நீங்கள் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீடு, ஏதாவது பிரச்சனையால் பாதியிலேயே நின்று இருந்தாலும், கட்டிய வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தாலும், அதற்கு தீர்வு தரும் பரிகாரம்.

mantra-vastu-kumbam

நம்மில் பல பேருக்கு ஒரு வீடு கட்டி, அந்த வீட்டில் நிம்மதியாக குடி போக வேண்டும் என்பதுதான் கனவாகவே இருக்கும். எப்படியாவது அடித்துப்பிடித்து கடன் வாங்கி ஒரு வீட்டை கட்டுவதற்கு தொடங்குவோம். சில பேருக்கு, அந்த வீடு ஏதாவது ஒரு காரணத்தினால், கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் வேலைப்பாடுகள் பாதியிலேயே நின்று இருக்கும். சிலபேர் வீட்டை முழுதாக கட்டி, குடியும் போய் விடுவார்கள். ஆனால் வாஸ்து பிரச்சினையால் அவதிப்பட்டு வருவார்கள். இவ்வாறாக இந்த இரண்டு பிரச்சனையில் உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்காக, நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வாருங்கள்.

vastu 1

வாஸ்து பகவானை வேண்டி செய்ய வேண்டிய பூஜை இது. உங்களுடைய வீட்டில் வாஸ்து பகவானின் படம் இருந்தால் அந்த படத்தின் முன்பு இந்த பூஜையை செய்யலாம். எல்லோரது வீட்டிலும் வாஸ்து பகவானின் திருவுருவ படம் இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. உங்களுடைய வீட்டில் மகாவிஷ்ணுவின் திருவுருவப்படம் இருந்தால் கூட, இந்த பூஜையை அந்த படத்தின் முன்பு செய்யலாம். எதுவுமே இல்லை என்றால், வாஸ்து பகவானை ஜோதி வடிவமாக பாவித்துக் கொண்டு, இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்யுங்கள்.

காலை 6 மணி அளவில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்தபடியாக நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் முன்பாக வெற்றிலை, பாக்கு, ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து கொள்ள வேண்டும். உங்களுடைய பிரச்சனை என்னவோ அதை, வாஸ்து பகவானிடம் மனதார, ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும்.

vasthu

பாதியிலேயே கட்டியிருக்கும் வீடு விரைவாக, முழுமையாக கட்டி முடிக்கப்பட வேண்டும் அல்லது கட்டிய வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து பிரச்சனைகள் நிறைவேற வேண்டுமா என்பது உங்களுடைய பிரார்த்தனை தான். ஆத்மார்த்தமாக இந்த வேண்டுதலை வைத்துவிட்டு பின் வரும் மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் மட்டும் போதும். உங்களுக்கான வாஸ்து புருஷ மந்திரம் இதோ!

- Advertisement -

கரஹ நிர்மாண சஹாத்யாய நமஹ!

house

இந்த மந்திரத்தை சொந்த வீடு இல்லாதவர்கள் கூட உச்சரித்து, கிரக பகவானை நினைத்து பூஜை செய்தால், கூடிய விரைவில் சொந்த வீடு கிடைக்கும் யோகம் கூட வந்து விடும்‌. தினமும் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள், வாரத்தில் ஒருநாள் உங்களுக்கு எந்த கிழமை முடியுமோ அந்த கிழமையை தேர்ந்தெடுத்து, பூஜையை தொடர்ந்து செய்து வரலாம். அல்லது வாரம் தோறும் செய்யும் வெள்ளிக்கிழமை பூஜையோடு, சேர்த்து இந்த மந்திரத்தைச் சொல்லி பூஜைய செய்து விடுங்கள்.

vasakkal-poojai

பூஜையில் வைத்திருக்கும் வெற்றிலை பாக்கு எலுமிச்சை பழத்தை, பூஜை முடிந்தவுடன் மறுநாள் காலை எடுத்து கால் படாத இடங்களில் போட்டு விடுங்கள். அதாவது பூமாதேவிக்கு சமர்ப்பணம் செய்து விட வேண்டும். இதேபோல் உங்களுடைய வீட்டில், கட்டிய வீட்டை இடித்து தான் வாஸ்துவை சரி பண்ண வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும்.

vasthu

எல்லோராலும் எடுத்த உடனேயே கட்டிய வீட்டை இடித்து சரி செய்ய முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில், சிறிய அளவிலான கண்ணாடி கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி, ஒரு ஸ்படிக லிங்கத்தை அதனுள் வைத்து விட்டால், வாஸ்துவினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், நம்மைத் தாக்காமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
கணவன் மனைவி பிரச்சினைகள் வர வீட்டில் இருக்கும் இந்த செடியும் ஒரு காரணமாக இருக்கலாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.