புழுங்கலரிசியை எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் புழுங்கலரிசி ஊறிய பின்பு, அதில் கொஞ்சம் கல் உப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

murukku3

இந்த அரிசியை கிரைண்டரில் போட்டு, கொஞ்சம் கட்டியாக தண்ணீர் தெளித்து மொழுமொழுவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கிரைண்டரில் அரிசியை போட்டவுடன், மிக்ஸி ஜாரில் அரைந்து வைத்திருக்கிறோம் அல்லவா மிளகாய் பூண்டு விழுது, அதையும் கிரைண்டரில் உள்ள மாவோடு போட்டு விடுங்கள். கிரைண்டரில் மாவு அரைந்து கொண்டே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக 1/4 கிலோ அளவு பொட்டுக்கடலையை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

murukku2

கிரைண்டரில் மாவு மொழுமொழுவென அரைந்த பின்பு, அதை ஒரு அகலமான பாத்திரத்தில் வழித்து கொள்ளுங்கள். இந்த மாவில் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவு சீரகம் – 2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்தப் பொருட்களையெல்லாம் முறுக்கு மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

muruku4

இறுதியாக 4 ஸ்பூன் நெய்யை உருகி இதோடு சேர்த்து விடுங்கள். ஒரு குழி கரண்டி அளவு சூடான எண்ணெயை இதோடு சேர்த்து இந்த மாவை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கொதிக்க கொதிக்க எண்ணெயையும் நெய்யையும் ஊற்றி விட்டு கையை வைத்து விடாதீர்கள் ஜாக்கிரதை.

muruku2

ஒருவேளை உங்களுக்கு முறுக்கு மாவு ரொம்ப தளதளன்னு மாறி இருந்தால், இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம். இப்போது நமக்கு முறுக்கு மாவு தயார் ஆகிவிட்டது.

murukku4

எப்போதும்போல அச்சில் முறுக்கு மாவை போட்டு பிழிந்து எண்ணெயில் விட்டு சிடசிடப்பு அடங்கும்வரை பொன்னிறமாக பொரித்து எடுத்து ருசித்துப்பாருங்கள். இது ரேஷன் அரிசியில் செய்த முறுக்கு மாதிரி இருக்கா என்று. நிச்சயமா சொல்ல முடியாதுங்க. வாயில் போட்ட உடனே கரையும். மேலே சொன்ன அளவுகளில் பக்குவமாக இந்த முறுக்கை முயற்சி செய்து பாருங்கள். சூப்பர் முறுக்கு தயார். வரப்போற தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க.

- Advertisement -