உங்கள் பூச்செடி, காய்கனி செடி வைத்திருக்கும் மண்ணில் வளம் அதிகரிக்க மைக்ரோ ஆர்கன்ஸ் பெருக ரேஷன் கடை கோதுமை ஒரு கைப்பிடி போதுமே!

wheat-rose-plant
- Advertisement -

ரேஷன் கடையில் கொடுக்கும் கோதுமையில் இருந்து ஒரு கைப்பிடி எடுத்து வளர்ச்சி ஊக்கியாக எப்படி எல்லா வகையான செடிகளுக்கும் பயன்படுத்துவது? ஒரு செடியை வைக்கும் பொழுது அதன் மண்ணின் வளம் தரமானதாக இருக்க வேண்டும். பூச்செடி, காய்கறி செடி அல்லது பழ வகையான செடிகள் எதுவாயினும் அதற்குரிய மண்ணின் வளம் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருந்தால் எந்த வித தடைகளும் இல்லாமல் நமக்கு சத்தான காய்கனி மற்றும் பூக்களைக் கொடுக்கும். இப்படி மண்ணின் தரம் சரியில்லாத பொழுது அதில் மைக்ரோ ஆர்கன்ஸ் பெருக செய்யக் கூடிய அற்புதமான ஆற்றல் இந்த கோதுமைக்கு உண்டு. அதை எப்படி இயற்கை முறையில் பத்து பைசா செலவில்லாமல் வீட்டிலேயே உரமாக கொடுப்பது? என்பதைத் தான் நாம் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடி, காய்கறி செடி, பழச்செடி வைத்திருப்பவர்கள் அதன் மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்ய கண்டிப்பாக அவ்வப்போது ஏதாவது ஒரு இயற்கையான உரத்தைக் கொடுத்து வந்தாலே போதும். இதற்காக அதிக அளவு செலவு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. வீட்டில் மிச்சமாகும் காய்கறி கழிவுகள், பழக் கழிவுகள், டீ தூள், முட்டை ஓடு, வேக வைத்த தண்ணீர் என்று எதுவாக இருந்தாலும் அதை மக்க வைத்து உரமாக கொடுக்கலாம்.

- Advertisement -

இப்படி அடிக்கடி செய்ய முடியாதவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்ய ஒரு கைப்பிடி அளவுக்கு ரேஷன் கோதுமையை சுத்தம் செய்து தரமானதாக எடுத்துக் கொள்ளுங்கள். கோதுமையை மாவாக அரைத்தும் இந்த உரத்தை நீங்கள் தயாரிக்கலாம். முழுமையாக இருந்தால் ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். நன்கு ஊறிய பின்பு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த விழுதுடன் அரை கப் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் கோதுமை மாவு இருந்தாலும் அரை கப் அளவிற்கு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் வரை ஊற்றி நன்கு ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை புளிக்க விட்டு விடுங்கள். இது இயற்கையாகவே தயாரிக்கக் கூடிய ஒரு வளர்ச்சி ஊக்கி என்பதால் இதில் எவ்விதமான துர்நாற்றமும் வீசாது. ஆனால் இதில் நிறைய ஈக்கள் மொய்க்கும் என்பதால் இதை ஒரு மெல்லிய துணி போட்டு இறுக்கமாக மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

10 நாட்களுக்கு பிறகு நன்கு புளித்து அதில் நல்ல நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகியிருக்கும். இந்த வளர்ச்சி ஊக்கியை இப்போது கட்டிகள் எதுவும் இல்லாமல் நன்கு கலந்து விட வேண்டும். பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது மூடியைத் திறந்து கண்டிப்பாக ஒரு குச்சி அல்லது கரண்டியை வைத்து நன்கு கலந்து விட வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள். ஐந்து லிட்டருக்கு இந்த வளர்ச்சி ஊக்கி அரை லிட்டர் அளவிற்கு சேர்க்க வேண்டும்.

இப்போது நன்கு கலந்து உங்களுடைய எல்லா வகையான செடிகளுக்கும் அரை லிட்டர், அரை லிட்டர் அளவிற்கு வேர் பகுதியில் ஊற்றி விடுங்கள். ஊற்றுவதற்கு முன்னர் மண்ணை நன்கு காற்றோட்டமாக கைகளால் கிளறி விட்டு விடுங்கள். அதன் பிறகு அரை லிட்டர் அளவிற்கு இதை ஊற்றி விடுங்கள். மண்ணின் வளம் நன்கு செழித்து வர ஆரம்பிக்கும். இதனால் புதிய தளிர்கள் முளைத்து ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக உங்களுக்கு பூக்களும், காய், கனிகளும் காய்க்க ஆரம்பிக்கும்.

- Advertisement -