அடுப்பே பற்ற வைக்க வேண்டாம். சுலபமாக 5 நிமிடத்தில் செய்யக்கூடிய, 2 சட்னி ரெசிபி உங்களுக்காக.

chutney6
- Advertisement -

அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கக் கூட நேரமில்லை. ஐந்தே நிமிடத்தில் நாவிற்கு ருசியை தரும் 2 சட்டி ரெசிபிகளை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சட்னியை இட்லி தோசை சப்பாத்தி ஆப்பம் இவைகளுக்கு சைடிஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சின்ன வெங்காய சட்னியை அரைத்து தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம். சூப்பரா இருக்கும். சரி, நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

chutney5

முதலில் பச்சையாக சின்ன வெங்காயத்தை வைத்து ஒரு சட்னியை எப்படி அரைப்பது என்று தான் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் 15 லிருந்து 20 போட்டுக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக சிறிய துண்டு புளி, 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் உப்பு, சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் இதை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். சுவையான சின்ன வெங்காய சட்னி தயார்.

poondu-chutney1

இதை அப்படியே வழித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த சட்னி கெட்டியாக இருக்கவேண்டும். தண்ணி ஊத்திடாதீங்க. டேஸ்ட் மாறிடும். இதன் மேலே அப்படியே 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து சாப்பிட்டால் இட்லி தோசைக்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெய்யை கூட ஊற்றி சாப்பிடலாம். பச்சை வெங்காய வாடை கட்டாயமாக வீசும். இதற்கு கடுகு கறிவேப்பிலை உளுந்து வரமிளகாய் தாளிப்பு சேர்த்தும் பரிமாறிக்கொள்ளலாம். இதை துவையலாக அப்படியே தயிர் சாதத்திற்கு ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக நாம் பார்க்கப்போவது புதினா சட்னி. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் புதினா 1 கைப்பிடி, மல்லித்தழை 1 கைப்பிடி, இஞ்சி சிறிய துண்டு, பச்சை மிளகாய் 2, எலுமிச்சை பழச்சாறு 1 ஸ்பூன், பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இந்த சட்னியை மைய அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி அப்படியே பரிமாறலாம். (எலுமிச்சை பழம் வீட்டில் இல்லை என்றால் சிறிய துண்டு புலியையும் வைத்துக் கொள்ளலாம்.) தேவைப்பட்டால் இந்த சட்னிகும் ஒரு தாளிப்பு கொடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம்தான். காரசாரமான பச்சை சட்னி தயார்.

chutney7

மிஞ்சிப்போனால் இதில் ஒரு சட்னி செய்வதற்கு 10 நிமிடங்கள் கூட எடுக்காதது. மிக மிக சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த இரண்டு சட்னி ரெசிபி களையும் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -