இப்படியும் ஒரு சிவப்பு சட்னி செய்யலாமே! வித்தியாசமான முறையில் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள 2 சட்னி ரெசிபி உங்களுக்காக!

chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு ஒரே மாதிரி சட்னியை அரைப்பதை விட, கொஞ்சம் வித்தியாசமாக சட்னி அரைத்து வைத்தால் வீட்டில் இருப்பவர்கள் இரண்டு இட்லி தோசையை சேர்த்து விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் மிக மிக சுலபமான ஒரு சிவப்பு நிற தேங்காய் சட்னி எப்படி அரைப்பது, பச்சைநிற தேங்காய் சட்னியை எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

chutney

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அந்த கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, வரமிளகாய் – 6, இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பெருங்காயம் – 1/4 ஸ்பூன், 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து, ஒரு நிமிடம் போல வதக்கிக் கொடுத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பொருட்கள் அனைத்தும் சூடு நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி மொழுமொழுவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி ரொம்பவும் கட்டியாக இருக்கக்கூடாது. கிண்ணத்தில் எடித்து வைத்திருக்கும் சட்னியை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

verkadalai-chutney

ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த சட்னியின் மேலே கொட்டிக் கலந்து சுட சுட இட்லி தோசைக்கு மேல் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். பொதுவாக பொட்டுக்கடலை வரமிளகாய் சட்னியை தான் நாம் அரைப்போம் அல்லவா. பொட்டுக்கடலைக்கு பதில் இதில் கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சு இருக்கின்றோம். இதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

சரி, அடுத்த படியாக இந்த சிவப்பு சட்னிக்கு பக்கத்தில் ஒரு பச்சை சட்னி இருந்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா. சிம்பிள் கிரீன் சட்னி ரெசிபி யையும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிஞ்சுக்கலாம்.

chutney4

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் துருவிய தேங்காய் – 1/2 கப், பச்சை மிளகாய் – 3, வறுத்த வேர்க்கடலை – 4 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை – 4 ஸ்பூன், புதினா கொத்தமல்லி தழையும் சேர்த்து – 1/2 கைப்பிடி அளவு, பூண்டு – 2 பல், இஞ்சி சிறிய துண்டு, லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தால் வித்தியாசமான சுவையில் சூப்பரான க்ரீன் சட்னி தயார். இந்த சட்னிக்கு ஒரு தலைப்பு கொடுத்து இதை இட்லி தோசைக்கு தொட்டுக் கொண்டால் சூப்பராக இருக்கும். இரண்டு சட்னி ரெசிபியையும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

- Advertisement -