இனி இட்லிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்கவே வேணாம், ரேஷன் அரிசி, உளுந்தை வைச்சு ரொம்ப சுலபமா இந்த இன்ஸ்டன்ட் மாவை ரெடி வைச்சிட்டு டென்ஷன் இல்லாம இருங்க.

- Advertisement -

வீட்டில் பெண்கள் அதிக நேரம் செலவழித்து செய்யும் வேளைகளில் ஒன்று இட்லிக்கு மாவு அரைப்பது. அதற்கு அரிசி, உளுந்தின் அளவை சரியாக சேர்த்து பக்குவமாக அரைத்து எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் நேரம் இல்லாத காரணத்தால் கடைகளில் கிடைக்கும் பாக்கெட் மாவுகளை வாங்கி பயன்படுத்தி தொடங்கி விட்டார்கள். ரேஷன் அரிசி, பருப்பில் சுலபமாக வீட்டில் இன்ஸ்டன்டாக இந்த மாவை அரைத்து வைத்துக் கொண்டால்,அடிக்கடி இந்த மாவை அரைக்க கஷ்ட பட வேண்டியது இல்லை.இதே மாவில் இட்லி தோசை ஊற்றிக் கொள்ளலாம் அது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கான பற்றிய பதிவு தான் இது.

இதற்கு ரேஷன் புழுங்கல் அரிசி அரை கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ரேஷன் பச்சரிசி அரை கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அளவு சரியாக இருக்கும் இந்த அரிசியை நன்றாக சுத்தம் செய்து குறைந்தது நான்கு முறையாவது தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் ரேஷன் உளுந்து கால் கிலோ எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் மூன்று டேபிள் ஸ்பூன் வெந்தியமும் சேர்த்து, இதையும் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அரிசி, உளுந்து இரண்டையும் ஒரு மெல்லிய காட்டன் துணி விரித்து அதில் கொட்டி நல்ல வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அரிசியில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் நல்ல மொடமொடப்பாக காய வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது காய வைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு 100 கிராம் வெள்ளை அவல் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக மாவு அரைக்கும் மிஷினில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை நன்றாக ஆற வைத்து மூடி போட்ட பாத்திரத்தில் கொட்டி எடுத்து வைத்து விடுங்கள். இந்த மாவு சீக்கிரத்தில் கேட்டு போகாது.

நீங்கள் இட்லி ஊற்றுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு தேவையான அளவு மாவை எடுத்து அத்துடன் மாவிற்கு தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து கைகளால் நன்றாக அடித்து மாவை கரைத்து வைத்து விட்டால், மாவு புளித்து பொங்கி வரும். இந்த மாவில் செய்யும் இட்லி நல்ல சாஃப்ட்டாக இருக்கும். இதே மாவில் தோசையும் ஊற்றலாம்.

இந்த முறையில் இன்ஸ்டன்ட் மாவை அரைத்து வைத்துக் வைத்துக் கொண்டால் போதும் வேலைக்கு செல்பவர்களுக்கு எல்லாம் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். மாதத்தில் ஒரு முறை இப்படி அரைத்து வைத்துக் கொண்டால் கூட போதும், மாதம் முழுவதும் வீட்டில் இட்லி தோசை செய்ய மாவு பிரச்சினை வரவே வராது.

- Advertisement -