கத்திரிக்காய் மசாலா கிரேவியை ஒரு முறை இப்படி செஞ்சி குடுத்தீங்கன்னா, கத்திரிக்காயே பிடிக்காது என்பவர்களுக்கு கூட, இது பெவரிட் டா இருக்கும். பிரியாணி முதல் தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் ஏற்ற பக்கா சைடு டிஷ்.

- Advertisement -

காய்கறியிலே இந்த கத்திரிக்காயை மட்டும் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு இருக்கும். ஆனால் சிலருக்கு இந்த கத்திரிக்காய் என்றாலே அலர்ஜி தான் அப்படியானவர்கள் கூட இந்த முறையில் கத்திரிக்காய் மசாலா செய்து கொடுத்துப் பாருங்கள, விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அப்படி ஒரு அருமையான ரெசிபி தான் இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கத்திரிக்காய் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் -1/2 கிலோ, தனியா -2 டீஸ்பூன், வேர்க்கடலை – 2 டீஸ்பூன், வெள்ளை எள் – 2 டீஸ்பூன், சீரகம் -2 டீஸ்பூன், சோம்பு – டீஸ்பூன், பட்டை -1 துண்டு, ஏலக்காய் – 2, கிராம்பு -2, முந்திரி -10, வெங்காயம் – 1, பூண்டு -10 பல், மிளகாய்த் தூள் – 1டீஸ்பூன், கரம் மசாலா -1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், புதினா இலைகள் -10, கொத்தமல்லி -1கைப்பிடி, தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன்.

- Advertisement -

கத்திரிக்காய் மசாலா கிரேவி செய்முறை விளக்கம்:
இதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து சூடானவுடன் தனியா, வேர்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள் இவை வறுபட்டவுடன் எள், பட்டை, இலவங்கம், ஏலக்காய், சீரகம், சோம்பு, முந்திரி அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு இவையெல்லாம் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

ஆற வைத்த மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். இத்துடன் வெங்காயத்தை, பெரிய துண்டுகளாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பூண்டு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, புதினா இலை, கொத்தமல்லி, தேங்காய் துருவல் என அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரை கிலோ கத்திரிக்காயை காம்பு நீக்காமல், அடி புறமாக நாளாக கீறி அதனுள் அரைத்த மசாலாக்களை வைத்து ஒரு தட்டில் வைத்து விடுங்கள். இதில் வைத்தது போக, மீதி மசாலா இருக்கும் அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் சமைக்க போது தேவைப்படும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றிய பிறகு மசாலா வைத்த கத்தரிக்காயை அதில் சேர்த்து கொள்ளுங்கள். அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து தட்டு போட்டு மூடி 10 நிமிடம் வரை அப்படியே வேகட்டும். இடை இடையே கத்திரிக்காவை லேசாக திருப்பித் போட்டு விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து கத்திரிக்காய் பாதி அளவு வெந்திருக்கும். அதன் பிறகு மீதம் இருக்கும் மசாலாக்களை இதில் சேர்த்து உப்பை ஒரு முறை சரிபார்த்துக் சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சுவையான காரசாரமான பூண்டு தொக்கு 15 நிமிடத்தில் இப்படி செஞ்சா இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக்க அடிச்சிக்கவே முடியாதே!

ஐந்து நிமிடம் கழித்து எண்ணெய் திரண்டு வந்திருக்கும். உங்களுக்கு இந்த கத்திரிக்காய் தொக்கு எந்த பதத்திற்கு வேண்டுமோ இறக்கிக் கொள்ளலாம். கொஞ்சம் கிரேவியாக வேண்டுமென்றால் ஐந்து நிமிடத்தல் இறக்கி விடுங்கள். இன்னும் கொஞ்ச கெட்டியாக வேண்டும் என்றால் சுண்ட விட்டு எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -