ரேஷன் ரவையில் சூப்பரான புசுபுசு பூரி இப்படி செஞ்சு பாருங்க. இது ரவையில் சுட்டு எடுத்த பூரின்னு சொன்னா கூட யாருமே நம்ப மாட்டாங்க.

rava-poori
- Advertisement -

பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் எல்லோர் வீட்டிலும் ரவை வாங்கி இருப்போம். அந்த ரவை ரொம்பவும் நைசாக உள்ளது. அதை வைத்து உப்புமா செய்தால் கொழகொழப்பாக இருக்கும்‌. இந்த ரவையை வைத்து புசுபுசுவென பூரி செய்தால் சூப்பராக இருக்குமே. வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். ரவையும் வீணா போகாமல் இருக்கும். இந்த பூரி ரெசிபியை உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா வாங்க பாக்கலாம். இந்தப் பூரியை ரவையில் சுட்ட பூரி என்று யாரிடமும் சொல்லாதீங்க. யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.

ரேஷன் ரவையில் இருந்து தேவையான அளவு அளந்து எடுத்து தனியாக ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். ரவை 2 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி எப்போதும் போல இந்த ரவையை பூரி மாவு போல பிசைய தொடங்க வேண்டும்.

- Advertisement -

மொத்தமாக தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. கொஞ்சம் தளதளவென இந்த ரவையை பிசைந்து ஒரு மூடி போட்டு 20 நிமிடங்கள் போல அப்படியே மாவை ஊற விட்டு விடுங்கள். ரவை தண்ணீரை உறிஞ்சி மாவு சரியான பக்கத்திற்கு வரும். மாவு ஊறியதும் நீங்கள் மாவை கையில் எடுத்துப் பார்த்தால் கோதுமை மாவு, மைதா மாவில் பிசைந்த மாவு போலவே இருக்கும். அதன் பின்பு மீண்டும் இந்த மாவை ஒரு முறை அழுத்தம் கொடுத்து உங்கள் கைகளால் பிசைந்து விடுங்கள்.

மாவில் தேவையான சைஸில் உருண்டைகளை உருட்டி கொள்ளுங்கள். அதன் பின்பு மைதா அல்லது கோதுமை மாவில் இந்த உருண்டைகளை தொட்டு, எப்போதும்போல பூரியை தேய்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தொட்டும் பூரியை தேய்த்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், இந்த பூரியை எண்ணெயில் போட்டு லேசாக கரண்டியை வைத்து அழுத்தம் கொடுத்தால் போதும். பூரி புசுபுசுவென உப்பி அழகாக வரும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்க வைத்து எடுத்து தொட்டுக்கொள்ள உங்கள் விருப்பம்போல குருமா, கிரேவி, மசாலா எதை வைத்து வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம்.

உங்க வீட்டில் ரேஷன் ரவை இல்லை என்றாலும் கவலை வேண்டாம். வீட்டில் நாம் உப்புமா செய்வதற்காக வைத்திருக்கும் ரவையை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி அந்த ரவையை வைத்து, இந்த பூரி செய்தாலும் சுவையாகத்தான் இருக்கும். கொஞ்சம் வித்தியாசமான பூரியை ஒருமுறை நம்முடைய வீட்டில் ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே.

- Advertisement -