10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்பெஷல் கார சட்னி ரெசிபி. ரசிச்சு ரசித்து சாப்பிடலாம்

milagai-kara-chutney_tamil
- Advertisement -

கார சட்னி செய்வது எப்படி | Kara chutney recipe in Tamil

இட்லி, தோசைக்கு கார சட்னியை விட அடிச்சுக்க எந்த சட்னியும் இல்லை என்றே கூறலாம். உஸ்…. உஸ்…. என்று கண்களில் கண்ணீர் வர சாப்பிட்டாலும் இன்னும் வேண்டும் என்று கேட்கத் தூண்டும் இந்த காரசாரமான சுவையான ஸ்பெஷல் கார சட்னி இருந்தால் எவ்வளவு இட்லி வேண்டுமானாலும் சலிக்காமல் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். அசத்தலான இந்த காரச்சட்னி ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை இனி தொடர்ந்து காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 15, பூண்டு – 25 பற்கள், பழுத்த தக்காளி பழம் – இரண்டு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் காரத்திற்கு ஏற்ப 15 லிருந்து 20 வர மிளகாய்களை அதாவது நீட்டு மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். குண்டு மிளகாய் வேண்டாம். காம்பு நீக்கி சேர்த்து நன்கு உப்பி வர வதக்கி விடுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் கருகாது.

அதன் பிறகு ஒரு கைப்பிடி அளவிற்கு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்கள் நன்கு சுருள வதங்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் பழுத்த பெரிய தக்காளி பழம் இரண்டை நன்கு சுத்தம் செய்து கழுவி பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்குங்கள். தக்காளி மசிய வதங்குவதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி மசிந்து வரும் பொழுது அடுப்ை அணைத்து நன்கு ஆறவிட்டு விடுங்கள்.

- Advertisement -

பிறகு மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இதில் தண்ணீர் எதுவும் நீங்கள் சேர்க்கக்கூடாது. பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எப்பொழுதும் பூண்டு மிளகாய் சட்னி போன்றவற்றை அரைக்கும் பொழுது நல்லெண்ணெய் சேர்த்து அரைக்கும் போது தான் அதன் காரமும், நெடியும் எடுக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இவ்வளவு சுவையாக இட்லி பொடி அரைத்தால், வீட்டிலேயே இட்லி பொடி பிசினஸ் ஸ்டார்ட் செஞ்சிரலாம். ஹோட்டல் ஸ்டெயிலில் இட்லி பொடி அரைப்பது எப்படி?

பிறகு பிரஷ்ஷாக இருக்கும் பெரிய கருவேப்பிலை கொத்தை போட்டு தாளித்து பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியையும் சேர்த்து ரெண்டு நிமிடம் கிண்டி விட வேண்டும். சட்னி சுருண்டு வர வேண்டிய அவசியம் இல்லை, எண்ணெய் முழுவதும் உறிந்து கொள்ளும் அளவிற்கு வதக்கினால் போதும், அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதாங்க, ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பூண்டு மிளகாய் கார சட்னி ரெசிபி மட்டும் இருந்தா 10 இட்லி கூட சலிக்காமல் சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க! இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -