1 கப் ரேஷன் கோதுமை மாவு இருந்தால் போதும் ஹோட்டல் சுவையில் மொறுமொறு கோதுமை தோசை இப்படிக் கூட சுடலாம்!

wheat-gothumai-dosai
- Advertisement -

ஒரு கப் ரேஷன் கோதுமை மாவு இருந்தால் போதும் சுவையான, சூடான மொறுமொறு கோதுமை தோசை ஹோட்டல் சுவையில் இப்படி கூட நாம் தயாரிக்கலாம். ரேஷன் கடையில் வாங்கிய கோதுமை மாவு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அதே போல் வீட்டில் அரைக்கும் கோதுமை மாவும் தரமானதாக, சுவையுள்ளதாக இருக்கும். இந்த தோசை மாவில் அப்படியே தோசை வார்த்தால் சாப்பிட யாருக்குமே பிடிக்காது! ஆனால் இது போல செய்து பாருங்கள், எல்லோருமே இதைத்தான் இனி அடிக்கடி கேட்பார்கள். உடல் எடையை கணிசமாக குறைக்கவும், கோடை காலத்தில் ஆரோக்கியம் பலமாகவும் கோதுமை தோசை எப்படி சுடுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, தக்காளி – ஒன்று, நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, நறுக்கிய கொத்தமல்லி தழை – கொஞ்சம்.

- Advertisement -

கோதுமை தோசை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்த பின்பு தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி கட்டிகளில்லாமல் நன்கு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு, அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த பின் கடுகு போட்டு பொரித்துக் கொள்ளுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்பு கடலைப் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பருப்பு வகைகள் வறுபட்டதும் தேவையான அளவிற்கு பெருங்காயத்தூள் தூவி கொள்ளுங்கள். பின்பு தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சித் துண்டுகள் அல்லது துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தக்காளியை நன்கு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து மசிய வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கி வரும் பொழுது நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த பொருட்களை எல்லாம் மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு தோசைக் கல்லை சுட வையுங்கள். மாவுடன் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்த பின்பு மெல்லியதாக தோசையை ஊற்றி பரப்புங்கள். இதில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியம் நிறைந்த மொறுமொரு கோதுமை தோசை ரொம்பவே சுலபமாக தயாரித்து விடலாம்! இதே போல நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -