ஃப்ரிட்ஜில் இட்லி தோசைக்கு மாவு இல்லையா. உடனடியாக 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து அசத்துங்க.

paruppu-adai
- Advertisement -

எப்போதுமே இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா. கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே டக்குனு இப்படி ஒரு அடை செய்து சாப்பிட்டு பாருங்கள். இதன் ருசி சூப்பரா இருக்கும். காலை நேரத்தில் மிக மிக எளிமையாக நாவிற்கு ருசி தரக்கூடிய ஒரு ரெசிபி தான் இது. குறிப்பை படித்து பாருங்கள். பிடித்திருந்தால் ஒரே ஒருமுறை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் இந்த அடையை வாரத்தில் ஒரு நாள் ஆவது செய்து சாப்பிடுவீங்க.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரமிளகாய் – 4, சீரகம் 1 ஸ்பூன், தோல் சீவியை இஞ்சி – 1 இன்ச், கருவேப்பிலை – 1 கொத்து, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு ஓட்டு ஓட்டிக்கோங்க. எல்லா பொருட்களும் கொரகொரப்பாக அறைந்து வந்த பிறகு, இதில் 1 – கப் அளவு ரவையை சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் ரவையை அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த கலவையை அகலமான ஒரு பாத்திரத்தில் கொட்டி 2 கப் – அளவு பச்சரிசி மாவு போட்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, தக்காளி பழம் – 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து பாருங்கள், மசாலாவில் சேர்த்த உப்பு போதுமானதாக இருந்தால், விட்டுவிடலாம். உப்பு தேவை என்றால் இந்த இடத்தில் போட்டுக் கொள்ளலாம். (மாவு ஓரளவுக்கு திக்காக இருக்க வேண்டும் ரொம்பவும் தனியாக கரைக்கக் கூடாது. இந்த கப்பில் ரவை எடுத்தீர்களோ அதில் 1 1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

அவ்வளவுதான். அடை வார்ப்பதற்கு தேவையான மாவு தயார். அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி துடைத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த மாவை எடுத்து ஊற்றி திக்காக அடை போலவே வார்த்து எண்ணெய் ஊற்றி சிவக்க விட்டு, இரண்டு பக்கம் திருப்பி போட்டு, பொன்னிறம் வந்தவுடன் எடுத்து சுவைத்து பாருங்கள். இது வெறுமனே சாப்பிட்டாலே ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும்.

- Advertisement -

தேவைப்பட்டால் இதை மாலை நேர ஸ்நேக்ஸ் ஆக கூட செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நிறைவான உணவாக இருக்கும். உங்களுக்கு இந்த சுலபமான ரெசிபி பிடிச்சிருந்தா ஒரே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: இனி இட்லிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்க வேண்டிய அவசியமே இல்லை, நினைச்ச உடனே சட்டுனு பஞ்சு போல இட்லி ரெடி பண்ணலாம். எப்படின்னு தானே யோசிக்கிறீங்க ? அப்ப வாங்க உடனே தெரிஞ்சிக்கலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள பெரும்பாலும் எதுவும் தேவைப்படாது. விருப்பப்பட்டால் காரச் சட்னி வையுங்க. செம்ம அட்டகாசமான சுவை கிடைக்கும். இன்னும் இதில் ஆரோக்கியம் சேர்க்க வேண்டும் என்றால் துருவிய துருவிய கேரட் அல்லது பொடியாக நறுக்கிய சிறுகீரை, முருங்கைக்கீரை கூட சேர்த்து செய்யலாம். அதுவும் நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -