ஒரு கப் ரவை இருந்தா உளுந்தே சேர்க்காமல் உளுந்த வடைய நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்பியா அதுவும் சட்டுனு செஞ்சிடலாம். இனி மெதுவடை சாப்பிடும் ஆசைப்பட்டா காத்திருக்காம உடனே இப்படி சுட்டு சாப்பிடுங்க.

vadai recipe
- Advertisement -

பொதுவாக வீட்டில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்த அதிலும் ஸ்நாக்ஸ் வகைகளில் ஏதாவது ஒன்று என்றால் முதலில் தோன்றுவது இந்த வடை தான். இந்தப் பழக்கம் இன்று புதிதாய் தொடங்கிய பழக்கம் கிடையாது. நம்முடைய பழங்காலத்திலிருந்து எந்த ஒரு விசேஷமான நாட்களிலும் சமையலில் வடை நிச்சயம் இருக்கும். அதே போல் சாதாரணமான நேரங்களில் சுலபமாக ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்வது என்றால் அதிலும் இந்த வடை தான் பிரதானமாக இருக்கும். அப்படியான இந்த வடையை செய்ய இதுவரை நாம் பருப்பு ஊற வைத்து அதன் பின் அரைத்து என்று தான் செய்திருக்கிறோம். இனி அப்படி இல்லாமல் நினைத்தவுடன் சட்டுன்று செய்து சாப்பிடக் கூடிய ஒரு வடை ரெசிபியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருள்கள்

ரவை – 1 கப், தயிர் – 3/4 கப், மீடியம் சைஸ் வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, உப்பு – 1/4 டீஸ்பூன், ஆப்ப சோடா மாவு -1 பின்ச், கருவேப்பிலை கொத்தமல்லி – 1 கைப்பிடி பொரித்தெடுக்க எண்ணெய்.

- Advertisement -

செய்முறை 

இந்த வடை செய்ய மிக்ஸி ஜாரில் முதலில் ரவையை பைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த ரவையை ஒரு பவுலில் மாற்றிய பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு தயிர் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து விடுங்கள். இப்போது இது சப்பாத்தி மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக தான் இருக்கும். இதை அப்படியே தட்டு போட்டு 20 நிமிடம் வரை மூடி வைத்து விடுங்கள்.

இந்த நேரத்திற்குள்ளாக வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி என அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து அரிந்து வைத்த இந்த பொருட்களை எல்லாம் ஏற்கனவே நாம் தயார் செய்து வைத்த மாவில் சேர்த்து ஆப்ப சோடா மாவையும் சேர்த்து நன்றாக பிசைந்து விடுங்கள் அவ்வளவு தான் வடைக்கான மாவு தயாராகி விட்டது.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு கையில் கொஞ்சமாக தண்ணீரை தொட்ட பிறகு பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து நம் மெதுவடை சுடுவது போல நடுவில் துளை போட்டு சூடாக இருக்கும் எண்ணெயில் ஒவ்வொன்றாக சேர்த்த பிறகு ஒரு புறம் சிவந்தவுடன் திருப்பி வடை எடுத்து விடுங்கள். சுட சுட கிரிஸ்பியான ரவை வடை தயார்.

இதையும் படிக்கலாமே: வீட்டில நெல்லிக்காய் இருக்கா? யாருமே அதை சாப்பிட மாட்டேங்கிறாங்க? அப்போ இப்படி துவையல் செஞ்சு கொடுங்க. சட்டுனு துவையல் காலி ஆயிடும்.

பொதுவாகவே நம் மெதுவடை செய்யும் போது ரவை கொஞ்சம் சேர்த்தால் வடை நல்ல கிரிஸ்பியாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த முறையில் ரவையை வைத்தே இந்த வடையை செய்யும் போது அது மேலும் சுவையாகவும் அதே நேரத்தில் நல்ல மொறுமொறு வென்றும் இருக்கும். அது மட்டுமில்லாமல் இந்த முறையில் வடை செய்வது மிகவும் சுலபம். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -