1 கைப்பிடி ரேஷன் கோதுமை இருந்தால் போதும். அடிக்கிற வெயிலில் இதுவரை பூக்காத ரோஜா செடியில் கூட கொத்துக்கொத்தாக மொட்டுகள் வைத்து பூக்கள் பூக்கும்.

rose
- Advertisement -

வீட்டில் ரோஜா செடியை வைத்து பராமரிப்பவர்களுக்கு இந்த வெய்யில் காலம் வந்து விட்டாலே கஷ்டம்தான். ரோஜாச்செடி வாடிப்போய் விடும். என்னதான் தண்ணீர் ஊற்றி அதை பத்திரமாக பார்த்துக் கொண்டாலும் ரோஜா செடிகளால் இந்த வெயிலை தாங்கிக்கொள்ளவே முடியாது. நிழல் இருக்கும் இடத்தில் செடியை மாற்ற முடியும் என்றால் நேரடி உச்சிவெயிலில் செடியை வைக்காமல் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் எல்லோராலும் செடியை ஒரு இடத்திலிருந்து மாற்றி மாற்றி வைக்க முடியாது அல்லவா. உங்களுடைய ரோஜா செடிகள் அடிக்கிற வெயிலில் கூட செழிப்பாக வளர்ந்து கொத்துக்கொத்தாக பூக்களை கொடுக்க, ரோஜா செடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கோதுமையை வைத்து ஒரு உரம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதற்கு ரேஷன் கோதுமை போதுமானது. ரேஷன் கடையிலிருந்து வாங்கிய கோதுமையை ரைஸ் மில்லில் கொடுத்து கோதுமை மாவை அரைத்து வைத்துக் கொண்டாலும் சரி. அப்படி இல்லை என்றால் கோதுமை மாவை தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு தேவைப்படும் போது அரைத்துக் கொண்டாலும் சரி. அது அவரவர் சௌகரியம் தான்.

- Advertisement -

1 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக் கொண்டால், அதே கப்பில் 1/2 கப் அளவு நாட்டு சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டுசர்க்கரை இல்லாதவர்கள் வெல்லத்தை பொடித்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவையும், நாட்டுச் சர்க்கரையையும் போட்டு இந்த இரண்டு பொருட்களும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்து ஒரு மூடி போட்டு வெயில் படாத இடத்தில் ஓரமாக வைத்து விடுங்கள். (கட்டாயம் இந்த டப்பாவை மூடி வைக்கவேண்டும். திறந்து வைக்கக்கூடாது.)

இந்த கலவையானது 7 நாட்களில் இருந்து 10 நாட்கள் நன்றாக அப்படியே புளித்து வர வேண்டும். அப்போதுதான் இதில் நல்ல நுண்ணுயிரிகள் உருவாகும். தினம்தோறும் மூடியை திறந்து ஒரு குச்சியை வைத்து இந்த கலவையை ஒரு முறை கலந்து விட்டுக் கொண்டே வரவேண்டும். ஏழு நாட்கள் கழித்து நமக்கு உரம் தயாராகி இருக்கும் அல்லவா. ஏழாவது நாளும் மூடியைத் திறந்து உரத்தை ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். இந்த உரத்தை செடிகளுக்கு எப்படி கொடுப்பது.

- Advertisement -

5 லிட்டர் அளவு தண்ணீருக்கு 1/2 லிட்டர் இந்த உரத்தை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு இந்த தண்ணீரை ரோஜா செடிகளுக்கு வேர் பகுதிகளில் 1/2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். காலை அல்லது மாலை சூரியன் இல்லாத சமயத்தில் இந்த உரத்தை செடிகளுக்கு ஊற்றுங்கள்.

15 நாட்களுக்கு ஒருமுறை எல்லா ரோஜா செடிகளுக்கும் இந்த உரத்தை கொடுத்து வரும்போது வெயில் காலத்திலும் உங்கள் வீட்டு ரோஜா செடி வாடாமல் செழிப்பாக பச்சைபசேலென வளரத் தொடங்கும். அதேசமயம் மொட்டுகள் இல்லாத ரோஜா செடியில் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கத் தொடங்கும். ரோஜா செடிக்கு மட்டும் அல்ல. மற்ற பூச்செடிகள், காய்கறி செடிகளுக்கும் இந்த உரத்தை தாராளமாக ஊற்றலாம். ஆசையாக வைத்த செடிகளிடம் ஒரு சில வார்த்தைகளை கூடவே நீங்கள் கொஞ்ச நேரம் பேசிப் பாருங்கள். அந்த செடி இன்னும் வேகமாக செழிப்பாக வளர தொடங்கிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -