மருதாணி இட்டுக் கொண்டால் உங்கள் கையிலும் செக்கச்செவேலென ரத்த சிவப்பு நிறத்தில் பளிச்சென இருக்க வேண்டுமா? அப்படின்னா இந்த சில பொருட்களையும் கலந்து பாருங்க! சிவக்காத கைகளிலும் கருமையாக சிவக்கும்.

maruthani-kirambu
- Advertisement -

மருதாணி இட்டுக் கொண்டால் ஒரு சிலருக்கு செக்கச் செவேலென சிவப்பு நிறத்தில் சிவக்கும். ஒரு சிலருக்கு அதற்கும் மேலாக நல்ல பிரவுன் நிறத்தில் சிவக்கும். இப்படி இருந்தால் தான் எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் செய்தாலும் மருதாணி இட்டுக் கொண்டால் கொஞ்சம் கூட சிவக்கவே செய்யாது. எவ்வளவு நேரம் காய விட்டாலும், கைகள் ஆரஞ்சு நிலத்திற்கு மேல் சிவக்கவே செய்யாது. இது போல ஆரஞ்சு நிறத்தில் சிவக்கும் கைகளுக்கு இந்த முறையில் மருதாணி தயாரித்தால் கொஞ்ச நேரம் வைத்தாலும், இரத்த சிவப்பு நிறத்தில் சூப்பராக சிவக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. மருதாணி தயாரிக்கும் முறை எப்படி? என்பதை இனி பார்ப்போம்.

முதலில் மருதாணி பவுடர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த முறைக்கு மருதாணி பவுடர் சேர்ப்பது நல்லது. அப்படி இல்லாவிட்டாலும் சாதாரண அரைத்த மருதாணி அல்லது கோன் மருதாணி பயன்படுத்தி கொள்ளலாம். மருதாணியுடன் சேர்க்க வேண்டிய முக்கிய பொருட்கள் இரண்டு செம்பருத்தி இலை ஆகும். இது பவுடர் வடிவத்தில் கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு முழு எலுமிச்சை பழம் அல்லது பாதி ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் செம்பருத்தி இலைகள் அல்லது பவுடர் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 10 கிராம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்கு கொதிக்க வையுங்கள். நல்ல சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொதித்து பாதி அளவிற்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

ஆறிய பின்பு இதை தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மருதாணியுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நீங்கள் மருதாணி பவுடர் எடுத்தால் தான் இதற்கு சரியாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் வடிகட்டி வைத்துள்ள தண்ணீரை சேர்க்க வேண்டும். மருதாணி பவுடருடன் இந்த தண்ணீரை சேர்த்து ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து அரைமணி நேரம் அப்படியே ஒரு பாலித்தீன் கவர் கொண்டு மூடி ஊற விட்டு விட வேண்டும்.

- Advertisement -

அரை மணி நேரத்திற்கு பிறகு இந்த மருதாணி கலவை கொஞ்சம் கெட்டியாக இருக்கும். இதை அழகாக கைகளில் நீங்கள் இட்டுக் கொண்டு பாருங்கள், அரை மணி நேரத்தில் ரத்த சிவப்பு நிறத்தில் செக்கச் செவேலென சிவக்க ஆரம்பிக்கும். ஒரிஜினல் மருதாணியே தோற்றுவிடும் அளவுக்கு உங்களுடைய கை அவ்வளவு அழகாக நேர்த்தியாக இருக்கும். இதை கோன் போல ஒரு பாலிதீன் கவரில் இட்டு கோன் மருதாணி நாமே தயாரித்து வைத்துக் கொண்டால் டிசைன் டிசைனாக எவ்வளவு டிசைன்களிலும் நாம் மருதாணி இட்டுக் கொள்ளலாம்.

சாதாரண மருதாணி இலையை காட்டிலும் இந்த மருதாணியின் நிறம் ரொம்பவே சிவப்பாக இருக்கும். அழிவதற்கும் நீண்ட நாட்கள் எடுக்கும் எனவே விசேஷம், விழா என்று வரும் பொழுது பெண்கள் இப்படி மருதாணி இட்டுக் கொள்ளலாம். இனி ஆரஞ்சு நிறத்தில் சிவக்கிறது என்று வருத்தப்பட வேண்டாம், உங்களுக்கும் செக்கச்செவேலென சிவக்கும்.

- Advertisement -